For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் உடல்பருமன் குழந்தையின் மூளையை பாதிக்கிறது - டென்மார்க் ஆய்வு தகவல்!

|

பொதுவாகவே ஒருவர் சாப்பிடும் விதம் மற்றும் உணவு வகையை வைத்து ஒருவரை பற்றி கூறிவிட முடியும் என கூறுவார்கள். ஆனால், உங்கள் தந்தை சாப்பிடுவதும் கூட இனிமேல் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒன்று தான் என்கிறார்கள் டென்மார்க் ஆய்வாளர்கள்.

இரவு இந்த உணவுகளை பாலில் கலந்து குடித்து வந்தால், விந்து உற்பத்தி அதிகரிக்கும்!!

சமீபத்திய ஆய்வில், ஒருவரின் உடல் எடை அவரது விந்தணுவில் இருக்கும் மரபணுக்களை பாதிக்கிறது, அதிக தாக்கம் ஏற்படுத்துகிறது என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த நபருக்கு வருங்காலத்தில் பிறக்க போகும் குழந்தையின் மரபணுவில்ஆயிரக்கணக்கான மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன......

ஆண்கள் ஏன் இரவில் நிர்வாணமாக தூங்க வேண்டும்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விந்தணு மரபணு

விந்தணு மரபணு

விந்தணுவில் இருக்கும் மரபணுவில் உடல் எடை மற்றும் கொழுப்பின் காரணமாக ஏற்படும் மாற்றானது பிறக்கப் போகும் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் பசியை கட்டுப்படுத்தும் தன்மைகளில் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

டென்மார்க் ஆய்வு

டென்மார்க் ஆய்வு

டென்மார்க்கில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், உடல் பருமனாக இருக்கும் தந்தைகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் ஏன் உடல் எடை சார்ந்த பிரச்சனைகள் தொடர்ந்து வருகிறது என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

அம்மாக்கள் மட்டுமல்ல

அம்மாக்கள் மட்டுமல்ல

பொதுவாக குழந்தை பிறக்கும் போது கர்ப்பக் காலத்தில் அம்மாக்கள் தான் டயட்டில் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், கருத்தரிக்கும் முன்னர் இருந்தே தந்தை தனது உடல் பருமனை குறைத்துக் கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

கோபன்ஹேகன் பல்கலைக்கழகம்

கோபன்ஹேகன் பல்கலைக்கழகம்

குழந்தையை பாதிக்கும் தந்தையின் உடல் பருமன் குறித்து கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் (University of Copenhagen), முதன் முறையாக ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதில், ஸ்லிம்மாக இருக்கும் ஆண்களின் விந்தணு மற்றும் உடல் பருமனாக இருக்கும் ஆண்களின் விந்தணு போன்றவை கலந்தாய்வு செய்யப்பட்டது.

எபிஜெனிடிக் மாற்றங்கள்

எபிஜெனிடிக் மாற்றங்கள்

ஸ்லிம் ஆண்கள் மற்றும் உடல் பருமனாக இருக்கும் ஆண்களின் விந்தணுவில் இருக்கும் மரபணுக்களை கலந்தாய்வு செய்த போது, அதில் எபிஜெனிடிக் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர். இது உடல்நலத்தை பாதிக்கும் வகையில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

9000 மரபணுக்கள்

9000 மரபணுக்கள்

இந்த ஆய்வின் போது உடல் பருமன் காரணத்தால் மூளை வளர்ச்சி, பசி கட்டுப்பாடு போன்ற 9000 முக்கியமான மரபணுக்கள் பாதிக்கப்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதில் ஒரே நல்ல செய்தி என்னவெனில், விந்தணுவில் ஏற்படும் இந்த மாற்றம் நிரந்தரமானது அல்ல, பிற்காலத்தில் இதை சரி செய்துவிட முடியும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

உடல் பருமன் குறைக்க வேண்டும்

உடல் பருமன் குறைக்க வேண்டும்

உடல் பருமனாக இருந்த ஆறு ஆண்களின் விந்தணுவை ஆராய்ந்து, அவர்களை உடல் குறைக்க செய்து, அதன் பிறகு மீண்டும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலமாக உடல் பருமன் குறைத்த ஆண்களின் விந்தணு மரபணுக்களில் ஏற்பட்ட மாற்றங்கள் சரியாகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஆண்களே ஜாக்கிரதை

ஆண்களே ஜாக்கிரதை

எனவே, ஆரோக்கியமான குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் ஆண்கள், முன்னதாகவே உடல் பருமனை குறைத்துக் கொள்ள வேண்டும். மது போன்ற தீயப் பழக்கங்களை விட்டொழிக்க வேண்டும். இந்த டென்மார்க் ஆய்வு முடிவுகள் மிகவும் முக்கியமானது என மற்ற ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Your Dads Sperm Might Make You Fat

Your Dads Sperm Might Make You Fat!
Desktop Bottom Promotion