நார்ச்சத்து டயட்டை மேற்கொள்வதால் கிடைக்கும் அபரிமிதமான நன்மைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

நமது உடலுக்கு எல்லா ஊட்டச்சத்துக்களும் தேவை தான். ஆனால், ஒரு சில ஊட்டச்சத்துக்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது கட்டாயம் என்ற பலரும் அறிவதில்லை. புரதம், வைட்டமின், கால்சியம், நார்ச்சத்து போன்றவை நாம் தினசரி உணவில் மறவாமல் சேர்த்துக் கொள்ள வேண்டிய சத்துக்கள் ஆகும்.

கால்சியம் நமது எலும்புகளை வலுவாக்கவும், புரதம் உடற்சக்தியை அதிகரிக்கவும், நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீரான முறையில் செயல்படவும் பலனளிக்கின்றன. இதில் நார்ச்சத்தை தினசரி உணவு முறையில் சேர்த்துக் கொள்வதால் நமது உடலுக்கு நிறைய பயன்கள் கிடைக்கின்றன. அவற்றை பற்றி இனிக் காண்போம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும்

புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும்

தினமும் உங்கள் உணவில் நார்ச்சத்தை சேர்த்துக் கொள்வதால் உடலில் இருக்கும் நச்சுக்களை அழிக்க பயனளிக்கிறது. இது பெருங்குடலில் இருக்கும் நச்சுக்களை போக்கி பெருங்குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

நார்ச்சத்து உடலில் இரத்த அழுத்தத்தை சீரான அளவில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

நீரிழிவு

நீரிழிவு

தற்போதைய நிலையில் டைப் 2 நீரிழிவு என்பது சாதாரண நோயாக மாறி வருகிறது. இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க நார்ச்சத்து உதவுகிறது. நார்ச்சத்து இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது.

உடல் எடை குறைக்க

உடல் எடை குறைக்க

நார்ச்சத்து உணவுகளில் கலோரிகள் குறைவு மற்றும் வயிறை நிரப்பிவிடும். இது அதிகப்படியான பசியை குறைக்க உதவுகிறது. இதனால் நார்ச்சத்து டயட் முறை உடல் எடையை குறைக்க வெகுவாக பயனளிக்கிறது.

கடைசி வரை தேவை

கடைசி வரை தேவை

எல்லா வயது மக்களுக்கும் நார்ச்சத்து என்பது தேவையான ஓர் ஊட்டச்சத்து ஆகும். ஏனெனில் இது செரிமானத்தை ஊக்கவிக்கும் சத்தாகும். மற்றும் உடற்சக்தியை தரவல்லது நார்ச்சத்து.

அளவாக உட்கொள்ள வேண்டும்

அளவாக உட்கொள்ள வேண்டும்

நல்ல உணவாக இருப்பினும் இதை அளவாக உட்கொள்ள வேண்டியது அவசியம். பெரியவர்கள் தினமும் அதிகபட்சம் 30 கிராம் நார்ச்சத்து உடலுக்கு உட்கொள்வது சரியான அளவு என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், நாம் தினமும் 15 கிராம் அளவு கூட எடுத்துக் கொள்வது இல்லை.

வயிற்றுக்கு நல்லது

வயிற்றுக்கு நல்லது

நார்ச்சத்து குறைபாடு செரிமான பிரச்சனைகளை உருவாக்கும். குடல் இயக்கத்திற்கு மிகவும் அவசியமான சத்து நார்ச்சத்து. தானிய உணவுகளை தினமும் வேக வைத்து சாப்பிடுவதன் மூலம் நிறைய நார்ச்சத்து கிடைக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Does Fibre Do To Our Body

Fibre is one of the most important elements you should add to your daily diet. Fibre helps to keep you active and aids in other benefits too. Take a look.