For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாய் துர்நாற்றம், மஞ்சள் பற்கள், ஈறுகளில் இரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளைத் தடுக்க சில வழிகள்!

By Maha
|

தற்போது அழகு மற்றும் சுகாதாரத்தில் அக்கறை எடுப்போரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இருப்பினும் ஒருசில வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மட்டும் தீர்வு காண்பது என்பது சற்று கடினமாக உள்ளது. இதற்கு மோசமான உணவு மற்றும் பழக்கவழக்கங்களைக் காரணமாக கூறலாம்.

பற்களின் ஈறுகளில் ஏற்படும் தொற்றுக்களை தடுப்பதற்கான 17 இயற்கை வைத்தியங்கள்!!!

இதனால் வாய் துர்நாற்றம், ஈறுகளில் இரத்தக்கசிவு, சொத்தைப் பற்கள், பல் வலி, மஞ்சள் நிற பற்கள் போன்ற பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்பட நேரிடுகிறது. ஒருவருக்கு இப்பிரச்சனைகள் வருவதற்கு முறையற்ற வாய் பராமரிப்பும் முக்கிய காரணமாகும்.

பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகள்!!!

எனவே தமிழ் போல்ட் ஸ்கை இப்பிரச்சனைகளில் இருந்து விடுபடவும், இப்பிரச்சனைகள் வராமல் இருக்கவும் ஒருசில எளிய ஆயுர்வேத வழிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்துப் பின்பற்றி உங்கள் வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஈறுகளில் இருந்து இரத்தம் கசிகிறதா? இத டெய்லி ஃபாலோ பண்ணுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நாக்கை சுத்தம் செய்யவும்

நாக்கை சுத்தம் செய்யவும்

வாய் சுத்தமாக இருக்க வேண்டுமானால், முதலில் நாக்கை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நாக்கில் தான் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும். எனவே நாக்கை தினமும் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இப்படி சுத்தமாக இருந்தால் வாய் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.

உணவுக்கு பின் செய்ய வேண்டியவை

உணவுக்கு பின் செய்ய வேண்டியவை

ஒவ்வொரு முறை உணவை உட்கொண்ட பின்னரும், பற்களைத் துலக்க வேண்டும். இதனால் உண்ட உணவினால் பற்களில் சிக்கிக் கொண்ட உணவுத் துகள்கள் முழுமையாக வெளியேறி, வாய் சுத்தமாக இருக்கும். மேலும் கீழே கொடுக்கப்பட்ட செயல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

நேச்சுரல் பல் பொடி

நேச்சுரல் பல் பொடி

டூத் பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்காமல், வீட்டிலேயே பல் பொடி ஒன்றைத் தயார் செய்து கொள்ளுங்கள். அதற்கு மஞ்சள் பொடியுடன், பட்டை தூள் மற்றும் சிறிது வேப்பிலைப் பொடி சேர்த்து, வேண்டுமானால் அத்துடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து, ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பின்னரும் இந்த பல் பொடியைக் கொண்டு பற்களைத் துலக்க வேண்டும்.

சாம்பல்

சாம்பல்

சாம்பல் கூட அற்புதமான ஒரு பல் பொடி. உங்கள் வீட்டில் சாம்பல் இருந்தால் கூட, அதனைக் கொண்டும் தினமும் உணவு உண்ட பின் பற்களைத் துலக்கலாம். இதனால் பல்வேறு வாய் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

நேச்சுரல் கிருமிநாசினியால் வாயைக் கொப்பளிக்கவும்

நேச்சுரல் கிருமிநாசினியால் வாயைக் கொப்பளிக்கவும்

பற்களைத் துலக்கிய பின், நீரில் 1 டீஸ்பூன் உப்பு, 1 சிட்டிகை பேக்கிங் சோடா, 10 துளிகள் டீ-ட்ரீ ஆயில் மற்றும் 3 துளிகள் கிராம்பு எண்ணெய் சேர்த்து கலந்து, வாயில் ஊற்றி 2 நிமிடம் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

ஆயில் புல்லிங்

ஆயில் புல்லிங்

பற்களைத் துலக்கி, வாயைக் கொப்பளித்த பின், ஆயில் புல்லிங் செய்ய வேண்டும். அதற்கு 2-3 டீஸ்பூன் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி 2 நிமிடம் நன்கு வாயைக் கொப்பளித்து, பின் துப்ப வேண்டும். பிறகு விரலால் ஈறுகளை மென்மையாக மசாஜ் செய்யவும். இதனால் வாயில் உள்ள கிருமிகள் முழுமையாக வெளியேறிவிடும்.

பலன் 1

பலன் 1

பட்டை, வேப்பிலை, உப்பு போன்றவை பற்களுக்கும், ஈறுகளுக்கும் மிகவும் நல்லது. இவை பற்களையும், ஈறுகளையும் சுத்தமாகவும், நோய்களின் தாக்குதலின்றியும் பாதுகாக்கும்.

பலன் 2

பலன் 2

நேச்சுரல் கிருமிநாசினியைக் கொண்டு வாயைக் கொப்பளிப்பதால், வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி குறையும். அதிலும் டீ-ட்ரீ ஆயில் மற்றும் கிராம்பு எண்ணெய் கொண்டு வாயைக் கொப்பளிக்கும் போது, நோய்க்கிருமிகளின் தாக்கம் குறைந்து, பல் சொத்தை அடைவது தடுக்கப்படும்.

பலன் 3

பலன் 3

தினமும் காலையிலும், இரவிலும் நாக்கை சுத்தம் செய்யும் போது, நாக்கில் படியும் வெள்ளைப் படலத்தில் வளரும் பாக்டீரியாக்கள் வெளியேற்றப்பட்டு, வாய் ஆரோக்கியம் மேம்படுவதோடு, வாய் துர்நாற்றமும் தடுக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic Natural Oral Care For Healthy Teeth And Gums

Here are some ayurvedic natural oral care for healthy teeth and gums. Read on to know more.
Desktop Bottom Promotion