For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெகு நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை பார்க்கிறீர்களா பெண்களே? இது ஆபத்து!!

|

வாரத்தில் 60 மணி நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கு சர்க்கரை வியாதி, புற்று நோய், ஆர்த்ரைடிஸ் தாக்கும் அபாயம் இருப்பதாக கனடா நாட்டின் ஒஹியோ ஸ்டேட் பல்கலைக் கழகம் செய்த ஆய்வு தெரிவிக்கின்றது.

பெண்கள் குறிப்பாக பல்வேறு நெருக்கடியான வேலைகளை தினமும் பார்ப்பவர்களுக்கு நாளுக்கு நாள் டென்ஷன், மனச் சோர்வு ஏற்படும். வாரத்திற்கு 40 மணி நேரம் என்பதை அதிகரித்து வேலைப் பளு காரணமாக 60 மணி நேரம் வரை அதிகரிப்பதுண்டு.

Long work hours leads to threatening diseases for women

வாரத்திற்கு 60 மணி நேரம் மற்றும் அதற்கும் மேல் வேலை செய்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது என ஆய்வறிக்கை கூறுகின்றது.

பெண்களின் 20, 30, 40 வயதுகளில் நெருக்கடியான வேலை சூழலில் ஈடுபட்டால், பின்னாளில் 50 வயதுகளில் உடல்நிலை பாதிப்பு ஏற்படும் .

புற்று நோய், ஆர்த்ரைடிஸ், இதய நோய்கள், சர்க்கரை வியாதி ஆகியவை உண்டாகும் அபாயம் உள்ளது என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட தலைமை ஆராய்ச்சியாளர் அல்லார்ட் டெம்ப் கூறுகிறார்.

ஆண்களும் இதே போன்று 60 மணி நேரம் வேலைப் பார்த்தாலும் அவர்களின் வாழ்க்கை முறை பெண்களைக் காட்டிலும் எளிதாகவே உள்ளது. ஆகவே எளிதில் அவர்களுக்கு நோய்கள் தாக்குவதில்லை.

பெண்களுக்கு வீடு, குடும்பம் அலுவலகம் என எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டிய சூழ் நிலைகள் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு வேலை செய்யும் இடங்களிலும் திருப்தியற்ற சூழ் நிலை உண்டாவது தடுக்க இயலாது. இதனால் பெண்களின் உடல் நலம் அதிகமாய் பாதிப்படைந்து எளிதில் நோய்களை உண்டாக்கும்.

குடும்பத்திலுள்ள எல்லாருடைய ஆரோக்கியத்தை பார்த்து பார்த்து, காப்பவள் பெண்தான். அவளுக்கு நோய்கள் வராமல் பாதுகாப்பது, அந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் கடமை.

பெண்களும் எல்லாவற்றையும் இழுத்து போட்டு செய்வதை தவிருங்கள். நீங்கள்தான் நாட்டின் கண்கள்.

English summary

Long work hours leads to threatening diseases for women

Long work hours leads to threatening diseases for women
Story first published: Tuesday, June 21, 2016, 14:58 [IST]
Desktop Bottom Promotion