Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் பெறும் நன்மைகள்!
முக்கனிகளுக்கு ஒன்றான வாழையின் அனைத்துப் பகுதிகளும் பெரிதும் பயனுள்ளதாக உள்ளன. அதில் வாழைப்பழம், வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்துமே சாப்பிடுவதற்கு உகந்ததாக இருப்பதோடு, ஒவ்வொன்றிலும் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன.
தினம் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
இப்போது நாம் அதில் வாழைப்பூவின் மகிமைகள் குறித்து தான் பார்க்கப் போகிறோம். பொதுவாக வாழைப்பூவை அதிகம் வாங்கி சமைக்கமாட்டார்கள். ஏனெனில் இதனை சுத்தம் செய்ய நீண்ட நேரம் ஆகும் என்பதால் தான். ஆனால் உண்மையில் இதனை அடிக்கடி சமைத்து உட்கொள்வது மிகவும் நல்லது.
வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!
இங்கு அந்த வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் பெறும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

வயிறு பிரச்சனைகள் நீங்கும்
வாழைப்பழத்தைப் போன்றே வாழைப்பூவிலும் நார்ச்சத்து வளமான அளவில் நிறைந்துள்ளது. இதனால் இவற்றை உணவில் அடிக்கடி சேர்க்கும் போது, செரிமான பிரச்சனைகள், குடலியக்க பிரச்சனைகள், மலச்சிக்கல் போன்றவை தடுக்கப்படும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்
வாழைப்பூவில் பாலிஃபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள செல்களைப் பாதிக்கும் ப்ரீ-ராடிக்கல்களில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.

நீரிழிவு
வாழைப்பூவில் கிளைசீமிக்-இன்டெக்ஸ் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாகவும்உள்ளதால், இவை இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரித்து, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் பராமரிக்க உதவும்.

வயிற்றுப் போக்கு
ஆசிய ஜர்னல் மருந்து மற்றும் மருத்துவ ஆராய்ச்சியில், வாழைப்பூ வயிற்றுப் போக்கை குணமாக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது.

மாதவிடாய் பிரச்சனைகள்
வாழைப்பூவை உட்கொண்டு வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு பிரச்சனைக்கு நல்ல சிகிச்சையாக இருக்கும்.

இரத்த சோகை
உணவில் வாழைப்பூவை அதிகம் சேர்த்து வருவதன் மூலம், உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம். ஆகவே உங்களுக்கு இரத்த சோகை இருப்பின் வாழைப்பூவை உணவில் சேர்த்து வாருங்கள்.

மனநிலையை மேம்படுத்தும்
வாழைப்பூவில் உள்ள மக்னீசியம், மனக்கவலையைக் குறைத்து, மன நிலையை மேம்படுத்தும். ஆகவே உங்களுக்கு மனம் சரியில்லையெனில், வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.

தாய்ப்பால் அதிகரிக்கும்
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு போதிய அளவில் தாய்ப்பால் உற்பத்தி ஆகவில்லை என்றால், வாழைப்பூவை உணவில் அடிக்கடி சேர்த்து வர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications
