Latest Updates
-
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க..
நீங்க ஆபிஸ்ல குட்டி தூக்கம் போடுவீங்களா?
நல்ல உறக்கம் தான் உங்களது நல்ல ஆரோக்கியத்தின் முதல் அறிகுறி. தூக்கத்தில் சிக்கல் அல்லது குளறுபடி நேர்கிறது எனில், உங்கள் உடலில் எங்கோ பிரச்சனை ஏற்படுகிறது என்று அர்த்தம். இதை பெரும்பாலும் யாரும் அறிவதில்லை. தூக்கமின்மையும் சரி, மிகுதியான தூக்கமும் சரி இரண்டுமே உடலுக்கு நல்லதல்ல.
எனவே, தூக்கத்தை பற்றி நீங்கள் நன்கு அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். வேலைக்கு இடையே கூட குட்டி தூக்கம் போடலாம். இது உங்களை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். அதற்காக மணிக் கணக்கில் எல்லாம் தூங்குவது மிகவும் தவறு.....

தூக்கம்
காலை வேளையில் குட்டி தூக்கம் போடுவது மிகவும் இயற்கையான ஒன்று. இதை சிலர் சோம்பல், சோம்பேறிதனம் என கருதுவதுண்டு. ஆனால், இது உங்கள் உடல்நலத்திற்கு நல்லது தான். இது உங்கள் இரவு தூக்கத்தை எக்காரணம் கொண்டும் கெடுப்பது இல்லை. மற்றும் உங்கள் வேலையில் சிறந்து செயல்பட குட்டி தூக்கம் உதவுகிறது.

30 நிமிடங்கள்
குட்டி தூக்கம் என்பது 30 நிமிடங்களை தாண்டி இருக்கக் கூடாது. பிறகு நீங்கள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிடுவீர்கள். பிறகு தட்டி தடுமாறி எழ வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

டிவி
உங்கள் உறக்கத்தை பெரும்பாலும் கெடுப்பது டிவி, மொபைல் தான். இது உங்களை ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லவிடாமல் தடுக்கிறது. இதனால் தான் பெரும்பாலும் பலர் காலை எழுந்தும் சோம்பலாக இருக்கிறது, உடல் சோர்வாக இருக்கிறது என்று கூறுவதன் காரணம்.

ஆல்கஹால்
சிலர் மது அருந்துவதால் நல்ல உறக்கம் வருவதாக கூறுவதுண்டு. ஆல்கஹால் விரைவாக தூங்க வைக்கும் எனிலும் , இது உறக்கத்தின் தன்மையை கெடுக்கிறது. இதனால் நாள்ப்பட உங்கள் தூக்க சுழற்சி முற்றிலும் மாறுப்படும், எதிர்வினை தாக்கங்கள் ஏற்படும்.

பதட்டம், மன அழுத்தம்
பெரும்பாலும் தூக்கமின்மை என்பது பதட்டம், மன அழுத்தம் உள்ளவர்களுக்கு தான் ஏற்படும் என்று எண்ணுவது தவறு. தூக்கமின்மை யாருக்கு வேண்டுமானலும் வரலாம். இது நீங்கள் உட்கொள்ளும் மருந்து, வாழ்வியல் முறை சார்ந்து கூட ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

நாள்முழுக்க விழித்திருப்பது
இரவு கொஞ்சம் கூட தூங்காமல் நாள்முழுக்க விழித்திருப்பது உங்கள் உடல்நலத்தை வெகுவாக பாதிக்கும். எனவே, வேலையாக இருந்தாலும் சரி, நண்பர்களுடன் வெளியே சென்று குதூகலிப்பதாக இருந்தாலும் சரி இரவு சரியான தூக்கம் அவசியம்.

எப்போதும் மயக்கம்
சிலர் எப்போதுமே தூங்கி வலிந்தப்படியே இருப்பார்கள். இவ்வாறு இருப்பவர்கள் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். இதை வெறும் சோம்பேறித்தனம் என்று கூறிவிட முடியாது. இது உடல் உறுப்புகளில் ஏற்படும் ஏதேனும் குளறுபடியின் அறிகுறியாக கூட இருக்கலாம்.



Click it and Unblock the Notifications
