நாம் பயன்படுத்தும் இந்த பொருட்கள் தான் தைராய்டு வர காரணம் என்பது உங்களுக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நமக்கு வரும் பல உடல்நல பிரச்சனைகளுக்கு நம்மைச் சுற்றியிருக்கும் சில பொருட்கள் தான் காரணம் என்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. அதில் வாழ்நாள் முழுவதும் அவஸ்தைப்படக்கூடும் தைராய்டு பிரச்சனையும் ஒன்று.

Common Things At Your House That Can Cause Thyroid Disorder!

தைராய்டு பிரச்சனை ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், குறிப்பிட்ட வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள சில பொருட்களும் தான் முக்கிய காரணிகளாகும். கழுத்தில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பியில் ஏராளமான பிரச்சனைகள் வரும்.

இப்படி தைராய்டு சுரப்பியில் பிரச்சனையை ஏற்படுத்துவதற்கு நம் வீட்டில் உள்ள சில பொருட்கள் தான் காரணம். இங்கு அந்த பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ளாஷ்

ப்ளாஷ்

பற்களின் இடுக்குகளில் உள்ள உணவுத்துகள்களை வெளியேற்ற உதவும் ப்ளாஷ் எனப்படும் பல்லிடுக்கு நூலில் சில கெமிக்கல்கள் உள்ளன. அதனால் தான் பற்களின் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் மற்றும் உணவுத்துகள்கள் எளிதில் நீக்கப்படுகிறது. அதே கெமிக்கல் தான் தைராய் நோயையும் தூண்டும் என்பதை மறவாதீர்கள்.

நான்-ஸ்டிக் பாத்திரங்கள்

நான்-ஸ்டிக் பாத்திரங்கள்

பெரும்பாலான மக்கள் சமைப்பதற்கு நான்-ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் அந்த நான்-ஸ்டிக் பாத்திரங்களில் அடிப்பிடிக்காமல் இருப்பதற்கு பூசப்பட்டுள்ள கெமிக்கல்கள், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தி, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும்.

ரெயின்கோட்

ரெயின்கோட்

குறிப்பிட்ட கம்பெனி தயாரித்த ரெயின்கோட்டில் தைராய்டு பிரச்சனையை ஏற்படுத்தும் கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த கெமிக்கல்கள் வாய் அல்லது சருமத்தின் வழியே நுழைந்து, தைராய்டு பிரச்சனைக்கான அபாயத்தை அதிகரிக்கும்.

பிட்சா பாக்ஸ்

பிட்சா பாக்ஸ்

பிட்சா வைத்து பரிமாறப்படும் பிட்சா பாக்ஸில், பல கம்பெனிகள் பிட்சா உருகாமல் இருப்பதற்கு கெமிக்கல்களைப் பயன்படுத்துகிறது. இந்த கெமிக்கல்கள் தைராய்டு சம்பந்தமான ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும்.

பாப்கார்ன் பேக்

பாப்கார்ன் பேக்

பாக்கெட் போட்டு விற்கப்படும் பாப்கார்ன், தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்களை உள்ளடக்கியது. குறிப்பாக தைராய்டு சுரப்பியைப் பாதிக்கும் படியான கெமிக்கல்கள் பாப்கார்ன் பேக்குகளில் உள்ளது.

கார்பெட்டுகள்

கார்பெட்டுகள்

கார்பெட்டுகளை அடிக்கடி சுத்தம் செய்யாமல் இருந்தால், அதில் தூசிகள் மற்றும் இதர டாக்ஸின்கள் நிறைந்து, அதுவே தைராய்டு நோய்க்கு வழிவகுக்கும்.

ஷாம்பு

ஷாம்பு

ஆம், நாம் பயன்படுத்தும் ஷாம்புக்களில் உள்ள கெமிக்கல்களும் தைராய்டு பிரச்சனையை ஏற்படுத்தும். அதிலும் பெர்ஃப்ளூரோ என்று ஆரம்பமாகும் கெமிக்கல் இருந்தால், அந்த ஷாம்பு நிச்சயம் தைராய்டு பிரச்சனையை உண்டாக்கும். அம்மாதிரியான ஷாம்புக்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Common Things At Your House That Can Cause Thyroid Disorder!

So, here are a few common things at our home, that could be causing thyroid diseases; have a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter