நீச்சல் குளத்தில் குளித்த பின் கண்கள் சிவப்பது குளோரினால் அல்ல, வேறு எதனால் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஸ்விம்மிங் பூலில் குளித்த பிறகு கண்கள் ஏன் சிவக்கின்றன என்று கேட்டால், நீரில் கலக்கப்படும் குளோரின் என்று தான் அனைவரும் கூறுவார்கள். இதை தான் நாமும் நம்பி வந்தோம். ஆனால், அது குளோரினால் அல்ல, மனிதர்களின் சிறுநீரால் என்று கூறி அதிர்ச்சியளிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

It's Not The Chlorine In Swimming Pools That Makes Your Eyes Turn Red It's Human Urine

நீரில் குளோரின் கலப்பதால், அதில் இருக்கும் கிருமிகள் அளிக்கப்பட்டு சரும எரிச்சல், காதுகளில் தொற்று, வயிற்றுப்போக்கு எல்லாம் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. பிறகு எப்படி கண்களில் மட்டும் எரிச்சல் ஏற்படுகிறது என்று பார்த்தல், நீச்சல் குளத்தில் குளிக்கும் சிலர் சிறுநீர் கழிப்பதால் தான் இது ஏற்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

It's Not The Chlorine In Swimming Pools That Makes Your Eyes Turn Red It's Human Urine

சிறுநீர் மட்டுமின்றி அதிகமானோர் உடலில் இருந்து வெளிப்படும் வியர்வையும் கூட கண்கள் சிவப்பதற்கும், எரிச்சல் ஏற்படுவதற்கும் முக்கிய காரணியாக இருக்கிறது. நீங்கள் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது கண்களில் எரிச்சல் ஏற்படுகிறது எனில், அந்த நீரில் சிறுநீர் அல்லது அளவுக்கு அதிகமாக வியர்வை கலந்துள்ளது என்று பொருள். எனவே, உடனடியாக அந்த நீரை மாற்ற வேண்டியது அவசியம்.

It's Not The Chlorine In Swimming Pools That Makes Your Eyes Turn Red It's Human Urine

வீட்டில் தனியாக நாம் பயன்படுத்தும் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது ஏற்படுவதை விட, பொது நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்களில் நாம் விளையாடும் நீச்சல் குளங்களில் குளிக்கும் போது தான் கண்ணெரிச்சல் அதிகமாக ஏற்படுகிறது. இதற்கு காரணம், அங்கு வருவோர் அவர்களுக்கே தெரிந்தும், தெரியாமலும் சிறுநீர் கழிப்பது, மற்றும் கட்டுபடுத்த முடியாத வியர்வை கலப்பதால் தான்.

It's Not The Chlorine In Swimming Pools That Makes Your Eyes Turn Red It's Human Urine

அடுத்த முறை நீங்கள் தனியார் ஹோட்டல் அல்லது கேளிக்கை பூங்காக்களில் இது போன்ற சூழ்நிலையை சந்திக்க நேர்ந்தால், உடனே மேலாளரிடம் கூறி, நீச்சல் குளத்தின் நீரை மாற்ற அறிவுரைக்க மறக்க வேண்டாம்.

English summary

It's Not The Chlorine In Swimming Pools That Makes Your Eyes Turn Red It's Human Urine

It's Not The Chlorine In Swimming Pools That Makes Your Eyes Turn Red It's Human Urine.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter