உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

தற்போது மனிதர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு கஷ்டப்படுகின்றனர். அதில் சில நோய்கள் நுண்ணுயிரிகளால் வந்தாலும், பல நோய்கள் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் தான் ஏற்படுகிறது. அதில் தற்போது ஆண்கள், பெண்கள் என இருவரும் மேற்கொள்ளும் ஒரு மோசமான பழக்கம் தான் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல்.

இந்தியாவில் சுலபமாக கிடைக்கக்கூடிய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!!!

இதற்கு காரணம் அலுவல வேலைப்பளுவைக் கூறலாம். உலகில் சில மக்கள் அதிகப்படியான வேலைப்பளுவினால், மன அழுத்தம் அதிகரித்து தற்கொலை செய்து கொள்கின்றனர். இன்னும் சில மக்கள் இம்மாதிரியான கெட்ட பழக்கவழக்கங்களின் மூலம் தங்களின் மன அழுத்தத்தை போக்குகின்றனர்.

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அழிக்கும் உணவுகள்!!!

ஆனால் இந்த பழக்கவழக்கங்களால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டு, அதனால் வேறு பல நோய்களுக்கு உள்ளாகக்கூடும் என்பது தெரியுமா? உலகில் மனிதன் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நோயெதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பானங்கள்!!!

ஆகவே உங்களுக்கு இவ்வுலகில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக நோயின்றி வாழ ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை மனதில் கொண்டு பின்பற்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகை நமக்கு பகை

புகை நமக்கு பகை

சிகரெட் பிடிப்பதால், டென்சன் குறையும் என்று பலர் சொல்வார்கள். ஆனால் அப்படி சிகரெட் பிடிப்பதால், டென்சன் குறைவதோடு, உங்கள் வாழ்நாளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டுள்ளது என்பதை மறக்க வேண்டாம். உங்களுக்கு நீண்ட நாட்கள் நோயின்றி வாழ ஆசை இருந்தால், நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்.

பச்சை காய்கறிகளை சாப்பிடுங்கள்

பச்சை காய்கறிகளை சாப்பிடுங்கள்

பச்சை காய்கறிகளான கீரைகள், முட்டைக்கோஸ், ப்ராக்கோலி போன்றவற்றை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்து வாருங்கள். ஏனெனில் இவற்றில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், அவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கி, உடலை பிட்டாக வைத்துக் கொள்ள உதவும்.

ஜங்க் உணவுகளை தவிர்க்கவும்

ஜங்க் உணவுகளை தவிர்க்கவும்

இன்றைய காலத்தில் எங்கு பார்த்தாலும் ஜங்க் உணவுகள் தான் விற்கப்படுகிறது. இவற்றில் இருந்து ஒவ்வொருவரும் விலகி இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இந்த உணவுகளில் கொழுப்புக்கள் வளமாக நிறைந்திருப்பதால், அவை உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். அதற்காக இதனை சாப்பிடவே கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் 3-4 மாதங்களுக்கு ஒருமுறை என்று ருசிக்காக கொஞ்சமாக சாப்பிடுவது நல்லது.

தினமும் உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி மேம்படும். அதற்காக கடுமையான உடற்பயிற்சியை செய்ய வேண்டும் என்பதில்லை. தினமும் சிம்பிளான உடற்பயிற்சியை மேற்கொண்டாலே போதுமானது.

யோகாவின் மகிமை

யோகாவின் மகிமை

இந்தியாவில் தோன்றிய யோகாவின் மகிமை உலகின் மூலை முடுக்குகளில் உள்ளோருக்கு தெரிந்திருக்கையில், இந்தியாவில் இருக்கும் நாம் ஏன் நோயை விரட்ட வேறு வழியை தேட வேண்டும். யோகாவைக் கொண்டு எந்த வகையான ஆரோக்கிய பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும் என்று இருக்க, அதனை அன்றாடம் செய்து அதனை பலனைப் பெறலாமே!

உடல் பருமனைக் குறையுங்கள்

உடல் பருமனைக் குறையுங்கள்

உடல் பருமன், இன்று பலரும் அவஸ்தைப்படும் ஒன்று. இதற்கு முக்கிய காரணம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வது எனலாம். மேலும் உடல் பருமன் ஏற்பட்டால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி தான் முதலில் பாதிக்கப்படும். ஆகவே உடல் பருமன் ஏற்படாமல் இருக்க, உணவில் கட்டுப்பாடு மற்றும் போதிய உடற்பயிற்சி அவசியம்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

இந்தியாவில் 10 இல் 6 பேர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர் மற்றும் தாழ் இரத்த அழுத்தம் இரண்டுமே நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும். எனவே இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

மது அருந்துவதைத் தவிர்த்திடுங்கள்

மது அருந்துவதைத் தவிர்த்திடுங்கள்

மது அருந்துவதால், அதன் பாதிப்பு உடனே தெரியாது. ஆனால் அது உடலின் உட்பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கும். முக்கியமாக மது முதலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை தான் தாக்கும். எனவே அதனைக் குடிக்கும் பழக்கத்தை முதலில் கைவிடுங்கள்.

ஓய்வு எடுக்கவும்

ஓய்வு எடுக்கவும்

உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலிமையுடன் இருப்பதற்கு ஓய்வு எடுப்பது மிகவும் அவசியம். அதிலும் குறைந்தது 6-7 மணிநேர தூக்கம் ஒவ்வொருவருக்கும் மிகவும் இன்றியமையாதது.

மருத்துவ பரிசோதனை

மருத்துவ பரிசோதனை

நோய்கள் எப்போது தாக்கும் என்று சொல்ல முடியாது. ஆகவே வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. இதனால் உடலில் மறைந்திருக்கும் நோய்களை கண்டறிந்து, ஆரம்பத்திலேயே போதிய சிகிச்சை எடுக்கலாம்.

வழக்கமான வாழ்க்கையை வாழுங்கள்

வழக்கமான வாழ்க்கையை வாழுங்கள்

தினமும் ஒரே மாதிரியான பழக்கங்களை மேற்கொண்டு வழக்கமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி சீராக இருக்கும்.

வாரம் ஒருமுறை வெளியே செல்லுங்கள்

வாரம் ஒருமுறை வெளியே செல்லுங்கள்

வாரம் ஒருமுறை காதலி அல்லது மனைவி அல்லது நண்பர்களுடன் வெளியே சுற்றுங்கள். இதனால் மன அழுத்தம் குறைந்து, நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ways To Keep Your Immunity Level High

Here are the best ways to keep your immunity level high. These ways will boost your immunity. Also there are the habits that makes your immunity level high. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter