உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

உடலில் நோயெதிர்ப்பு சக்தி வலிமையோடு இருப்பதற்கு, சில உலோகங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதில் ஒன்று தான் இரும்புச்சத்து. இந்த இரும்புச்சத்து உடலில் குறைவாக இருந்தால், அதை அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது. மேலும் ஆராய்ச்சியாளர்கள் பலரும் பெண்கள் தான் இப்பிரச்சனையால் அதிகம் கஷ்டப்படுவதாக கூறுகின்றனர்.

இரத்த வகைகளும்... அதற்கான சரியான டயட்டும்...

சரி, இரும்புச்சத்து ஏன் இன்றியமையாதது என்று தெரியுமா? பொதுவாக இது ஹீமோகுளோபினின் முக்கியமான பகுதி. அதுமட்டுமின்றி, இதுதான் நுரையீரல் மற்றும் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை சுமந்து செல்கிறது. இதில் குறைபாடு ஏற்பட்டால், உடல் செயல்பாடுகளில் பிரச்சனை ஏற்படும்.

இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுக்களின் அளவை அதிகரிக்கும் உணவுகள்!!!

சரி, இப்போது உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோர்வு

சோர்வு

உடலில் சோர்வு அதிகம் இருந்தால், அதற்கு முதன்மையான காரணம் இரும்புச்சத்து குறைபாடு தான். இதன் குறைபாட்டினால், ஆக்ஸிஜன் உடலில் குறைந்து, ஆற்றல் குறைபாடு ஏற்படுகிறது. அதிலும் சிறு வேலை செய்தால் கூட மிகுந்த சோர்வு ஏற்படும்.

மூச்சுவிடுவதில் சிரமம்

மூச்சுவிடுவதில் சிரமம்

மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டால், ஒன்று நுரையீரல் பிரச்சனையாக இருக்கும் அல்லது இரும்புச்சத்து குறைபாடாக இருக்கும்.

அதிகப்படியான இரத்தப்போக்கு

அதிகப்படியான இரத்தப்போக்கு

மாதவிடாய் காலத்தில் இரத்தப் போக்கு அளவுக்கு அதிகம் ஏற்பட்டால், அதற்கு காரணமும் இரும்புச்சத்து குறைபாடு தான். எனவே மாதவிடாய் காலத்தில் எண்ண முடியாத அளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டால், மருத்துவரை சந்தியுங்கள்.

தசை வலி

தசை வலி

உங்கள் தசைகளில் அடிக்கடி எரிச்சலுடன் கூடிய வலி ஏற்படுகிறதா? அதுவும் உடற்பயிற்சி செய்த பின் கூட இம்மாதிரியான வலி ஏற்படலாம். அப்படியெனில், உங்களின் உடலில் இரும்புச்சத்து குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

வெளிரிய சருமம்

வெளிரிய சருமம்

கன்னங்கள், உதட்டின் உள்ளே மற்றும் கண் இமைகளுக்கு அடிப்பகுதியில் உங்கள் சருமம் வெளிரிப் போயிருந்தால், மருத்துவரை சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதென்று அர்த்தம். ஏனெனில் உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகள் தான் அவை.

ஐஸ், சாக்பீஸ், களிமண் போன்றவை

ஐஸ், சாக்பீஸ், களிமண் போன்றவை

சில குழந்தைகள் சாக்பீஸ், பேப்பர் அல்லது களிமண் சாப்பிடுவதை கண்டிருப்பீர்கள். இதற்கு காரணம் இரும்புச்சத்து குறைபாடு தான். இக்குறைபாட்டினால் தான் இப்பழக்கங்களைப் பின்பற்ற நேரிடுகிறது. இது நம்பமுடியாதவாறு இருந்தாலும், அது தான் உண்மை.

தலைவலி

தலைவலி

நீங்கள் கடுமையான தலைவலியை பல நாட்களாக உணர்ந்து வந்தால், இரும்புச்சத்து குறைபாட்டினால் உங்கள் மூளைக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை என்று அர்த்தம். எனவே நீங்கள் அடிக்கடி தலைவலியால் கஷ்டப்பட்டால், மருத்துவரை உடனே சந்தியுங்கள்.

பதற்றம்

பதற்றம்

பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படக்கூடும். ஆனால் பதற்றமானது நரம்புகளினால் ஏற்படுவது. நீங்கள் சமீப காலமாக அதிகமாக பதற்றமடைந்தால், உங்களின் இரும்புச்சத்தின் அளவை பரிசோதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள் என்று அர்த்தம். ஏனெனில் உங்கள் இதயம் போதிய ஆக்ஸிஜன் கிடைக்காததால், வேகமாக துடித்து, அதனால் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, பதற்றம் ஏற்படுகிறது.

முடி உதிர்தல்

முடி உதிர்தல்

முடி உதிர்தலுக்கு பல காரணங்கள் இருந்தாலும், இரும்புச்சத்து குறைபாடும் ஓர் முக்கிய காரணமாகும். நீங்கள் அளவுக்கு அதிகமான இரும்புச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருதுந்தால், உங்கள் முடி அதிகமாக உதிர்வதை நீங்கள் காணலாம். அதுமட்டுமின்றி, இது நீடித்தால், நாளடைவில் வழுக்கைத் தலை கூட ஏற்படும் வாய்ப்புள்ளது.

ஹைப்போ தைராய்டு

ஹைப்போ தைராய்டு

உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், தைராய்டு ஹார்மோன்கள் குறைவாக சுரக்கப்பட்டு, அதனால் ஹைப்போ தைராய்டு ஏற்படும். எனவே கவனமாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Signs of Iron Deficiency

Check our list of top 10 signs of iron deficiency in this article today. Read on to know more about the iron deficiency symptoms.
Story first published: Friday, September 18, 2015, 14:07 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter