For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஊறுகாய் அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

|

"ஊறுகாய்..." என்று சொல்லும் போதே எல்லோருக்கும் நாக்கில் எச்சில் ஊரும். விருந்தில் தொடங்கி சரக்கிற்கு சைடு டிஷ் என்பது வரை இது இல்லாமல் உணவு முழுமை அடைவது இல்லை. தமிழனின் மட்டற்ற கண்டுபிடிப்பு என்று கூட ஊறுகாயை சொல்லலாம்.

வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக உட்கொள்வதனால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

ஆனால், எந்த ஒரு உணவாக இருந்தாலும் அதை அளவிற்கு மீறி உட்கொள்ளும் போது அது, நமது உடல்நலத்திற்கு எதிர்வினை பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. அளவிற்கு மீறினால் அமிர்தமே நஞ்சாகும் போது, ஊறுகாய் ஆகாதா என்ன.

ஷாப்பிங் மால்களில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

இனி, அதிகமாக ஊறுகாய் சாப்பிடுவதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமான பிரச்சனை...

செரிமான பிரச்சனை...

ஊறுகாயை அதிகமாக சாப்பிடுவதனால் செரிமான பிரச்சனைகள் ஏற்படுகிறதாம். ஊறுகாய் மட்டுமல்ல, எந்த ஒரு உணவையும் நீங்கள் அளவிற்கு மீறி உட்கொண்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

குமட்டல்...

குமட்டல்...

அதிகமான உணவிற்கு பின் ஏற்படும் குமட்டல், இதை பலரும் உணர்ந்திருக்கலாம். ஆனால், இதற்கு ஊறுகாய் தான் காரணம் என்று தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அளவிற்கு அதிகமாக சாப்பாட்டோடு சேர்த்து ஊறுகாயும் சாப்பிடும் போது குமட்டல் ஏற்படுமாம்.

உயர் இரத்த அழுத்தம்...

உயர் இரத்த அழுத்தம்...

பொதுவாக இரத்த கொதிப்பு உள்ளவர்களில் சிலர் இதை உணர்ந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அதிகமாக உப்பு சேர்த்து உணவு சாப்பிடும் போதும், ஊறுகாயை சேர்த்து சாப்பிடும் போதும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

சிறுநீரக செயல்திறன் குறைபாடு...

சிறுநீரக செயல்திறன் குறைபாடு...

அதிகப்படியாக ஊறுகாயை சேர்த்துக் கொள்வதனால், சிறுநீரகத்தின் வேலை பளு அதிகமாகிறது. இதனால் சிறுநீரகத்தின் செயல்திறனில் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றது.

வயிற்று புண்....

வயிற்று புண்....

அதிகமாக ஊறுகாய் சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் முதல் பக்கவிளைவாக கருதப்படுவது, வயிற்று புண். உங்களுக்கு தெரியுமா அல்சர் என்று சொல்லப்படும் இந்த வயிற்று புண் நாளடைவில் புற்றுநோயாக மாற வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நோய் தொற்று...

நோய் தொற்று...

மற்றவர்களோடு ஒப்பிடுகையில், ஊறுகாய் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு எளிதாக நோய் தொற்று ஏற்படுகிறதாம்.

கோபம் காரணமான மன அழுத்தம்...

கோபம் காரணமான மன அழுத்தம்...

ஊறுகாயை அளவிற்கு அதிகமாய் சாப்பிடுபவர்களுக்கு கோபம் காரணத்தினால் ஏற்படும் மன அழுத்தம் அதிகமாய் ஏற்படுகிறதாம்.

புற்றுநோய்...

புற்றுநோய்...

ஓர் ஆராய்ச்சியில், புற்றுநோயால் இறந்தவர்களில் 90% க்கும் மேலானவர்கள் தொடர்ச்சியாக அதிகம் ஊறுகாய் சாப்பிட்டு வந்தவர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்நாட்களில், ஊறுகாயின் சுவைக்காகவும், பதப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் கூட இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Side Effects of Eating Too Many Pickles

Do you know about the side effects of eating too many pickles? read here.
Desktop Bottom Promotion