For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டீன் ஏஜ் முதலே உடலுறவு, பால்வினை நோய் தொற்று அபாயம் !!!

|

சமீபத்திய ஆய்வில் பதின் வயதுகளில் (டீன் ஏஜ்) உடலுறவில் ஈடுபடுவது பால்வினை நோய் தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இன்றைய பாஸ்ட் புட் வாழ்க்கை, அனைத்தையும் முன்கூட்டியே அனுபவித்துவிட வேண்டும் என்ற எண்ணம் ஏகபோகமாய் இளைஞர்கள் மத்தியில் வளர்த்து வைத்திருக்கிறது.

அதிலும், ஆண் பெண் இடையிலான உறவுகள் தான் அச்சத்தை ஏற்படுத்துகிறது. பதின் வயது ஆரம்பத்திலேயே காதல், பதின் வயது முடிவதற்குள்ளேயே உறவு வைத்துக் கொள்வது என்பது உலகளவில் முக்கிய நகரங்களில் வாழும் இளைஞர் சாதாரணமான காரியமாக கருதுகிறார்கள்.

இதன் விளைவாக தான் இப்போது மருத்துவ ரீதியாகவும், மனநிலை ரீதியாகவும் பால்வினை நோய் தொற்று தாக்கம் என்பது பெரியளவில் வளர்ந்து நிற்கிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால்வினை நோய் தொற்று

பால்வினை நோய் தொற்று

பதின் வயதுகளிலேயே அதிகமாக உடலுறவில் ஈடுபடும் நபர்களுக்கு பால்வினை தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளதாம். HIV, Syphilis, Chlamydia, Gonorreah போன்றவை அதிகமாக ஏற்படலாம் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

உலகளவில் வளர்ந்து வருகிறது

உலகளவில் வளர்ந்து வருகிறது

உலகளவில் மருத்துவ ரீதியாக மற்றும் மனநிலை ரீதியாகவும் பெரும் பாதிப்புகளை பால்வினை நோய் தாக்கங்கள் ஏற்படுத்துகிறது என ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

கொரியன் பல்கலைக்கழகம்

கொரியன் பல்கலைக்கழகம்

கொரியாவில் இருக்கும் யான்செய் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தான் பதின் வயதில் உடலுறவு, பால்வினை தொற்று அதிகரிக்க காரணியாக இருக்கிறது என கண்டறியப்பட்டது.

சதவீதம்

சதவீதம்

ஏறத்தாழ 22,000 பேர் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்கள் மத்தியில் 7.4% மற்றும் பெண்கள் மத்தியில் 7.5% பால்வினை நோய் தொற்று ஏற்பட்டு இருந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

15 வயதுக்குள்

15 வயதுக்குள்

இந்த ஆய்வில் பதின் வயது இறுதியில் உடலுறவில் ஈடுபடும் நபர்களை விட, பதின் வயது தொடக்கத்தில் உடலுறவில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மடங்கு அதிகமாக பால்வினை நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பாலியல் மருத்துவ இதழ்

பாலியல் மருத்துவ இதழ்

இந்த ஆய்வு குறித்த தகவல்கள் மற்றும் ஆய்வறிக்கை பாலியல் மருத்துவ இதழில் (Journal of Sexual Medicine) வெளியாகியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Early intercourse puts teenagers at high infection risk

Early sex puts teenagers at high infection risk
Desktop Bottom Promotion