Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
கீரை வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும்
Andhra Keerai Thokku Recipe in Tamil: ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆரோக்கிய வாழ்க்கைக்கான தொடக்கமே நமது உணவில் இருந்துதான் தொடங்குகிறது என்று நம் முன்னோர்கள் கூறுகிறார்கள். நம் உணவுகளில் ஆரோக்கியமான பொருட்களை சேர்த்துக் கொள்வதன் மூலமே நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

ஆரோக்கியமான உணவுப்பொருட்கள் என்று வரும்போது எப்போதும் அந்த பட்டியலில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது கீரை வகைகள்தான். ஒவ்வொரு கீரையும் ஒரு குறிப்பிட்ட சத்துக்களை வழங்குகிறது. பொதுவாக கீரையை பொரியல் அல்லது சூப் செய்துதான் சாப்பிடுவோம். ஆனால் கீரையை அக்கட தேசமான ஆந்திராவில் பல வழிகளில் சமைப்பார்கள்.
முக்கியமாக ஆந்திராவில் செய்யப்படும் கீரை தொக்கு தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானதாகும். காரசாரமான இந்த கீரை தொக்கு சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இதை இட்லி, தோசை அல்லது சப்பாத்தி என எதனுடன் வேண்டுமென்றாலும் சைடிஷாக வைத்து சாப்பிடலாம். அனைத்திற்கும் மேலாக இதை செய்வது மிகவும் சுலபம்.
உங்களுக்கு காரசாரமான ஆந்திரா ஸ்டைல் கீரை தொக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் கீரை தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கீரை கட்டு
அரைக்க:
- 20 சின்ன வெங்காயம்
- 10 பூண்டு பல்
- 1 ஸ்பூன் மிளகாய்த் தூள்
- புளி - சிறிய நெல்லிக்காய்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க:
- 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- ¼ ஸ்பூன் சீரகம்
- 1 வர மிளகாய்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- முதலில் கீரையைக் நன்றாக கழுவி நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்சி ஜாரில் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, மிளகாய் தூள், நெல்லிக்காய், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். பின்னர் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் கடலைப்பருப்பு, சீரகம், வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- பருப்பு பொன்னிறமாக மாறியதும் அரைத்த விழுதைச் சேர்த்து, கெட்டியாகும் வரை சில நிமிடங்கள் நன்றாகக் கிளறவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் நறுக்கிய கீரையை நன்றாக கிளறவும், கீரை நன்றாக சுருங்கும் வரை வதக்கவும்.
- சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கீரையின் பச்சை வாசனை போய் கீரை நன்றாக வேகும் வரை கொதிக்க விடவும்.
- தொக்கு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சூப்பரான ஆந்திரா கீரை தொக்கு ரெடி. இதை சாதத்தில் போட்டு சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
