For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பார்வை இழப்பிற்கு காரணமான முக்கியமான நோய்கள் இவைகள்தான். எச்சரிக்கையாக இருந்துகோங்க!!

கண் பார்வை இழப்பது என்பது மிகவும் துக்ககரமான விஷயம். கண்களில் உண்டாகும் முக்கிய நோய்களைப் பற்றி நாம் தெரிந்து வைத்துள்ளீர்களா? இல்லையெனில் இந்த கட்டுரையை படியுங்கள்.

|

கண் உலகத்தையும் மற்றவர்களின் எண்ணங்களையும் தெரிய வைக்கும் கேமரா. காண கண் கோடி வேண்டும் என்பதை விட இரு கண்களால் பார்க்க முடியாததே பல கோடாயிரம் விஷயங்கள் உண்டு.

அத்தகைய கண்களில் வரும் முக்கியமான நோய்களைப் பற்றி தெரியுமா? அதிகபட்சம் மாலைக் கண் நோய் மற்றும் கேடராட்க் பற்றி தெரிந்திருப்பீர்கள். இன்னும் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
க்ளாக்கோமா:

க்ளாக்கோமா:

கண்களிலுள்ள ஆப்டிக் நரம்புகள்தான் பார்வைப் பற்றிய தகவல்களை மூளைக்கு அனுப்பும். இந்த ஆப்டிக் நரம்புகள் சேதமடைந்தால் உண்டாவதுதான் க்ளாக்கோமா.

இரத்த அழுத்தம் அதிகமாகும்போது இத்தகைய பாதிப்புகள் உண்டாகலாம். பார்வை இழப்பிற்கு இரண்டாவது காரணம் இந்த நோய்தான்.

கஞ்சக்டிவிடிஸ் :

கஞ்சக்டிவிடிஸ் :

கண்களில் வெள்ளைப் பகுதில் உள்ள திசுக்களில் உண்டாகும் பாதிப்பினால் இந்த நோய் உண்டாகிறது. இதனை " பிங்க் ஐ" என்று சொல்வார்கள். காரனம் கண்களிலுள்ள வெள்ளைப் பகுதி பிங்க் நிறத்தில் மாறும்.

மேகுலார் சிதைவு :Macular degeneration

மேகுலார் சிதைவு :Macular degeneration

கண்களிலுள்ள ரெட்டினாவின் பின்பகுதியிலுள்ள மேகுலார் என்று பகுதி நுண்ணிய பொருளையும் துல்லியமாக பார்க்க உதவும். அந்த பகுதி சிதைவுறும்போது கண் பார்வை இழக்க நேரிடும். அமெரிக்காவில் அதிக வயதானோர் இந்த பிரச்சனையால்தான் பார்வை இழக்கின்றனர். இதற்கு பெயர் மேகுலார் டிஜெனரேஷன்.

ரெடினல் பிரிவு :Retinal detachment

ரெடினல் பிரிவு :Retinal detachment

ரெட்டினா பதிந்திருக்கும் இடத்திலிருந்து விலகும்போது சரியான சிக்னல் கிடைக்காமல் பார்வை தெரியாமல் போகும். லென்ஸும் தன் இடத்திலிருந்து விலக ஆரம்பிக்கும்.

கேடராக்ட் :

கேடராக்ட் :

கேடராக்ட் பெரும்பாலான வயதானவர்களுக்கு வரக் கூடியது. லென்ஸில் புகைப் போல் பெருகும் திசுக்களால் கண்பார்வை குறிந்து இறுதியில் பார்வையை இழக்க நேரிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beware of 5 important eye diseases which may happen to you

Beware of 5 important eye diseases which may happen to you
Story first published: Tuesday, December 27, 2016, 12:42 [IST]
Desktop Bottom Promotion