Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
நாள் முழுக்க மியூசிக் கேட்பவரா நீங்கள்? இதப் படிச்சுட்டு இனிமே சந்தோசமா கேளுங்க!!!
இசை என்பது யாராலும் வெறுக்க முடியாத ஓர் கலை. ஒருவேளை ஒருவர் இசையை வெறுக்கிறார் என்றால் அவருக்கு மனநிலையில் ஏதேனும் கோளாறு அல்லது உயர் அழுத்தம் இருக்க வாய்பிருக்கிறது. இதில் விசித்திரம் என்னவென்றால், இந்த இரண்டிற்கும் சிறந்த மருந்தாக திகழ்வதே இந்த இசை தான்.
இசை என்பது நமது மனதை பக்குவப்படுத்த, மனநிலையை கட்டுப்படுத்த, மேலோங்க வைக்க உதவும் ஓர் கருவி ஆகும். ஒவ்வொரு வகையான இசை ஒவ்வொருவருக்கு பிடிக்கும். ஆனால், மெல்லிசை, இன்னிசை போன்றவற்றை கேட்பதால் நமது உடலில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.....

நினைவாற்றல்
இனிமையான இசையை நீங்கள் தினமும் கேட்பதால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கிறது. இதனால் உங்கள் ஞாபகமறதியும் குறைகிறதாம். இதற்கு காரணம் நீங்கள் இனிமையான இசையை கேட்கும் போது வெளிப்படும் டோபமைன் என்று கூறப்படுகிறது.

மனநிலை
மேலும் நீங்கள் இனிய இசையை கேட்கும் போது வெளிப்படும் நியூரோ கெமிக்கல் டோபமைன் உங்கள் மனநிலையை மேலோங்க செய்கிறது, மனநிலை மேன்மையடைய ஊக்குவிக்கிறது.

உற்பத்தி திறன்
ஒருவர் அவருக்கு பிடித்த இனிமையான இசையைக் கேட்டுக் கொண்டே அவரது வேலையில் ஈடுபடும் போது அந்த வேலைகளில் சிறந்து ஈடுபடுகிறார் மற்றும் அந்த வேலையின் முடிவுகளும் சிறந்த முறையில் வெளிபடுகிறது என்று கூறப்படுகிறது.

இரத்த அழுத்தம்
நீங்கள் கேட்கும் இசை உங்கள் இரத்த அழுத்தத்தை ஏற்றவும், குறைக்கவும் செய்கிறது. இனிமையான இசை உங்கள் இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. மற்றும் குத்துப் பாடல்களை கேட்கும் போது நாடி, நரம்புடன் சேர்ந்து இரத்தமும் கொஞ்சம் ஆட ஆரம்பித்துவிடுகிறது. எனவே, இனிமையான இசையை கேட்பது இரத்த அழுத்தத்தை சீராக்க உதவும் ஓர் மருந்தாக இருக்கிறது.

உடற்பயிற்சி
சிலர் ஏன் உடற்பயிற்சி மையத்தில் பாடல்கள் ஒலிக்க செய்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புவது உண்டு. ஆனால், உண்மையில் பாடல் அல்லது இசையைக் கேட்டுக் கொண்டே உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கடினமாகவும், நீண்ட நேரமும் உடற்பயிற்சியில் ஈடுபட முடிகிறது என்று கூறப்படுகிறது.

நல்ல உறக்கம்
நல்ல இசையைக் கேட்பது, உங்கள் மன அழுத்தத்தை குறைத்து, இதயத் துடிப்பை சீராக்கி, நல்ல உறக்கத்தை தருகிறது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி
தினமும் இனிமையான இசையை கேட்பதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதற்கு காரணம் மன அழுத்தத்தால் வெளிப்படும் கார்டிசோல் எனும் ஹார்மோனை இது குறைக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம், இதய கோளாறுகள், ஞாபக மறதி போன்ற பிரச்சனைகள் குறைகின்றன.



Click it and Unblock the Notifications
