For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

65 % தற்கொலையில் ஈடுபடுவது ஆண்கள்-ஆய்வு!! எதனால்?

|

தேசிய ஆண்கள் நல கூட்டமைப்பு நடத்திய விழா ஒன்றில் ஆண்களின் மன மற்றும் உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு இந்த மாதம் ஜூன் 13-19 ம் தேதி வரை நடைபெற்றது.

இதில் தெரியவந்தது யாதெனில், இந்தியாவில் தற்கொலையில் ஈடுபடுபவர்களில் 65% ஆண்களே. அவற்றில் 44% திருமண விவகாரம், குடும்ப பிரச்சனைகள், மற்றும் நோய்கள் காரணம் என ஆய்வு கூறுகின்றது.

Mental stress leads to suicide for men

இக்காலகட்டங்களில் வேலை மற்றும் பொருளாதார ரீதியில் மன அழுத்தம் என்பது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஏற்படும் தவிர்க்க இயலாத ஒன்று. பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் உடலியல் சார்ந்த ஹார்மோன் மாற்றங்களால்தான் அதிகம் ஏற்படுகிறது.

ஆனால் ஆண்களுக்கு மன அழுத்தம் வெவ்வேறு வகைகளில் ஏற்படுகிறது. குடும்பத்தில் மன வேறுபாடு, பொருளாதர பிரச்சனைகளை நிவர்த்தி செய்தல், அலுவலகத்தில் வேலைப்பளு, என நான்கு புறமும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியது உள்ளதால் மன அழுத்ததிற்கு உட்படுகின்றனர்.

ஐ.டி. இளைஞர்களுக்கே அதிகம் பாதிப்பு :

எல்லாராலும் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் ஒரு நேரத்தில் தற்கொலைக்கு உட்படுகின்றனர். முக்கியமாய் இந்தியாவில், 42 சதவீதம் கார்ப்பரேட் வேலை செய்யும் ஆண்களே தீவிர மன அழுத்தத்திற்கு ஆளாகி, தற்கொலை முடிவினை எடுக்கிறார்கள் என்பது வருத்தம் தரக்கூடிய விஷயம்.

மன அழுத்தத்தின் அறிகுறிகள் :

தீவிர மன அழுத்தம் உண்டாகும்போது, எப்போது, நிம்மியதியில்லாமல் எல்லாரிடமும் எரிந்து விழுவது, பதட்டத்துடன் காணப்படுவது, தனிமையிலேயே இருப்பது, எதிலும் கவனமில்லாமல் இருப்பது, உடலுறவில் நாட்டமில்லாமல் இருப்பது என இருப்பார்கள்.

அதிக அளவு மன அழுத்தம் இருக்கும்போது, டெஸ்டோஸ்டிரான் குறைவாக சுரக்கும். இது குழந்தைப் பேறினையும் பாதிக்கும்.

மன அழுத்தம் என்பது எதனால் எற்படுகிறது?

வேலை மற்றும் எதிர்ப்பார்ப்புகளால் வரும் மன அழுத்தம் :

வேலை தொடர்பாக முக்கியமாய் ஐடி யில் வேலைசெய்யும் இளைஞர்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்க வேண்டிய கட்டாயம், குறைவான நேரத்தில் அதிக வேலைப்பளு, இரவு பகல் வேலைகளை செய்வது என இவர்கள் நிறைய பாதிக்கப்படுகிறார்கள்.

பெங்களூர் மற்றும் டெல்லியில் உள்ள மனோதத்துவ நிபுணர்கள் , தங்களிடம் வரும்பவர்களில் பாதிக்கு பாதி பேர் மென்பொறியாளர்கள் என்று கூறுகின்றனர்.

பொருளாதரா பிரச்சனையை சமாளித்தல் :

பொருளாதார ரீதியில் பெண்களை விட ஆண்களுக்கே சமாளிக்க வேண்டிய சூழ்நிலை அதிகம். வீட்டு லோன், குடும்ப செலவுகள், பங்கு சந்தை நஷ்டம், வியாபரத்தில் ஈடுகட்டும் நிலைமை என பல்வேறு கடுமையான பொருளாதார சூழ் நிலைகளை ஆண்கள் கையாளுகிறார்கள். இது சில சமயங்களில் தற்கொலைக்கு கொண்டு போய்விடுவது கவலை அளிக்கக் கூடியதுதான்.

எப்படி இந்த பிரச்சனைகளை கையாளுவது?

வெளிப்படையாக இருங்கள் :

எல்லாமே உங்கள் தலையில் இழுத்து போட்டுக் கொண்டு, புலம்புவதை தவிர்த்து, மனம் விட்டு உங்கள் குடும்பத்தினரிடம் பேசுங்கள். உங்களால் முடியாதவற்றை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். பொருளாதார ரீதியில் உங்கள் மனைவியையும் கொஞ்சம் பாரத்தை பகிரச் சொல்லலாம்.

மனம் விட்டு அழுங்கள் :

அழுவது என்பது ஆறறிவு படைத்தவர்களுக்கு உண்டான உணர்வு. அது கோபம், புன்னகையைப் போல மற்றோர் உணர்வு அவ்வளவுதான். அதை ஆண்கள் செய்யக் கூடாது என்ற தவறான எண்ணத்தை உண்டாக்கிவிட்டார்கள். அழுவது தவறல்ல. மனதிற்குள் புதைத்து புதைத்து நிம்மதியில்லாமல் இருப்பதை விட, வாய்விட்டு அழுதுவிடுங்கள். இவை உங்கள் பிரச்சனைகளுக்கு வடிகாலாக இருக்கும். மனம் லேசாகும்.

விருப்பமானதை செய்யுங்கள் :

உங்களுக்கு பிடித்தமானதை செய்தால், மன அழுத்தம் குறையும் என ஆய்வுகள் நிறைய கூறுகின்றது. பாட்டு கேட்பது, பிரயாணம் செய்வது, குடும்பத்துடன் மகிழ்ச்சியான பொழுதுகளை கழிப்பது, என நீங்கள் எப்படி இருக்க ஆசைப்படுகிறீர்களோ அப்படி இருங்கள்.

முக்கியமாய் உங்கள் குடும்பத்தினரிடம் இப்படிதான் இருக்க வேண்டும் என கட்டளை போடாதீர்கள். அதுதான் குடும்ப வாழ்க்கையை சீர்குலைக்கும். நீங்களும் நீங்களாக இருங்கள். அவர்களையும் இருக்க விடுங்கள்.

தற்கொலை கோழைத்தனமானது. வாழ்க்கையின் பிரச்சனைகளை ஒவ்வொரு நொடியையும் தைரியமாய் எதிர்கொள்ளுங்கள். ஒரு நாள் உங்களிடம் வாழ்வு பணியும்.

English summary

Mental stress leads to suicide for men

Mental stress leads to suicide for men
Desktop Bottom Promotion