Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
காரசாரமான.. ஆட்டுக்கறி தொக்கு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
Mutton Thokku Recipe In Tamil: இந்த வார விடுமுறையில் உங்கள் வீட்டில் மட்டன் சமைக்க போகிறீர்களா? எப்போதும் மட்டனை வாங்கினால் ஒரே மாதிரி குழம்பு, கிரேவி, சுக்கா என்று தான் செய்வீர்களா? அதை விட்டால் பிரியாணி செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை மட்டன் வாங்கினால், சிம்பிளான மட்டன் தொக்கு ரெசிபியை செய்யுங்கள். இந்த ரெசிபிக்கு மசாலா பொடி அதிகம் தேவைப்படாது. வெறும் மிளகாய் தூள் இருந்தாலே போதுமானது. ஆனால் இந்த தொக்கு சுவையாக இருக்க வேண்டுமானால், குறைவான தீயில் வைத்து சமைக்க வேண்டும். இப்படி செய்யும் போது மட்டன் தொக்கு வேற லெவல் டேஸ்ட்டில் இருக்கும்.

இந்த மட்டன் தொக்கு ரெசிபி குறித்து வேம்பு கார்த்திக் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு இந்த மட்டன் தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எபபடி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருதுக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 5
* ஏலக்காய் - 5
* பட்டை - 1 இன்ச்
* அன்னாசிப்பூ - 1
* கல்பாசி - 1 துண்டு
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 3 (பொடியாக நுறுக்கிரு)
* மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - சிறிது
* மட்டன் - 1/2 கிலோ
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - 4-6 கப்
செய்முறை:
* முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய்,
அன்னாசிப்பூ, கல்பாசி ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும்
வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
கறிவேப்பிலை தூவி நன்கு எண்ணெய் பிரிய கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் மட்டனை கழுவி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் 4-6 கப் நீரை ஊற்றி கிளறி, மிதமான தீயில் வைத்து 2
மணிநேரம் மட்டனை நன்கு வேக வைத்து இறக்கினால், சுவையான மற்றும்
காரசாரமான மட்டன் தொக்கு தயார்.



Click it and Unblock the Notifications