முடக்கு வாதத்தை கட்டுப்படுத்தும் 5 அற்புத மூலிகைகளை பற்றி தெரியுமா?

Posted By: Hemalatha V
Subscribe to Boldsky

முடக்கு வாதம் என்பது ஒரு autoimmune நோயாகும். கிருமிகள் உள்ளே வரும்போதுதான் பொதுவாக நோய் எதிர்ப்பு செல்கள் செயல்படும். சில சமயம் , கிருமிகள் வந்துவிட்டது என தவறாக எண்ணி தனிச்சையாக போரிடும்.

இதனால் உள்ளுறுப்புகளில் சேதாரம் ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு வகை autoimmune நோய்தான் முடக்கு வாதமும். அதனைப் பற்றியும், அதனை குணப்படுத்தும் மூலிகைகளைப் பற்றியும் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோயின் அறிகுறிகள் :

நோயின் அறிகுறிகள் :

முடக்கு வாதம் வந்தால், கைகால் இணைப்புகளில், வீக்கம் வந்து இறுகி விடும். வலி எடுக்கும். வளைக்க முடியாது. இது எந்த வயதிலும் வரலாம். இளம் வயதிலும் சிலருக்கு வரும். சில வருடங்களில் தானாகவே சரியாகிவிடும். பொதுவாக மத்திய வயதினருக்கும், வயதானவர்களையும் அதிகம் தாக்கும் நோய் இது. இதனௌ குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை.

வலியை குறைக்கும் மூலிகைகள் :

வலியை குறைக்கும் மூலிகைகள் :

முடக்கு வாதத்தை குணப்படுத்த முடியாவிட்டாலும், அதன் வலியையும், வீக்கத்தையும் கட்டுப்படுத்தலாம். ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் இவற்றை குறைக்க மருந்துகள் உள்ளன. இயற்கையான மூலிகைகள் வலி நிவாரணியாக செயல்படுகின்றன்.

இஞ்சி எண்ணெய் :

இஞ்சி எண்ணெய் :

இஞ்சி எண்ணெயை உணவில் சேர்த்துக் கொண்டால், அவை மூட்டு இணைப்புகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும். முடக்கு வாதத்தின் மற்ற பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அன்னாசி :

அன்னாசி :

அன்னாசி மருந்தாக 18 ஆம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள ப்ரோமெலைன் வீக்கத்தினை குறைக்கும். முடக்கு வாதம் உள்ளவர்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், வலியிருந்து விடுபடலாம்.

பாரிஜாதம் :

பாரிஜாதம் :

பாரிஜாதம் மேற்கு வங்காளத்தில் விளைகிறது. பாரிஜாதத்திலிருந்து எடுக்கப்படும் சாறினை பருகிவந்தால், முடக்கு வாதத்தால் வரும் வலி மறைந்தே போய்விடும். தெம்புடன் நடக்க முடியும் என 1997 ஆம் ஆண்டு நடந்த ஆய்வு நிருபிக்கின்றது.

நில வேம்பு :

நில வேம்பு :

நிலவேம்பு டெங்கு காய்ச்சலுக்கு மட்டுமில்லாமல் முடக்கு வாதத்திற்கும் ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது வலி , வீக்கத்தை குறைக்கும்.

குங்குமப் பூ :

குங்குமப் பூ :

குங்குமப் பூ மருத்துவ குணங்கள் நிறைந்தது. இரும்புச் சத்து அதிகம் கொண்டது. இது முடக்கு வாதத்திற்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. தினமும் உணவில் இதனை சேர்த்துக் கொண்டால், வலி குறையும் என ஆயுர்வேதம் சொல்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 effective herbal remedies for rheumatoid arthritis

5 effective herbal remedies for rheumatoid arthritis
Story first published: Wednesday, June 29, 2016, 10:23 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter