For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலுமிச்சையை ஃபீரிசரில் வெச்சு சாப்பிடலாமா?... சாப்பிட்டா என்ன நடக்கும்னு தெரியுமா?

உறைந்த எலுமிச்சைக்கும் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளதாக அறியப்படுகிறது. இது நம்முடைய உடலில் பல அற்புதங்களைச் செய்கிறது.

By Ambika Saravanan
|

எலுமிச்சையின் மருத்துவ நன்மைகளைப் பற்றி பல பதிவுகளில் பார்த்திருக்கிறோம். மேலும், எலுமிச்சை சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் பருகுவதின் நன்மைகளையும் நாம் பல்வேறு பதிவுகளில் பார்த்திருக்கிறோம். இந்த பதிவும் எலுமிச்சையைப் பற்றியது தான். ஆனால் ஒரு சிறு மாற்றம். இது உறைய வைத்த எலுமிச்சையைப் பற்றிய பதிவு. ஆம், உறைந்த எலுமிச்சைக்கும் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளதாக அறியப்படுகிறது. இந்த ஆரோக்கிய பழத்தின் அனைத்து வித நன்மைகளையும் இந்த உறைந்த எலுமிச்சை சிகிச்சை மூலம் ஒருவர் பெற்றிட இயலும்.

Lemon Therapy

இந்த எலுமிச்சையை சுவையான மற்றும் எளிமையான முறையில் பயன்படுத்துவது இதன் ரகசியமாகும். எலுமிச்சையின் தோல் பல மாயங்களைப் புரியும் ஒரு பொருளாக உள்ளது. இதனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உறைந்த எலுமிச்சை

உறைந்த எலுமிச்சை

உறைந்த எலுமிச்சை சிகிச்சை ஏன் இவ்வளவு நன்மைகளைக் கொண்டுள்ளது ?

இதனை உறைந்த எலுமிச்சை சிகிச்சை என்று ஏன் அழைக்கிறோம் என்பதை முதலில் பார்க்கலாம். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலர் பொதுவாக இந்த சிகிச்சையை தங்கள் கீமோதெரபி சிகிச்சையுடன் இணைத்து பயன்படுத்துகின்றனர்.

நன்மைகள்

நன்மைகள்

எலுமிச்சையில் உள்ள அன்டி ஆக்சிடென்ட், கேடு விளைவிக்கும் அணுக்களை எதிர்த்து போராடும் தன்மையுடன் இருப்பதே இதற்குக் காரணம். மேலும், எலுமிச்சையில் இயற்கையாகவே உடலை பாதுகாக்கும் திறன் உள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல கடுமையான சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதால் அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி தீவிரமாக பாதிக்கப்படுகிறது. இவ்வாறு, இந்த சந்தர்ப்பங்களில் இது ஒரு மிகவும் பயனுள்ள சிகிச்சையாக இருக்கிறது. எனினும், இது புற்றுநோய்க்கான ஒரு 100% செயல்திறன் மிக்க தீர்வு என்று நாங்கள் கூற முடியாது; நாம் முன்பே கூறியது போல், கீமோதெரபி சிகிச்சையுடன் இணைந்து செயல்படக்கூடிய ஒரு தீர்வாக இது பார்க்கப்படுகிறது. இந்த சிகிச்சையின் மூலம் கட்டிகள் தடுக்கப்படுகிறது, மேலும் கீமோதெரபி சிகிச்சையினால் உண்டாகும் பக்கவிளைவுகள் தடுக்கப்படுகிறது.

எப்படி இருந்தாலும், புற்றுநோய்க்கான சிகிச்சையில் இதன் உதவி உள்ளது மட்டுமே இதன் நன்மை அல்ல. மேலும் சில நன்மைகள் இதில் உள்ளன. அவற்றை பற்றி இப்போது விவரிக்கிறோம். நீங்களும் இதனை முயற்சி செய்து பாருங்கள்.

வைட்டமின்களின் பொக்கிஷம்

வைட்டமின்களின் பொக்கிஷம்

எலுமிச்சை சாற்றை விட பத்து மடங்கு அதிக வைட்டமின் அதன் தோலில் உள்ளது. எலுமிச்சையின் வெளிபகுதியில் தான் பல மடங்கு அதிக மருத்துவ நன்மைகள் உள்ளது. ஆனால் நாம் அதனை பயன்படுத்தாமல் தூக்கி எரிவதால், நாம பல நன்மைகளை தவற விடுகிறோம். நாம் எப்போதும் எலுமிச்சை பழத்தின் சாற்றை பிழிந்து விட்டு அதன் தோலை வீசி எறிவதை தவிர்க்க வேண்டும்.

உறைந்த எலுமிச்சை சிகிச்சையை பின்பற்றுவதன் மூலம் நமக்கு கிடைக்கும் வைட்டமின்களை பற்றி அறிந்து கொள்ளலாமா?

பெக்டின்

வைட்டமின் சி

டேங்கரின் போன்ற ப்லேவனைடு

செல் ஆக்ஸிஜனேற்றத்தை குறைக்கும் திறன் கொண்ட 22 க்கும் மேற்பட்ட பல்வேறு கலவைகள்.

