Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க வாயை கொஞ்சம் அடக்கி இருக்கணும்! -
இந்தியாவின் 'அரிசித் தலைநகரம்' என்று அழைக்கப்படும் மாநிலம் எது தெரியுமா? தென்னிந்திய மாநிலம் எதுவும் இல்லையாம் -
இட்லி, தோசைக்கு ஏற்ற க்ரீன் கார சட்னி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நவம்பர் 02, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
நவம்பர் 06-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பண மழை கொட்டப்போகுது! -
1/4 கிலோ கடலை மாவு இருந்தா, தீபாவளிக்கு 1 கிலோ சாப்ட்டான பூந்தி லட்டு செய்யலாம்.. எப்படின்னு பாருங்க.. -
நவம்பர் மாதம் இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப் போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு முன் இந்த பொருட்களை வீட்டில் இருந்து தூக்கிப் போடுங்க.. அப்ப தான் லட்சுமி தேவியின் அருள் கிட்டும்! -
November 2026 Tarot Predictions: உங்க பிறந்த தேதிப்படி நவம்பர் மாதம் எப்படி இருக்கும் தெரியுமா? -
ரோட்டுக்கடை சிக்கன் 65 மட்டும் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
Mother's Day 2026: உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் எலும்புகளின் ஆரோக்கியம் முக்கியப்பங்கு வகிக்கிறது. வயது அதிகரிக்கும் போது எலும்புகளின் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படுகிறது. இது தவிர்க்க முடியாதது ஆனால் சரியான பயிற்சிகளின் மூலம் இதை தாமதப்படுத்தலாம். 30 வயதுகளில் இருக்கும் பெண்களுக்கு எலும்பு ஆரோக்கியம் என்பது ஒரு முக்கியப் பிரச்சினையாகத் தோன்றாது.

ஏனெனில் அந்த வயதில் அவர்களுக்கு எந்த அறிகுறியும் வெளிப்படாது, மேலும், தங்கள் எலும்புகளின் ஆரோக்கியம் கவலைகொள்ளச் செய்யும் வகையிலான அறிகுறிகளோ அல்லது உடல் அசௌகரியங்களோ பெண்களுக்கு ஏற்படுவதில்லை. இருப்பினும், உடலுக்குள் நிகழும் மாற்றங்கள் முற்றிலும் மாறுபட்டவையாகவும், சில சமயங்களில் எதிர்பாராதவையாகவும் இருக்கக்கூடும்.
35 வயதைக் கடந்த பிறகு, புதிய எலும்புகளை உருவாக்கும் உடலின் திறனைவிட, எலும்புகள் சிதைவடையும் விகிதம் மிக வேகமாக நிகழக்கூடும். எனவே 35 வயதுக்கு பிறகு பெண்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
35 வயதிற்குப் பிறகு எலும்பு அடர்த்தி ஏன் குறையத் தொடங்குகிறது?
மனித எலும்பு என்பது தொடர்ந்து சிதைவடைந்து, மீண்டும் தன்னைத்தானே கட்டமைத்துக்கொள்ளும் ஒரு உயிருள்ள திசுவாகும். பெண்களின் 30-களின் முற்பகுதி வரை, உடல் இந்தச் சமநிலையை ஆரோக்கியமாகப் பராமரித்து வருகிறது. அதன் பிறகு, இந்தச் சமநிலை மாறத் தொடங்குகிறது. உடல் இழக்கும் எலும்பின் அளவை, அதனால் மீண்டும் ஈடுசெய்ய முடிந்த அளவை விடச் சற்று வேகமாக இழக்கத் தொடங்குகிறது. இந்தச் செயல்முறை மெதுவாகவும், அதே சமயம் சீராகவும் நடைபெறுகிறது, இதன் விளைவாக எலும்புகள் பலவீனமடைவதுடன், ஆஸ்டியோபோரோசிஸ் நோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
ஆஸ்டியோபோரோசிஸ் என்றால் என்ன?
ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகள் வலுவிழந்து, எளிதில் உடையக்கூடியதாக மாறும் ஒரு நோயாகும். பெரும்பாலும், ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தங்கள் உடலில் உருவாகி அதிகரித்து வருவதை ஒரு நபர் அறியாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படும் எலும்புகள் இடுப்பு, முதுகெலும்பு மற்றும் மணிக்கட்டு எலும்புகளாகும். துரதிர்ஷ்டவசமாக நோய் கண்டறியப்படும் நிலையில், எலும்புகளில் ஏற்கனவே கணிசமான அளவு சிதைவு ஏற்பட்டிருக்கக்கூடும்.
பெண்கள் ஏன் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள்?
இளம் வயதிலேயே பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, ஹார்மோன் மாற்றங்கள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மாதவிடாய்க்கு முன்பு ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி படிப்படியாகக் குறைவது எலும்பு ஆரோக்கியத்தைப் பலவீனப்படுத்தும். எலும்பு அடர்த்தியை உறுதி செய்வதற்கு ஈஸ்ட்ரோஜன் ஒரு அவசியமான ஹார்மோன் ஆகும். அடுத்ததாக, ஊட்டச்சத்துக் குறைபாடுகள் பெண்களுக்கு எலும்புத் தேய்மானத்தின் வேகத்தை அதிகரிக்கும். எலும்பை உறுதியாக்கும் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றின் பற்றாக்குறை, எலும்புத் தேய்மானத்தை விரைவுபடுத்தும். இதைத் தொடர்ந்து, இன்றைய செயலற்ற வாழ்க்கை முறை பெண்களை நீண்ட நேரம் உட்கார வைக்கிறது. இது அவர்களின் எலும்பு ஆரோக்கியத்தை பலவீனமாக்குகிறது.
ஆரம்பகால அறிகுறிகள்
துரதிர்ஷ்டவசமாக எலும்புகள் பலவீனமடைவதை வெளிப்படுத்தும், ஆனால் சில நுட்பமான மாற்றங்கள் எலும்புகள் பலவீனமடைவதை வெளிப்படுத்தும். சிறு விபத்துகளால் அடிக்கடி ஏற்படும் எலும்பு முறிவுகள், எலும்பு இழப்பின் ஒரு அறிகுறியாகும். எந்தக் காரணமும் இல்லாமல் உயரம் குறைவதும் ஒரு முக்கிய அறிகுறியாகும். முதுகெலும்பில் ஏற்படும் சிறிய வளைவு போன்ற தோற்றத்தில் ஏற்படும் மாற்றம், எலும்புகள் பலவீனமடைந்திருப்பதற்கான மற்றொரு அறிகுறியாகும். மேலும் நீண்டகால கீழ் முதுகுவலி அல்லது மூச்சுத்திணறல் கூட எலும்பு பலவீனத்தின் பிற அறிகுறிகளாகும்.
எப்படி கண்டறியலாம்?
DEXA ஸ்கேன்களைப் பயன்படுத்தி எலும்புகளின் அடர்த்தி தீர்மானிக்கப்படுகிறது. இவை, எலும்புகளில் உள்ள தாதுக்களின் அளவை மதிப்பிடுவதன் மூலம் எலும்புகளின் வலிமையை அளவிடுகின்றன. இந்த பரிசோதனையானது, எலும்பு பலவீனத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும். மேலும், மருத்துவ நிபுணர்கள் தேவையான மாற்றங்களைச் செய்து, பிற்காலத்தில் ஏற்படக்கூடிய கடுமையான சிக்கல்களைத் தடுக்கவும் இது வழிவகுக்கும்.
எலும்புகளை பாதுகாப்பது எப்படி?
உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க சில எளிய வழிகளே போதுமானது. கால்சியம் நிறைந்த ஆரோக்கியமான, சமச்சீரான உணவை நீங்கள் உண்ண வேண்டும். நடைப்பயிற்சி அல்லது யோகா உள்ளிட்ட வழக்கமான உடற்பயிற்சியும் இதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

