Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
உணவில் வெண்ணெய் சேர்ப்பது நல்லதா?
உணவில் வெண்ணெய் சேர்ப்பது நல்லதா என்று கேட்டால் பலரும் உடனே சொல்வது 'இல்லை' என்று தான். ஏனெனில் இதனை உட்கொண்டால், இதில் நிறைந்துள்ள கொழுப்புக்களால் விரைவில் கொழுகொழுவென்று குண்டாகிவிடுவோம் என்பது தான் காரணம். ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமானால், அக்காலத்தில் நம் முன்னோர்கள் வெண்ணெயைத் தான் பெரும்பாலும் பயன்படுத்தினார்கள். ஆகவே வெண்ணெய் ஆரோக்கியமற்றது என்று கூற முடியாது. அதே நேரம் அளவாக எடுத்து வந்தால், இது மிகவும் ஆரோக்கியமானது.
ஏனெனில் எவ்வளவு தான் ஆரோக்கியமான பொருளாக இருந்தாலும், அளவுக்கு அதிகமானால், அதுவே உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அதனால் தான் சில நேரங்களில் பல வீட்டு சிகிச்சைகளில் இதனை பயன்படுத்துகின்றனர். இருப்பினும் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளும் முன், மருத்துவரிடம் ஒருமுறை கலந்தாலோரித்து பின் எடுத்துக் கொள்வது நல்லது.

கலோரிகள்
வெண்ணெயில் கலோரிகள் அதிகம் உள்ளது. ஆகவே இதனை அளவாக சாப்பிட்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

எடை கட்டுப்பாடு
வெண்ணெய் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும் என்பது தெரியுமா? ஆம், எப்படியெனில், வெண்ணெயில் லெசிதின் என்னும் பொருள் உள்ளது. இது கொலஸ்ட்ராலை கரைக்க உதவும். இப்படி கொலஸ்ட்ரால் கரைந்தால், உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு இதனை உணவில் அளவாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தொற்றுகள்
ஆம், வெண்ணெய் சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பான். எனவே இவற்றை உட்கொள்வதால், அது உடலில் ஏற்பட்டுள்ள சிறு நோய்த்தொற்றுகளை தடுக்கும்.

நோயெதிர்ப்பு
வெண்ணெய் சாப்பிடுவது, நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லது. ஏனெனில் இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக செயல்பட வழிவகுத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

ஸ்மார்ட்
வெண்ணெய் சாப்பிடுவதால் ஸ்மார்ட்டாக செயல்படலாம். அதாவது வெண்ணெய் மூளையின் செயல்பாட்டிற்கு மிகவும் சிறந்தது.

சருமம்
வெண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது. அதிலும் இதில் செலினியம் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்திருப்பதால், அது சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

புற்றுநோய்
ஆய்வு ஒன்றில் வெண்ணெயில் புற்றுநோயெர்ப்பு பொருள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இவற்றை உணவில் சிறிது சேரத்து வருவதன் மூலம் புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

குறிப்பிட்ட பிரச்சனைகள்
வெண்ணெயை இந்தியாவின் சில இடங்களில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை சரிசெய்யவும், தூக்கமின்மை மற்றும் பாலியல் பிரச்சனைகளை சரிசெய்யவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் வெண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் தான் இதனை ஆரோக்கியமற்றது என்று கூற முடியாது. ஆனால் அதற்கு இதனை சரியான அளவில் கவனமாக பயன்படுத்த வேண்டும்.

மூட்டுகளுக்கு நல்லது
வெண்ணெய் மூட்டுகளுக்கு மிகவும் நல்லது. அதிலும் நாள்பட்ட மூட்டுவலி அல்லது ஆர்த்ரிட்டிஸ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், வெண்ணெய் சாப்பிடுவது நல்லது. இதனால் மூட்டுக்களில் உராய்வு ஏற்படுவது தடுக்கப்பட்டு, மூட்டுகளில் வலி ஏற்படுவது தடுக்கப்படும்.



Click it and Unblock the Notifications