நோயெதிர்ப்பு மண்டலம்

நோயெதிர்ப்பு மண்டலம்

நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாத்து வலிமையடையச் செய்கிறது. இது மிகவும் ஆச்சர்யத்தை உண்டாக்கும். சளி, இருமல், தொற்று , காய்ச்சல் போன்ற அன்றாடம் நாம் பாதிக்கப்படும் பல்வேறு நோய்களை எதிர்த்து இந்த உறைந்த எலுமிச்சை சிகிச்சை போராடுகிறது. இந்தவகை நோயால் பெரியவர் முதல் குழந்தைகள் வரை அடிக்கடி பாதிக்கப்படுகிறோம். பலர் எலுமிச்சையை நீரில் ஊற வைத்து சமைத்து இந்த திரவத்தை உட்கொள்கின்றனர். ஆனால் எலுமிச்சை தோலை சமைப்பதன் மூலம் எலுமிச்சையின் 40% நன்மைகள் அழிக்கப்படுகின்றன. மேலும், இதனை உறைய வைப்பதால் அதன் சத்துகள் முழுவதும் பாதுகாக்கப்பட்டு, எளிதில் உட்கொள்ளும்படியாகவும் மிகவும் சுவை உடையதாகவும் உள்ளது.

எடை குறைப்பு

எடை குறைப்பு

உடலில் உள்ள நச்சுகளை நீங்குவதில் சிறந்த தீர்வை தருவது எலுமிச்சை என்பதை நாம் அனைவரும் அறிவோம். உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை உருவாக்கும் கொழுப்பு அமிலங்களை எதிர்த்துப் போராடுகிறது. இந்த கெட்ட கொலஸ் ட்ரால் உடலில் கொழுப்பாக சேமித்து வைக்கப்படுகிறது. தினமும் 75 கிராம் அளவு எலுமிச்சையை ஆரோக்கியமான உணவு காட்டுப்பாடு முறையுடன் இணைந்து எடுத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான முறையில் எடை குறைப்பு சாத்தியமாகும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இதனை உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் முயற்சித்து பார்க்கலாம்.

உறைந்த எலுமிச்சையை எவ்வாறு தயாரிப்பது ?

உறைந்த எலுமிச்சையை எவ்வாறு தயாரிப்பது ?

இந்த உறைந்த எலுமிச்சை சிகிச்சையை எவ்வாறு தயாரிப்பது என்பதை நீங்கள் தெரிந்து கொண்ட பின்னர், தினசரி இதனை பின்பற்றாமல் இருக்க முடியாது. இது அவ்வளவு எளிமையானது மற்றும் இதன் சுவையும் மிக அதிகமாக இருக்கும். இதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

2 எலுமிச்சை

எலுமிச்சையை துருவ ஒரு துருவி

செய்முறை

இதில் எந்த ஒரு ரகசியமும் தேவை இல்லை. ஒரு நாள் முழுவதும் 2 எலுமிச்சையை பிரீசரில் வைக்கவும். சிலர் இதனை துருவுவதற்கு ஏற்ற வகையில் இதனை பாதியாக அல்லது இரண்டு மூன்று துண்டுகளாக நறுக்கி வைப்பார்கள். ஆனால் முழு எலுமிச்சையாக பிரீசரில் வைப்பதே பரிந்துரைக்கப்படுகிறது.

எப்படி, எவ்வளவு உட்கொள்வது?

எப்படி, எவ்வளவு உட்கொள்வது?

நாம் முன்பே கூறி இருப்பதுபோல், தினமும் 75 கிராம் அளவு எலுமிச்சையை உட்கொள்வது நல்லது. ஒரு நாள் முழுவதும் பிரீசரில் இருந்த எலுமிச்சையை துருவி, அதனை உட்கொள்ள வேண்டும். இதில் உள்ள இயற்கை வாசனை, அதனை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளும் விருப்பத்தை உங்களுக்கு அளிக்கும். எப்படி இதனை உட்கொள்ளலாம் என்பதற்கான சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம்.

துருவிய எலுமிச்சையை 25 கிராம் எடுத்துக் கொண்டு, இயற்கை யோகர்ட்டுடன் சர்க்கரை சேர்க்காமல் உண்ணலாம்.

மதிய உணவிற்காக சாலட் செய்யும்போது, கீரை, நட்ஸ், பிரெஷ் சீஸ், சல்மன் மீன் துண்டுகள், செர்ரி தக்காளி போன்றவற்றுடன் 25 கிராம் துருவிய எலுமிச்சையை சேர்த்துக் கொள்ளவும்.

பிரெஷ் பானங்களின் தயாரிப்பில் கூட துருவிய எலுமிச்சையை சேர்த்துக் கொள்ளலாம். க்ரீன் டீ , இயற்கை பழங்கள் கொண்ட பானங்கள் போன்றவற்றை மதிய உணவிற்கு முன் பருகும்போது அதில் துருவிய எலுமிச்சையை சேர்த்து பருகலாம்.

பழ சாலட் செய்யும்போது துருவிய எலுமிச்சையை பயன்படுத்தலாம். ஒரு கிண்ணத்தில் நறுக்கிய அன்னாசிப்பழம் , இரண்டு அல்லது மூன்று ஸ்ட்ராபெர்ரி, பாதி கிவி பழம், நறுக்கிய நட்ஸ் சிறிதளவு போன்றவற்றை சேர்த்து அதன் மேல் பகுதியில் 25 கிராம் துருவிய எலுமிச்சை சேர்க்கவும்.

இப்படி உறைய வைத்த எலுமிச்சையை பயன்படுத்தும்போது அதன் தோலையும் சேர்த்து பயன்படுத்துவதை நீங்கள் பார்க்கலாம். இதனால் அதில் உள்ள நன்மைகள் அனைத்தையும் நாம் பெறலாம். இரும்பு சத்தும் , பல்வேறு உடல் நன்மைகளும் பெற்ற இந்த உறைந்த எலுமிச்சை சிகிச்சையை இன்று முதல் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். என்ன, இன்றே உங்கள் வீட்டு பிரீசரில் இரண்டு எலுமிச்சையை வைத்து விட்டீர்களா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why is Frozen Lemon Therapy So Good for Your Health?

The frozen lemon therapy’s main secret is being able to use, in a simple and delicious way.
Desktop Bottom Promotion