For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம் உடலில் புழுக்கள் உள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வதென்று தெரியுமா?

குடல் ஒட்டுண்ணிகள் அல்லது குடல் புழுக்கள் என்பது மனித உடலினுள் புகுந்து, குடல் அல்லது உடலின் வேறு பகுதிகளில் வாழ்ந்து, உடலின் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி வாழும் சிறிய உயிரினமாகும்.

|

குடல் ஒட்டுண்ணிகள் அல்லது குடல் புழுக்கள் என்பது மனித உடலினுள் புகுந்து, குடல் அல்லது உடலின் வேறு பகுதிகளில் வாழ்ந்து, உடலின் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி வாழும் சிறிய உயிரினமாகும். குடல் ஒட்டுண்ணிகளால் தனித்து வாழ முடியாது. ஒட்டுண்ணிகளில் இரு வகைகள் உள்ளன. அவை ஹெல்மின்தீஸ் மற்றும் புரோட்டோஸோவா ஆகும். இதில் ஹெல்மின்தீஸ் வகை ஒட்டுண்ணியால் மனித உடலில் இனப்பெருக்க செய்ய முடியாது. ஆனால் புரோட்டோஸோவா வகை ஒற்றை செல் உயிரினம் மற்றும் இது மனித உடலினுள் புகுந்து வளரக் கூடியது.

MOST READ: குடலில் உள்ள புழுக்களை அழிப்பதற்கான சில எளிய இயற்கை வழிகள்!!!

நாடாப்புழுக்கள், உருளைப்புழுக்கள் மற்றும் ஊசிப்புழுக்கள் போன்றவை புரோட்டோஸோவா வகைக்கு சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். இந்த வகை ஒட்டுண்ணிகள் உடலில் தீவிர தொற்றுக்களை ஏற்படுத்தும். மேலும் இவை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது. சரி, இப்போது மனித உடலைத் தாக்கும் அந்த குடல் ஒட்டுண்ணிகளைக் குறித்து விரிவாக காணப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்படி உடலினுள் நுழைகிறது?

எப்படி உடலினுள் நுழைகிறது?

குடல் ஒட்டுண்ணிகளானது சுத்தமற்ற உணவுகள், தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் மூலம் ஒருவரின் உடலினுள் நுழைகிறது. எப்போது ஒருவர் சுத்தமில்லாத தண்ணீர் மற்றும் உணவுகளை உட்கொள்கிறாரோ, அவர்களின் உடலில் குடல் ஒட்டுண்ணிகள் நுழைந்திருக்க வாய்ப்புள்ளது. மோசமான சுகாதாரம், பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் போன்றவை கூட ஒட்டுண்ணிகளின் தாக்கத்தை அதிகரிக்கும். ஒருவரின் உடலில் ஒட்டுண்ணிகள் தாக்கினால், அது அருகில் உள்ளோரை எளிதில் தாக்கும்.

உடலினுள் புகுந்தால் என்ன நிகழும்?

உடலினுள் புகுந்தால் என்ன நிகழும்?

குடல் ஒட்டுண்ணிகள் உடலை தாக்கிவிட்டால், அவை நம் குடலை ஆக்கிரமித்து குடிப்புகுந்துவிடும். மேலும் நாம் உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்சி வாழ ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தால் அந்த ஒட்டுண்ணிகளை அழிக்க முடியாது. இருப்பினும் நம் உடலில் உள்ள நோயெதிர்ப்பு மண்டலம், அதனை எதிர்த்துப் போராடும் போது, அதனால் நம் உடலினுள் காயங்கள் ஏற்படக்கூடும்.

நமக்கு ஏற்படும் ஆபத்துக்கள் என்ன?

நமக்கு ஏற்படும் ஆபத்துக்கள் என்ன?

குடலில் ஒட்டுண்ணிகள் இருந்தால், அவை இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தும். ஏனெனில் இவை நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சி வாழ்வதால், நம் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் போகும். சில நேரங்களில் குடலில் அடைப்புக்கள் ஏற்பட்டு மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகும்.

குடல் ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்டிருப்பதை எப்படி அறிவது?

குடல் ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்டிருப்பதை எப்படி அறிவது?

குடல் ஒட்டுண்ணிகள் நம் குடலைத் தாக்கியிருந்தால், அதனை ஒருசில அறிகுறிகளின் மூலம் அறியலாம். அவை எடை குறைவு, வயிற்று வலி, குமட்டல், வாந்தி, ஆசன வாய் மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் அரிப்புடன் எரிச்சல், இரத்தக்கசிவுடன் மலம் வெளியேறுவது, வயிற்றுப்போக்கு, களைப்பு, மன இறுக்கம், வாய்வுத் தொல்லை, தசை வலி, மூட்டு வலி, இரத்த சோகை, இரத்த சர்க்கரையில் ஏற்றத்தாழ்வு, பாலுணர்ச்சி குறைபாடு போன்றவை.

சாதாராண வழியில் அறிவது எப்படி?

சாதாராண வழியில் அறிவது எப்படி?

உங்களுக்கு குடல் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால், மலப் பரிசோதனை செய்து பார்க்கலாம். அப்படி பரிசோதனை செய்து, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை எடுத்து வருவதன் மூலமும் குடல் ஒட்டுண்ணிகளை முற்றிலும் அழித்து வெளியேற்றலாம்.

குடல் ஒட்டுண்ணிகளை இயற்கை வழியில் அழிப்பது எப்படி?

குடல் ஒட்டுண்ணிகளை இயற்கை வழியில் அழிப்பது எப்படி?

* தினமும் உணவில் பூண்டுகளை அதிகம் சேர்த்து வருவதன் மூலம் குடல் ஒட்டுண்ணிகளை அழிக்கலாம்.

* வாரம் ஒருமுறை பப்பாளி விதைகளை உட்கொள்வதன் மூலம் குடல் ஒட்டுண்ணிகளின் வளர்ச்சியைத் தடுத்து அழிக்கலாம்.

* கற்றாழை ஜூஸை தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Know Parasites Are Inside The Body

How to know parasites are inside the body? Here are some signs that you may have parasites and how to get rid of it. Read on to know more.
Desktop Bottom Promotion