குளிர்கால நோய்களிடமிருந்து உங்களை எப்படி காத்துக் கொள்வீர்கள் ?

Posted By: Hemalatha V
Subscribe to Boldsky

குளிர்கால பருவ நிலை வந்தால் கிருமிகளுக்கு கொண்டாட்டம்தான். இவைகள் இந்த ஈரப்பத்தில்தான் பெருகும். நோய்களை அதிக அளவு உற்பத்தி செய்யும்.

காய்ச்சல், ஜலதோஷம், அஜீரணம், குமட்டல் ஆகியவை குளிர் மற்றும் மழைக் காலங்களில் தாக்கும் பொதுவான பிரச்சனைகள். நம் உடலில் எதிர்ப்பு சக்தி இருந்தாலும், இவற்றின் ஆதிக்கத்தை தவிர்க்க இயலாது.

அவ்வாறு வரும் சிறு சிறு நோய்களுக்கும் ஆன்டிபயாடிக் சாப்பிட்டு, உங்கள் வெள்ளை அணுக்களை சோம்பேறி செய்து விட வேண்டாம். பிற்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, முழுமையாக ஆன்டிபயாடிக் நம்பியே இருக்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டுவிடும். ஆகவே நோய்கள் வந்தால் இயற்கையான வழிகளில் நாம் என்ன செய்ய வேண்டும் என காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜலதோஷம் காய்ச்சல் ;

ஜலதோஷம் காய்ச்சல் ;

இது எல்லாருக்கும் வரக் கூடிய சாதரணம நோய், தினமும் பாலில், மிளகுத் தூள் மற்றும் மஞ்சளை சேர்த்து குடிக்க வேண்டும். முதலில் உங்களுக்கு அதன் பலன் முழுமையாக இல்லாவிட்டாலும், நாளடைவில் எதிர்ப்பு திறன் அதிகரித்து, விரைவில் ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் விலகும். சுடு நீரில் மஞ்சள் கலந்து ஆவி பிடித்தாலும் நல்ல பலன் தரும்.

நெஞ்செரிச்சல் :

நெஞ்செரிச்சல் :

குளிர்காலத்தில் ஜீரண என்சைம்கள் சரியாக வேலை செய்யாததால், அஜீரணம், நெஞ்செரிச்சல் ஏற்படும். அப்போது இஞ்சிச் சாறு அல்லது எலுமிச்சை சாறு குடித்தால் அற்புதமான பலனைத் தரும். பழங்கால மருத்துவ முறை இது.

வயிற்று வலி :

வயிற்று வலி :

வயிற்று வலி ஏற்பட , சூடு, கிருமித் தொற்று, அல்லது வாய்வு , என காரணம் எதுவாகவும் இருக்கலாம். அப்போது, திரிபலா சூரணத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், வயிற்று வலி சரியாகும். மேலும் நிறைய நீர் குடிக்கவும். பழங்கள் சாப்பிடவும். ஏனெனில் மலச்சிக்கலாலும் வலி உண்டாகலாம்.

முகப்பருக்கள் :

முகப்பருக்கள் :

முகப்பருக்கள் குளிர்காலத்திலும் பாக்டீரியாக்களின் தொற்றுக்களால் ஏற்படும். அந்த சமயங்களில் எண்ணெய் பதார்த்தங்கள், சூடு தரும் உணவுகளைத் தவிர்க்கவும். வேப்பிலையை அரைத்து முகப்பருக்கள் இருக்கும் இடத்தில் போட்டால் அவை இருந்த இடமே தெரியாமல் மறைந்துவிடும்.

குமட்டல் :

குமட்டல் :

வயிற்றில் ஏதாவது பிரச்சனைகள் உண்டானால் அது குமட்டலாக நமக்கு பிரதிபலிக்கும். அஜீரணம் அல்லது ஃபுட் பாய்ஸனாக இருக்கலாம். அந்த சமயங்களில் எலுமிச்சை ஜூஸில், தேன் மற்றும் இஞ்சி கலந்து குடித்தால், அவை விஷத்தன்மையை முறித்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to protect yourself from common diseases

How to protect yourself from common diseases,
Please Wait while comments are loading...
Subscribe Newsletter