ஏன் அழுக்கான பகுதிகளில் வசிப்பவர்கள் நோயினால் அவதிப்படுவதில்லை என தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

நீங்கள் நோயில்லாமல் வாழ்வதற்கு எது காரணம் என்று சொல்வீர்கள்? உண்ணும் உணவு, உடற்பயிற்சி அல்லது வாழ்க்கை முறை.

இவையெல்லாம் ஒருபக்கம் காரணமென்றாலும், முழுமுதற் காரணம் எது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதனை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு :

ஆய்வு :

நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதற்கு காரணத்தை அறிய ஆராய்ச்சியாளர்கள் உணவு, தூக்க நேரம், வாழ்க்கை முறை, மன அழுத்தம் ஆகியவ்ற்றை ஆராய்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

சுற்றுப்புறம் :

சுற்றுப்புறம் :

ஆனால் ஆச்சரியப்படும்விதமாக அவர்களுக்கு தெரிய வந்தது என்னவென்றால் சுற்றுப்புற சூழ் நிலைதான் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிறது என தெரிவித்துள்ளார்கள்.

மரபணுக்கள் :

மரபணுக்கள் :

நமது உடலிலுள்ள மரபணுக்கள் சுற்றுப்புற சூழ் நிலை கொண்டே தன்னை உருவாக்கிக் கொள்கிறது. அதன் பின் அதற்கு தகுந்தாற்போல் நோய் எதிர்ப்பு மண்டலம் உருவாகிறது.

நோய் எதிர்ப்பு மண்டலம் :

நோய் எதிர்ப்பு மண்டலம் :

கடும் வெயிலில் வசிப்பவர்களுக்கு அங்குள்ள சீதோஷணத்திற்கு தகுந்தாற்போல் மரபணுக்கள் தங்கள் செயல்களை செயல்படுத்தும்.

அவர்கள் அங்கிருந்து குளிரான பகுதிகளுக்கு சென்றால் நோய் எதிர்ப்பு மண்டலம் சரியாக வேலை செய்யாது.

அதே போல் குளிர் பிரதேசங்களில் வசிப்பவர்கள் வெயில் பகுதிகளுக்கு வந்தால் உடல் நிலை கடும் பாதிப்பு ஏற்படும்.

இதற்கு காரணம் நமது நோய் எதிர்ப்பு மண்டலம் சூழ் நிலை தகுந்தாற்போல் உருவாகியிருக்கும். வேறொரு சூழ் நிலைக்கு வரும்போது அது தன் செயல்களை மாற்ற அவகாசம் எடுத்துக் கொள்ளும்.

அழுக்கான பகுதிகளில் வசிப்பவர்கள் !

அழுக்கான பகுதிகளில் வசிப்பவர்கள் !

இன்னும் சுலபமாக சொல்வதென்றால் மிகவும் அழுக்கு பகுதிகளில் சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கும் , அபார்ட்மென்ட்டில் வசிப்பவர்களுக்கும் வெவ்வேறு விதமாக நோய் எதிர்ப்பு மண்டலம் செயல்படும்.

அழுக்கான பகுதியில் வசிப்பவர்களுக்கு நோய்கள் வர வேண்டும் என்பதில்லை. ஏனென்றால் அந்த இடத்திற்கு தகுந்தாற்போல் நோய் எதிர்பு செல்கள் பல மடங்கு பெருகி அவர்கள் உடலை பாதுகாக்கும்.

வயதானவர்களுக்கு ஏன் நோய் எதிர்ப்பு குறைவாகிறது :

வயதானவர்களுக்கு ஏன் நோய் எதிர்ப்பு குறைவாகிறது :

நமது நோய் எதிர்ப்பு செல்களான T மற்றும் B செல்கள் உற்பத்தியாவது தைமஸில்தான். வயதாகும்போது தைமஸ் இந்த செல்களை உற்பத்திச் செய்வதை நிறுத்துகிறது. அதனால்தான் அவர்கள் எளிதில் நோய்வாய்படுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Environment decides your immune system

Environment is the responsible for your immune system and diversity of your gene
Story first published: Wednesday, October 5, 2016, 16:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter