Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
வாரம் 2-3 முறை உடலுறவு கொள்வதால் பெண்களின் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள்!!!
உடலுறவு கொள்வதன் மூலம் தம்பதியர்கள் ஒருவரை ஒருவர் முழுமையாக உணர்வதோடு, இது இருவருக்கும் சிறந்த உடற்பயிற்சியாகவும் இருப்பதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதுவும் உடலுறவு ஆண்களுக்கு எப்படி நிறைய நன்மைகளைக் கொண்டுள்ளதோ, அதை விட அதிகமாக பெண்களுக்கு கொண்டுள்ளது.
உடலுறவு எப்படி உடலை வலுவாக்குகிறது?
உடலுறவு கொள்வதால் பெண்களுக்கு பாதி மன அழுத்தம் குறையும், உடல் எடையைக் குறைக்கலாம் மற்றும் ஏன் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் கூட வலிமையடையும் என்றால் பாருங்கள். மேலும் சமீபத்திய ஆய்வு ஒன்றில், வாரத்திற்கு 2-3 முறை உடலுறவில் ஈடுபட்ட பெண்களுக்கு, உடலுறவில் ஈடுபடாத பெண்களை விட மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.
அதிகாலையில் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மை தெரியுமா...?
இதுப்போன்று ஏராளமான நன்மைகளை பெண்கள் உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் பெற முடியும். இங்கு பெண்கள் உடலுறவில் ஈடுபடுவதால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்துத் தெரிந்து, உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

சருமத்திற்கு நல்லது
உடலுறவு கொள்வதால் உடல் ஆரோக்கியம் மட்டும் மேம்படுவதில்லை, சரும ஆரோக்கியமும் தான் மேம்படுகிறது. எப்படியெனில், உடலுறவின் போது உச்சக்கட்ட இன்பத்தை அடையும் தருணத்தில் உடலில் DHEA என்னும் சேர்மம் வெளியிடப்படுகிறது. இது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடும் ஓர் சேர்மம் என்பதால், உடலுறவில் பெண்கள் ஈடுபட்டால் முகப்பரு வருவதைத் தடுத்து, சரும அழகை அதிகரிக்கலாம்.

வாய் பராமரிப்பு
பெண்கள் வாய்வழி உறவில் ஈடுபடுவதும், அவர்களுக்கு நன்மையைத் தருமாம். எப்படியெனில், ஆண்களின் விந்தணுவில் ஜிங்க் மற்றும் கால்சியம் போன்றவை அதிகம் உள்ளதால், அவை சொத்தைப் பற்களை எதிர்த்துப் போராடி பற்களை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

கருப்பை புற்றுநோயைத் தடுக்கும்
பெண்கள் உடலுறவில் ஈடுபட்டால் கிடைக்கும் நன்மைகளில் முக்கியமானது கருப்பை புற்றுநோய் வருவது தடுக்கப்படுவது தான். அதிலும் உடலுறவு கொள்ளும் போது பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அடைவது தான் இந்த வகை புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கிறது. எனவே பெண்களே, இந்த புற்றுநோயில் இருந்து விடுபட உடலுறவில் ஈடுபடுங்கள்.

மன அழுத்தம் குறையும்
உடலுறவு கொள்வதால் வாழ்நாளின் அளவை நீட்டிப்பதோடு, மன அழுத்தத்தில் இருந்தும் விலகி இருக்கலாம். இதற்கு காரணம் மனநிலையை மேம்படுத்தும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் தான்.

வயிற்றுப் பிடிப்பு
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படும். அந்த வயிற்று வலியைத் தடுக்க சிறந்த வழி உடலுறவு தான். எப்படியெனில் பெண்கள் உடலுறவில் அதிகம் ஈடுபட்டு உச்சக்கட்ட இன்பத்தை அடைவதால், மாதவிடாய் காலத்தில் வயிற்றில் வலியை ஏற்படுத்தும் டாக்ஸின்கள் வெளியேற்றப்படுகிறது. எனவே இதுவும் பெண்களுக்கு மிகவும் முக்கியமான நன்மைகளுள் ஒன்றாகும்.

தலைவலி
பொதுவாக உடலுறவு கொள்வதன் மூலம், ஆக்ஸிடாக்ஸின் என்னும் ஹார்மோன் அதிகமாக சுரக்கப்பட்டு, தலைவலி வருவது குறையும். இது ஆண், பெண் என இருபாலருக்கும் பொதுவான நன்மை தான். இருப்பினும் ஆண்களை விட பெண்கள் தலைவலியால் அதிகம் கஷ்டப்படுவதால், பெண்களுக்கு இது மிகச்சிறந்த தலைவலிக்கான நிவாரணியாகும்.

நல்ல தூக்கத்தைப் பெறலாம்
உடலுறவில் ஈடுபட்டால், இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். எனவே நீங்கள் தூக்கமின்மை பிரச்சனையால் கஷ்டப்பட்டால், உங்கள் துணையுடன் உடலுறவு கொள்ளுங்கள். இதனால் இருவரும் நல்ல தூக்கத்தை மேற்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
