உடல் பருமன் பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில உண்மைகள்!!

Posted By:
Subscribe to Boldsky

உடல் பருமன் என்பது நீங்கள் அதிகமாக உணவு என்பதாலோ, சிறுதீனி உட்கொள்வதாலோ அல்லது உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதாலோ மட்டும் ஏற்படும் பிரச்சனை அல்ல. வேறு சில காரணங்களாலும் கூட உடல்பருமன் அதிகரிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள்!!!

சிலர் மிகவும் குறைவாக தான் சாப்பிடுவர்கள் ஆனால், உடல் எடை நூறை தாண்டியிருக்கும். சிலர் வயிறு புடைக்க உண்டாலும் ஒல்லிப்பிச்சான் போல தான் இருப்பார்கள். இது போன்ற நபர்கள் உங்கள் நட்பு வட்டாரத்திலும் கூட இருக்கலாம்.

வாழைப்பழ தோலில் இம்புட்டு விஷயமா? அவிழ்த்துவிட்ட அமெரிக்க ஆய்வாளர்கள்!!

வாழ்வியல் முறை மாற்றம், கருத்தரித்த போது உங்கள் அம்மா உட்கொண்ட உணவுமுறை போன்றவற்றின் காரணமாக கூட நீங்கள் இன்று உடல் பருமன் அதிகரித்து இருக்கலாம்....

குனிய முடியாத அளவில் தொப்பை இருக்கா? அதைக் குறைக்க இதோ சில வழிகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுத்திகரிக்கப்பட்ட கார்போ உணவுகள்

சுத்திகரிக்கப்பட்ட கார்போ உணவுகள்

இன்று நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகள் மைதா உணவுகளாக தான் இருக்கின்றன. பேக்கரி உணவுகள், குக்கீஸ், ஸ்நேக்ஸ் என இந்த பட்டியல் நீள்கிறது. மேலும் இதில் சேர்க்கப்படும் ஃப்ளேவர்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கின்றன. இவ்வாறு அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவு இன்சுலினை அதிகரித்து உடல் எடை அதிகரிக்க காரணமாக அமைகிறது. இதனால் உடல் பருமன் பிரச்சனை உண்டாகிறது.

மனைவியின் உடல் எடை

மனைவியின் உடல் எடை

தம்பதியில் ஒருவர் பருமனாகவும், ஒருவர் ஒல்லியாகவும் காட்சியளிப்பது அபூர்வம். சமீபத்திய ஆய்வொன்றில் உங்கள் துணை ஒல்லியாக அல்லது குண்டாக இருப்பது உங்கள் மீதும் தாக்கம் ஏற்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம் சுயமாக உண்டாகும் ஊக்குவிப்பு தான் என ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

பிறக்கும் போதே உடல்பருமன்

பிறக்கும் போதே உடல்பருமன்

ஆம், இது உண்மை தான். நீங்கள் கருவில் இருந்த போது உங்கள் தாய் நிறைய கொழுப்புச்சத்து நிறைந்த உணவை உண்டிருந்தால் நீங்கள் உடல்பருமனோடு தான் இருப்பீர்கள். இது ஒர்விதமான வளர்சிதை மாற்றம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

வளர்சிதை மாற்றங்கள்

வளர்சிதை மாற்றங்கள்

உங்கள் வளர்சிதை மாற்றத்தின் காரணத்தால் கூட உடல்பருமன் அதிகரிக்கலாம். சிலருக்கு தைராய்ட் பிரச்சனை ஏற்பட்ட பிறகு உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மன அழுத்தம் என்பது ஓர் நோய் அல்ல. ஆனால், இது உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கிறது. மன அழுத்தம் மற்றும் பதட்டம் கார்டிசோல் எனும் ஹார்மோன் சுரப்பியில் தாக்கம் ஏற்படுத்துகிறது. இந்த ஹார்மோன் உடல் எடை அதிகரிக்க செய்கிறது.

நல்ல உறக்கம்

நல்ல உறக்கம்

தூக்கமின்மை அல்லது நள்ளிரவு வரை தூங்காமல் இருப்பது போன்றவை உடல் எடையில் மாற்றம் ஏற்பட செய்கிறது. நல்ல உறக்கம் மிகவும் அவசியம். ஓர் ஆய்வில், சீரான முறையில் தூங்காமல் இருப்பது பசியில் குளறுபடியை உண்டாக்கி, உடல் பருமன் அதிகரிக்க செய்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Must-Know Facts About Your Weight

There are some important things about weight loss that you must know. These simple rules for weight decides whether you gain or lose weight. read here in tamil.
Story first published: Friday, November 13, 2015, 12:25 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter