Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
இவற்றில் எது ஆரோக்கியமானது - சாதமா? சப்பாத்தியா?
இந்தியாவில் சாதம் மற்றும் சப்பாத்தி தான் மக்களால் அதிகம் சாப்பிடப்படுகிறது. அப்படி உண்ணும் உணவுகளில் ஆரோக்கியமானது சாதமா அல்லது சப்பாத்தியா என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை சொல்வார்கள். ஆனால் உண்மையில் எந்த ஒரு உணவையுமே அளவாக சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
வெள்ளை சாதம் சாப்பிடுவதை தவிர்த்தால் கிடைக்கும் நன்மைகள்!!!
இப்படி ஒரு சந்தேகம் எழுவதற்கு முக்கிய காரணம், இக்காலத்தில் பலர் அவஸ்தைப்படும் இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதரை ஆரோக்கிய பிரச்சனைகள் தான். எனவே சாதம் அல்லது சப்பாத்தியில் எது ஆரோக்கியமானது என்று ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
கோதுமையை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

சாதம்
பலர் சாதம் சாப்பிட்டால் உடல் பருமன், நீரிழிவு மற்றும் பல பிரச்சனைகள் வரும் என்று சொல்வார்கள். அது உண்மையா? பொதுவாக இக்காலத்தில் உள்ள அரிசி எல்லாம் நன்கு பாலிஷ் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அரிசியின் மேல் உள்ள நார்ச்சத்தான தவிடு முற்றிலும் நீக்கப்படுகிறது. அதிலும் சமைக்கும் போது அரிசியை நன்கு கழுவுவதால், அதில் ஒட்டிக் கொண்டுள்ள மிஞ்சிய சத்தும் நீரில் போய்விடுகிறது. இதனால் அரிசியில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்றவையும் போய்விடுகிறது.

கைக்குத்தல் அரிசி
வேண்டுமெனில் வெள்ளை அரிசிக்கு பதிலாக கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்தலாம். ஏனெனில் இது பாலிஷ் செய்யப்படாதது. மேலும் இது சப்பாத்தியை விட ஆரோக்கியமானதும் கூட.

சாப்பாத்தி
சப்பாத்தி செய்யப் பயன்படுத்தும் கோதுமை மாவில் நார்ச்சத்து (சலிக்காமல் இருந்தால்), புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்களான இரும்புச்சத்து, கால்சியம், செலினியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்றவை உள்ளது. இவ்வளவு சத்துக்களை கோதுமை தன்னுள் அடக்கியுள்ளதால், சப்பாத்தி சாதத்தை விட ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

சோடியம் மற்றும் பொட்டாசியம்
சப்பாத்தியில் சோடியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. ஆனால் சாதத்தில் சோடியம் (உப்பு சேர்க்காமல் இருந்தால்) குறைவு மற்றும் பொட்டாசியமும் அளவாகத் தான் உள்ளது. எனவே சோடியம் மற்றும் பொட்டாசியம் குறைவாக சேர்த்துக் கொள்ள வேண்டியவர்கள், சப்பாத்தியைத் தவிர்த்து, சாதத்தை எடுப்பது நல்லது.

சாதம் எளிதில் செரிமானமாகும்
சாதத்தில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், அது எளிதில் செரிமானமாகும். எனவே வயிற்றுப் போக்கு மற்றும் செரிமான பிரச்சனை உள்ளவர்கள், சாதத்தை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.

நீரிழிவு நோயாளிகள்
நீரிழிவு நோயாளிகளுக்கு சப்பாத்தி தான் சிறந்தது. ஏனெனில் சாதத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமாக உள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். எனவே நீரிழிவு நோயாளிகள் சாதத்தை தவிர்ப்பது தான் நல்லது.

உடல் பருமன்
உடல் பருமன் உள்ளவர்கள், நார்ச்சத்து அதிகம் நிறைந்த சப்பாத்தியை சாப்பிடுவது தான் நல்லது. எப்போதும் சாதத்தையே சாப்பிட்டு வந்தால், அதிலும் இரவில் சாப்பிட்டால், உடல் பருமன் அடையும்.



Click it and Unblock the Notifications
