டாக்டர் கிட்ட தப்பி தவறியும் இந்த ஆறு பொய் சொல்லிடாதீங்க - ஜாக்கிரதை!!!

Posted By:
Subscribe to Boldsky

மருத்துவரிடமும், வழக்கறிஞரிடமும் பொய் கூறக் கூடாது என்பார்கள். ஏனெனில், அப்போது தான் அவர்கள் உங்களது உயிரையும், வாழ்க்கையையும் காப்பாற்ற முடியும். நீங்கள் சங்கோஜம், வெட்கம் காரணமாகவும், இதெல்லாம் சின்ன விஷயம் என்று கருதும் பொய்கள் தான் பின்னாட்களில் ஏற்படும் பெரிய விளைவுகளுக்கான முக்கிய காரணமாக அமைகிறது.

இதில், மருத்துவரிடம் நீங்கள் எக்காரணம் கொண்டும் பொய் கூறக் கூடாது. மருத்துவர் என்பவர் உங்களை காப்பதற்காக தான் போராடுகிறார் அவரிடம் பொய் கூறி உங்களுக்கு நீங்களே ஆப்பு வைத்துக் கொள்ள வேண்டாம். மருத்துவரிடம் பொதுவாக மக்கள் ஓர் ஆறு பொய் கூறுவார்கள் (அ) உண்மையை மறைப்பார்கள்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தினமும் இரண்டு முறை

தினமும் இரண்டு முறை "கடன்" கழிப்பது

உங்கள் உடல்நிலை நல்ல நிலையில் தான் இருக்கிறது என்பதை நீங்கள் தினமும் சராசரியாக இரண்டு முறை மலம் கழிக்கிறீர்கள் என்பதை வைத்தே அறிந்து விடலாம். குடல் இயக்கத்தில் பிரச்சனை இருந்தால் மலம் கழிப்பதில் கோளாறு ஏற்படும். எனவே, மருத்துவரிடம் சங்கோஜப் பட்டுக்கொண்டு இதற்கு பொய் கூற வேண்டாம்.

புகை பழக்கம்

புகை பழக்கம்

பலர் கூறும் பொய் இதுதான். புகைபிடிப்பதை தைரியமாக கூற முடியவில்லை எனில், பிறகு எதற்கு அந்த பழக்கத்தை விட தவறுகிறீர்கள். புகை பழக்கமானது மருந்துகள் அதன் வேலையை சரிவர செய்யவிடாமல் தடுக்கும். மென்மேலும் உங்கள் உடல்நலனுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே, புகை பழக்கம் இல்லை என பொய் கூற வேண்டாம்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

சிலர் அவர்களுக்கு மன அழுத்தம் இருந்தாலும் கூட அதை மருத்துவர்களிடம் கூறுவது இல்லை. சிலருக்கு அவர்களுக்கு மன அழுத்தம் இருப்பதே தெரிவதில்லை. மன அழுத்தம் ஏற்படுவதால் நிறைய உடல்நல குறைபாடுகளை சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பாதுகாப்பற்ற உடலுறவு

பாதுகாப்பற்ற உடலுறவு

99%அனைவரும் பொய் கூறும் விஷயம் இதுதான். பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுவதால் பால்வினை நோய் ஏற்படும். வேறு காரணங்களாலும் கூட இது ஏற்பட வாய்ப்புள்ளதால், தங்களை நல்லவர்களாக காட்டிக் கொள்வதற்காக இந்த பொய்யை அனைவரும் கூறுகிறார்கள். ஆனால், உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டுமெனில் நீங்கள் உண்மையை மறைக்க கூடாது.

வேறு மருந்துகள் எடுத்துக் கொள்வதில்லை

வேறு மருந்துகள் எடுத்துக் கொள்வதில்லை

பெரும்பாலும் மருத்துவரிடம் செல்லும் நபர்கள், நீங்களாக ஏதாவது மருந்துகள் எடுத்துக் கொண்டீர்களா என்றால், ஏதோ பிரின்சிபால் மிரட்டியதை போல, "இல்லை... இல்லை" என தலையை ஆட்டிவிடுவர்கள். இதனால் பாதிப்பு உங்களுக்கு தான். நீங்கள் என்ன மருந்து உட்கொண்டீர்கள் என்று அறிந்தால் தான் மருத்துவர் உங்களுக்கு ஏற்ற மருத்துவம் மற்றும் அது சரியா, தவறா என்று உங்களிடம் கூற முடியும்.

தினமும் உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி செய்கிறேன் என்று பொய் கூற வேண்டாம். உட்கார்ந்தே வேலை செய்யும் தற்போதைய முறையினால் தான் நிறைய உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன. அதற்காக தான் உங்களை மருத்துவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய கூறுகிறார்கள். இதை நீங்கள் மருத்துவரிடம் மறைப்பது உங்கள் உடல்நலனுக்கு தான் கேடு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Six Lies You Should NEVER Tell Your Doctor

Do you know about the 6 lies you should NEVER tell your doctor? read here.
Subscribe Newsletter