மாத்திரைகள் இன்றி ஆழ்ந்த உறக்கம் பெற உதவும் இயற்கை வழிகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய கணினிவாழ் மக்கள் பலரும் தங்களிடம் இல்லை என்று தவிக்கும் இரண்டு விஷயங்கள் நிம்மதியும், உறக்கமும் தான். உறக்கம் இல்லாததே பெருமளவு இவர்களது நிம்மது சீர்கெட காரணமாகிவிடுகிறது. எனவே, இங்கு இவர்களது முக்கிய தவிப்பும், பிரச்சனையும் உறக்கமாக தான் இருக்கிறது.

உறக்கம் இல்லை என்றால் உடனே மருத்துவர்களின் கை, கால்களில் விழுந்தாவது தூக்க மாத்திரை வாங்கிக் கொள்கிறார்கள் மக்கள். தூக்க மாத்திரைகள் கொஞ்சம், கொஞ்சமாக உங்களை மந்தமாக்கிவிடும் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. சில எளிய விஷயங்களை நீங்கள் பின்பற்றி வந்தாலே ஆழ்ந்த உறக்கத்தை பெற முடியும்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரே நேரத்தில் உறங்குவது

ஒரே நேரத்தில் உறங்குவது

தினமும் ஒரே நேரத்திற்கு உறங்க செல்வதை பழக்கப்படுதுங்கள். இது, உங்கள் உறக்கத்தின் சுழற்சியை சீராக்கி இயற்கையாகவே நீங்கள் ஆழ்ந்தஉறக்கத்தை பெற உதவும்.

பாலும் பழமும்

பாலும் பழமும்

நீங்கள் உறங்குவதற்கு முன்பு வெதுவெதுப்பான பாலும், ஓர் வாழைப்பழமும் சாப்பிட்டுவிட்டு உறங்க செல்லுங்கள். இவற்றின் மூலம் உறக்கத்திற்கான ஹார்மோன் மெலடோனின் சிறந்து செயல்படுகிறது. மேலும் பாலில் இருக்கும் டிரிப்டோபென் நல்ல உறக்கத்தை தரவல்லது.

இரவு உணவு

இரவு உணவு

உறவு நேரத்தில் செரிமானத்திற்கு குறைவான நேரம் எடுத்துக் கொள்ளும் வகையிலான உணவுகளை உட்கொள்ளுங்கள். கடினமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதே போல, உறங்க செல்வதற்கு மூன்று மணிநேரம் முன்னரே இரவு உணவை முடித்துவிட வேண்டும்.

குட்டி தூக்கம்

குட்டி தூக்கம்

பகல் நேரத்தில் குட்டி உறக்கம் போடுவதை நிறுத்துங்கள். இதனால் பெரும்பாலும் இரவு நேர உறக்கம் தடைப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

குளியல்

குளியல்

வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டு உறங்க செல்வது இயற்கையான முறையில் நல்ல உறக்கத்தை தரும். வெதுவெதுப்பான நீரில் குளிப்பது தசைகள் இலகுவாக உணர உதவுகிறது.

காபி வேண்டாம்

காபி வேண்டாம்

சிலர் இரவு உணவு முடித்த பிறகும் கூட காபி குடிப்பார்கள். இது உறக்கத்தை கெடுக்கும் பழக்கமாகும். உறங்க செல்வதற்கு ஐந்து மணி நேரத்திற்கு முன்பே காபி குடிப்பதை தவிர்த்துவிட வேண்டும்.

மூலிகை டீ

மூலிகை டீ

காபி போன்றவற்றை தவிர்த்துவிட்டு மூலிகை டீ குடிக்க ஆரம்பியுங்கள். இவை உறக்கத்தை ஊக்குவிக்கும் தன்மை உடையவை ஆகும்.

குளுமையான அறை

குளுமையான அறை

நீங்கள் உறங்கும் அறை இருட்டாகவும், அமைதியாகவும், குளுமையாகவும் இருக்கும் சூழலுக்கு கொண்டு வாருங்கள். இவை உடலில் வெப்பத்தை அதிகரிக்க விடாமல் நல்ல உறக்கத்தை இயற்கையான முறையில் தரவல்லது ஆகும்.

மின்னணு உபகரணங்கள்

மின்னணு உபகரணங்கள்

முடிந்த வரை டிவி, கணினி, மொபைல், லேப்டாப் போன்ற மின்னணு உபகரணங்களை உறங்கும் அறையில் வைத்திருக்காதீர்கள். இவை அனைத்தும் உங்கள் உறக்கத்தை கெடுப்பவை ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural Ways to Get Deep Sleep Without Pills

Stop using pills to get deep sleep. There are some naturals ways to get the better result.
Story first published: Wednesday, January 20, 2016, 15:44 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter