For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் உடலைப் பற்றி சொல்லப்படுகிற இந்த விஷயங்களிலெல்லாம் உண்மையே இல்லை!!

அறிவியல் ரீதியாகவே ஸ்ல விஷயங்களை நாம் உண்மை என சொல்லி அதனையே நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சில விஷயங்கள் உண்மையில் காற்பனைகளாகவே இருக்கும். அப்படியான விஷயங்கள் இங்கே.

|

உலகம் தட்டையானது என்பதில் தொடங்கி நாம் பல விஷயங்களை உண்மை என்று நம்பிய எத்தனையோ விஷயங்கள் கடைசியில் பொய்யாய் போயிருக்கிறது.

அப்படியிருக்கும் போது உடலைப் பற்றி சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களும் அப்படித்தான். இது இப்படி என யாரோ வரையறுத்துவிட்ட விஷயங்களை அப்படியே
நம்புகிறோம்.

6 Lies that told about your body

அப்படி உங்கள் உடலை பற்றி நீங்கள் நம்பும் இந்த விஷயங்கள் உண்மையில்லை. எவை என பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்கள் சிறுநீர் சுத்தமானது :

உங்கள் சிறுநீர் சுத்தமானது :

உங்கள் சிறு நீர் கிரிஸ்டல் கிளியராக இருக்கலாம். சிறு நீரகத்தில்ருந்து வெளிப்படும் சிறுநீர் சுத்தமானது என பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஆனால் இதனை சிகாகோவிலுள்ள லயோலா பல்கலைக் கழக ஆய்வாளர்கள் மறுக்கிறார்கள். பெண்களின் சிறுநீரகத்தில் மட்டும் 85 விதமான பாக்டீரியாக்கள் இருக்கின்றனவாம்.

 கீழே விழுந்த திண்பண்டங்கள் உண்ணக் கூடாது :

கீழே விழுந்த திண்பண்டங்கள் உண்ணக் கூடாது :

கீழே விழுந்த திண்பண்டங்களை சாப்பிடக் கூடாது. கிருமி இருக்கும் என்று சொல்வோம். ஆனால் வறண்ட பிரட் போன்ற உணவுப் பொருட்களில் உடனடியாக பேக்டீரியாக்கள் தொற்றிக் கொள்ளாது. அது போல், கார்பெட், அல்லது மர தரையில் அதிக நாட்கள் கிருமிகள் வாழாது.

ஆனால் டைல்ஸ் போன்ற தரையில் பல வாரங்களுக்கும் கிருமிகள் வாழும். ஆகவே விழும் இடத்தையும் சாப்பிடும் உணவுப் பொருள் பொறுத்தே கிருமிகள் தொற்று உண்டாகும்.

ஷேவிங் செய்வதால் முடி அடர்த்தியாக வளரும் :

ஷேவிங் செய்வதால் முடி அடர்த்தியாக வளரும் :

ஷேவிங் செய்த பின் முகத்தில் அடர்த்தியாக முடி வளரும் என நினைக்கிறோம் ஆனால் அந்த இடத்தில் பெரிய துவாரங்களும் கருமையும் உண்டாவதால் ஆரம்பத்தில் முடி வளரும்போது அடர்த்தியாய் தெரிவது போலத் தெரியும். உண்மையில் சருமத்தின் தோற்றம் அப்படி தெரிய வைக்கிறது.

தூக்கத்தில் நடப்பவர்களை எழுப்பக் கூடாது:

தூக்கத்தில் நடப்பவர்களை எழுப்பக் கூடாது:

தூக்கத்தில் நடப்பவர்களை எழுபி விட்டால் அவர்களுக்கு பக்க வாதம் வரும், ஹார்ட் அட்டாக் வரும் என பலவற்றை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஆனால் உண்மையில் அப்படி எதுவும் இல்லை. அவர்களை எழுப்பாவிட்டாம் அவர்கள் எங்கேயாவது கீழே விழுந்து அடிபட வாய்ப்புண்டு. ஆகவே அவர்களை எழுப்பி அல்லது கைப்பிடித்து படுக்கைக்கு அழைத்து செல்லுதல் வேண்டும்.

தலைவழியாக சூடு வெளியேறும் :

தலைவழியாக சூடு வெளியேறும் :

தலை வழியாகத்தான் அதிகபப்டியான சூடு வெளியேறும் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அதிக சூடு உங்கள் சருமத்தின் வழியாகத்தான் வெளியேறும். அதே சமயம் குளிர்ச்சியும் உங்கள் சருமம் வழியாகத்தான் உண்டாகும்.

நீங்கள் 10 % மூளையைத்தான் பயன்படுத்துகிறீர்கள் :

நீங்கள் 10 % மூளையைத்தான் பயன்படுத்துகிறீர்கள் :

பெரிய விஞ்ஞானியே 10 % மூளையைத்தான் பயன்படுத்தியிருக்கிறார் என சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் அப்படி ஒரு ஆராய்ச்சி இதுவரை நடந்ததில்லை.

சோம்பேறிகளை உற்சாகபடுத்த இந்த மாதிரி கற்பனைக் கதைகளை சொல்லியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Lies that told about your body

6 Lies that told about your body
Story first published: Tuesday, December 20, 2016, 15:43 [IST]
Desktop Bottom Promotion