மன உளைச்சலை குணப்படுத்தும் மார்ஜாரியாசனா !!

Written By:
Subscribe to Boldsky

மன உளைச்சல் பலவிதங்களில் இன்று மனிதர்களை தாக்குகிறது. போட்டி நிறைந்த சூழ் நிலையில் உங்களை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிகளும் கடின உழைப்பும் தேவைதான்.

அதே சமயம் அதனால் உண்டாகும் மன அழுத்தத்தை கண்டு கொள்ளாமல் விட்டால் அது உங்களையே முடக்கிவிடும்.

Marjariasana to relieve from Stress

மன அழுத்தத்தை எப்படி குணப்படுத்தலாம். சந்தேகமில்லை. யோகாவினால் முடியும். யோகா மன அமைதியையும் , தீர்க்கமான செயலாக்கத்தையும் தர உதவும்.அதனை பற்றி விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மார்ஜாரியாசனா :

மார்ஜாரியாசனா :

மார்ஜாரியாசனா பூனையை போன்ற நிலையில் செய்யப்படுவதாகும். இது மன அழுத்தத்திற்கு சிறந்த யோகாவாக விளங்குகிறது. அதனை எப்படி செய்வது என பார்க்கலாம்.

செய்முறை :

செய்முறை :

முதலில் தரையில் முட்டி போட்டு அமருங்கள். நேராக நிமிர்ந்து அமர வேண்டும். மெதுவாக மூச்சைவிட்டபடி தொடருங்கள்.

செய்முறை :

செய்முறை :

பின்னர் முட்டி போட்ட நிலையிலேயே முன்னோக்கி வளைந்து கைகளை தரையில் பதிக்கவும். இரண்டு கால்களையும் சிறிது இடைவெளி விட்டு வைக்கவும்.

தலையை நன்றாக குனியுங்கள். தொங்க விடுவது போல் தலையை வைக்கவும். தோள்பட்டைகளை நேராக வைத்திருக்கவும்.

முதுகை நன்றாக வளைக்க வேண்டும். சில நொடிகள் இருந்துவிட்டு மீண்டும் இதே போல் 5 முறை செய்யவும்.

நன்மைகள் :

நன்மைகள் :

முதுகுத் தண்டிற்கு பலம் தரும். ஸ்பாண்டைலிடிஸ் பிரச்சனைக்கு தீர்வு தரும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

குறிப்பு :

குறிப்பு :

தலையில் சமீபமாக அடிப்பட்டவர்கள் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது. அதோடு நல்ல பயிற்சியாளரின் உதவியுடன் இந்த ஆசனத்தை செய்வதால் நல்ல பலன் உடனடியாக கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Marjariasana to relieve from Stress

Marjariasana is the perfect yoga to get relief from Stress
Story first published: Monday, November 7, 2016, 16:00 [IST]
Subscribe Newsletter