For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செல்ஃபோனால் புற்றுநோய் வருமா?

செல்ஃபோனிலிருந்து வரும் கதிர்வீச்சுக்களுக்கும், புற்று நோய்க்கும் பலமான தொடர்பு உள்ளது என பல்வேறு மருத்துவ விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.

|

செல்ஃபோனிலிருந்து வரும் கதிர்வீச்சுக்களுக்கும், புற்று நோய்க்கும் பலமான தொடர்பு உள்ளது என பல்வேறு மருத்துவ விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.

அலைபேசியிலுருந்து வரும் கதிர்வீச்சு மூளையில் புற்று நோயை உண்டாக்கும் என்றும் குழந்தைகள் தொடர்ந்து இந்த கதிர்வீச்சில் தாக்கப்பட்டால் லுக்கீமியா வருவதற்கு சாத்தியங்கள் உள்ளன எனவும் பகீர் ரிப்போர்ட்டுகள் வருகின்றன.

Impact of mobile phone radiations

செல்ஃபோன் நமது உடலில் ஒரு அங்கமாகிவிட்டது. மூன்றாவது கை போலதான் நம்முடன் இருக்கிறது. சாப்பிடும்போது, நடக்கும்போது, தூங்கும்போது ஏன் டாய்லெட்டிற்கும் கூட நம்மாட்கள் எடுத்துப் போவதுண்டு.

ஆனால் அது தரும் சுவாரஸ்யத்தில், அதனால் உண்டாகும் பாதிப்புகளை மறந்துவிடுகிறோம். கூடிய வரைக்கும் செல்ஃபோன் கதிர்வீச்சுகளிலிருந்து எப்படி நம்மை பாதுகாக்க்லாம் என்பதற்காகத்தான் இந்த கட்டுரை. தொடர்ந்து படியுங்கள்.

ஹெட்செட் மாட்டிக் கொள்ளுங்கள்.

மொபைலை நேரடியாக உபயோகப்படுத்தாமல், ஹெட் செட்டின் மூலமாக பேசுங்கள், பாட்டு கேளுங்கள். உடலிலிருந்து குறைந்த பட்சம் தூரமாவது தள்ளியிருக்க வேண்டும். கையிலேயே வைத்திருக்க வேண்டாம். முக்கியமாய் அதிக நேரம் காதில் வைத்து பேசுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

எப்போதும் வாட்ஸ்- அப், ஃபேஸ்புக் :

எப்போது கையில் வைத்து நோண்டி கொண்டிருக்காதீர்கள். இது உங்கள் பிள்ளைகளையும் அதேபோல செய்யத் தூண்டும். இந்த நேரம் வாட்ஸ் அப் பார்க்க வேண்டும். இந்த நேரத்தில் சமூக வலைதளங்கள் பார்க்க வேண்டும் என கால அட்டவணை போட்டுக் கொள்ளுங்கள். இதேல்லாம் சாத்தியப்படுமா என யோசிக்காதீர்கள். செஃபோனில்லாமல்தானே 10 வருடங்கள் முன்பு இருந்தீர்கள்.

உங்களுக்கு மனோதத்துவ முறையில் இன்னொரு யோசனை. உங்களிடம் இப்போது செல்ஃபோன் இல்லையென நினைத்துக் கொள்ளுங்கள். அதன்படியே மற்ற வேலைகளில் கவனம் தொடருங்கள்.

ஏதாவது அழைப்பு வந்தால் அல்லது பேச வேண்டிய கட்டாயத்தில் மட்டும் பேசி விட்டு அதனை ஒரு இடத்தில் வைத்து மறந்துவிடுங்கள். இப்படி ஒருவாரம் செய்து பாருங்கள். அதன் அடிமையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவீர்கள்.

உடைகளில் வைக்காதீர்கள்:

பேன்ட் பாக்கெட்டிலோ, சர்ட் பாக்கெட்டிலோ செல்ஃபோனை வைப்பது நல்லதல்ல. இவை இதயத்தையும் , இனப்பெருக்க உறுப்புகளை பாதிக்கும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

உடலில் ப்ளேட் உள்ளதா?

எலும்பு முறிவிற்கு நீங்கள் ப்ளேட் வைத்திருந்தால் கவனமாக செல்ஃபோனை கையால வேண்டும்.முக்கியமக ஹேர் கட் செய்யும்போது, குளிக்கும்போது அல்லது நீர் நிலைகளில் ஃபோனை அருகில் வைத்திருக்க வேண்டால். ஏனெனில் உங்கள் உடலிலிருக்கும் இரும்பு ப்ளேட் கதிர்வீச்சினை நேரடியாக கடத்தும் தன்மைவாய்ந்தவை. ஆபத்து நிறைந்தது.

அளவோடு இருந்தால் எதுவும் தப்பு கிடையாது. ஆனால் அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சு என நம் பெரியவர்கள் எதையும் பேச்சுக்காக சொல்லவில்லை. ஆகவே அலைபேசியை அளவோடு உபயோகித்து, வளமோடு வாழுங்கள்.

English summary

Impact of mobile phone radiations

Impact of mobile phone radiations
Desktop Bottom Promotion