For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க தினமும் சாப்பிடும் இந்த உணவுகள் உங்க மூளையின் ஆரோக்கியத்தை அழிக்கும் தெரியுமா?

|

உடலிலேயே மூளை மிகவும் முக்கியமான உறுப்பு என்பது அனைவருக்கும் தெரியும். மூளை சரியாக செயல்படாவிட்டாலோ அல்லது ஆரோக்கியமின்றி இருந்தாலோ, உடலின் இதர செயல்பாடுகளிலும் பாதிப்புகள் ஏற்படும்.

மேலும் இன்றைய காலத்தில் அறிவாற்றல் சிறப்பாக இருந்தால் தான், வேலையை தக்க வைத்துக் கொள்ள முடியும். அதற்கு மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆனால் நாம் அன்றாடம் சாப்பிடும் சில உணவுகள் நம் மூளையின் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது என்பது தெரியுமா? மூளைச் செல்களை அழிக்கும் அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செயற்கை சுவையூட்டிகள்

செயற்கை சுவையூட்டிகள்

ஆய்வு ஒன்றில் உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை சுவையூட்டிகள் மூளைச் செல்களை சிதைவுறச் செய்து, நாளடைவில் அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோய்க்கு வழிவகுக்கும்.

மீன்

மீன்

குறிப்பிட்ட மீன்களில் அதிகப்படியான அளவில் மெர்குரி இருக்கும். இப்படி மெர்குரி அதிகம் நிறைந்த மீன்களை அடிக்கடி சாப்பிட்டால், மூளைச் செல்கள் பாதிக்கப்பட்டு, அதனால் கடுமையான மூளை பாதிப்பால் அவஸ்தைப்படக்கூடும்.

பேக்கரி பொருட்கள்

பேக்கரி பொருட்கள்

தற்போது நிறைய பேர் பசியைப் போக்க பேக்கரியில் விற்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடுவார்கள். அதிலும் சாண்ட்விச், பிரட் பட்டர் ஜாம் போன்றவற்றை வாங்கி சாப்பிட்டு பசியைப் போக்குவார்கள். ஆனால் இந்த உணவுகள் மூளைச் செல்களை சுருக்கி, மூளையினுள் உட்காயங்களை உண்டு பண்ணும்.

பாஸ்தா

பாஸ்தா

பாஸ்தாவில் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புக்கள் அதிகமான அளவில் உள்ளது. இது மூளையின் குறிப்பிட்ட இயக்கத்தைக் குறைத்து, நினைவாற்றலைப் பாதிக்கும். ஆகவே மூளை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், பாஸ்தா உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

சோடா பானங்கள்

சோடா பானங்கள்

சோடா பானங்களில் சர்க்கரை அதிகமாக உள்ளது. இது மூளையின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, ஹைபோதலாமஸையும் பாதிக்கும். ஆகவே சோடா பானங்கள் அதிகம் குடிக்கும் பழக்கம் இருந்தால், உடனே அதைத் தவிர்த்திடுங்கள்.

ஜங்க்/பதப்படுத்தப்பட்ட உணவுகள்

ஜங்க்/பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பிரெஞ்சு ப்ரைஸ், பிட்சா போன்ற ஜங்க் உணவுகளை விரும்பி சாப்பிடுவீர்களா? அப்படியெனில் உடனே அதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் அவை மூளை செல்களில் காயங்களை ஏற்படுத்துவதோடு, இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும்.

மது

மது

மது மூளையை நேரடியாக பாதித்து, மூளையின் பல்வேறு இயக்கத்தில் இடையூறை ஏற்படுத்தி, மூளைச் செல்களை அழிவுறச் செய்து, மன இறுக்கத்தை ஏற்படுத்தும். எனவே மது அருந்தும் பழக்கம் இருந்தால், அதை கைவிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Avoid These Common Foods If You Want A Healthy Brain!

Are you looking for natural foods to have a healthy brain, here are a few best diet tips for a healthy brain..
Desktop Bottom Promotion