பலவீனமான முதுகை வலுப்படுத்த த்வி பாத விபரித தண்டாசனா!!

Written By:
Subscribe to Boldsky

முதுகு பலவீனமாக இருந்தால் மொத்த உடல் இயக்கத்திற்கும் வலு வில்லாமல் போய்விடும். இதனால் ஆரோக்கியம் குறையும்.

முதுகுதான் உடலின் பலத்திற்கு ஆதாரம். அங்குள்ள தண்டு வட எலும்பினாலான் மொத்த உடம்பும் சம நிலை பெறுகிறது. அதோடு மூளையின் முக்கிய நரம்புகளின் மையமும் அங்கேதான் இருக்கிறது.

Dwi pada viparitha dandasana to imprve back boon strength

அப்படியான முதுகை நீங்கள் பலப்படுத்த நினைத்தால் இந்த யோகாவை செய்யலாம். த்வி பாத விபரித தண்டாசனா முதுகை பலப்ப்படுத்த செய்யக் கூடியதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
த்வி பாத விபரித தண்டாசனா:

த்வி பாத விபரித தண்டாசனா:

முதுகு வலியை குணப்படுத்தி, முதுகெலும்பிற்கு பலமளிக்கும்இந்த ஆசனம் ஆரம்ப நிலை யோகா செய்பவர்களுக்கு சிறிது கடினம்.

ஆனால் இதன் நன்மைகளைப் பற்றி அறிந்த பின் தகுந்த யோகா பயிற்சியாளரை வைத்து இந்த ஆசனத்தை செய்து கொள்ளவும்.

 செய்முறை :

செய்முறை :

முதலில் ஆழ்ந்து மூச்சை விட்டபடி தரையில் படுங்கள். பின்னர் கால்களை அகல விரித்துக் கொள்ளுங்கள்.

கைகளை தலைக்கு மேல் வைத்துக் கொள்ளுங்கள். பின் மெதுவாக முதுகை வளைத்து உள்ளங்கைகளால் தரையை அழுத்தவும்.

 செய்முறை :

செய்முறை :

தரையை உந்தும்போது மெதுவாக நீங்கள் வளைந்து மேலே எழுவீர்கள். பின் மெதுவாய் பாதங்களால் தரையை கெட்டியாக பற்றியபடி தலையை தரையில் முட்டு கொடுங்கள்.

இந்த நிலையில் உங்களை சம நிலைப் படுத்தியபின் மெதுவாக இயல்பு நிலைக்கு வரவும்.

நன்மைகள் :

நன்மைகள் :

முதுகெலும்பு பலமாகும். தொடைகள் உறுதி பெறும். மனதை ஒருமுகப் படுத்தும் ஆற்றல் அதிகரிக்கும். தசைகள் வலுவடையும். மன அழுத்தம் குறையும்.

குறிப்பு :

குறிப்பு :

ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் நிதானமாகவும், கவனமாகவும் இந்த ஆசனத்தை செய்யவும். மணிக்கட்டு, இடுப்பு முதுகுப் பகுதிகளில் அடிப்பட்டவர்கல் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Dwi pada viparitha dandasana to imprve back boon strength

Dwi pada viparitha dandasana to strengthen back bone.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter