படுக்கையில் ஆண்கள் சிறந்து நீடித்து செயல்பட பீர் எப்படி உதவுகிறது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

மது உடல் நலத்திற்கும், குடும்பத்திற்கும் கேடு என்று தானே கேள்விப்பட்டிருப்போம். ஆனால், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்த பாலியல் சிகிச்சை நிபுணரான மருத்துவர் கேட் வேன் கிர்க் (Dr. Kat Van Kirk) தினமும் பீர் குடிப்பதால் ஆண்கள் உடலுறவில் சிறந்து நீடித்து செயல்பட முடியும் என்று கூறியுள்ளார்.

அதற்கென அடாவடியாக முடாக்குடி குடித்தால் ஒட்டுமொத்தமாக காரியம் கெட்டுவிடும். அமிர்தமாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் நஞ்சு தானே. அதே போல தான், பீர் குடித்தால் இந்த நன்மை ஏற்படுகிறது எனிலும், அளவு மிக முக்கியம் என்றும் இவர் கூறியுள்ளார். இனி படுக்கையில் ஆண்கள் சிறந்து நீடித்து செயல்பட பீர் எப்படி உதவுகிறது என மருத்துவர் கிர்க் கூறுகிறார் என்று பார்ப்போம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருத்துவர். கேட் வேன் கிர்க்

மருத்துவர். கேட் வேன் கிர்க்

மருத்துவர் கேட் வேன் கிர்க் என்பவர் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்த அரசு சான்றிதழ் பெற்ற பாலியல் சிகிச்சை நிபுணர் ஆவர். இவர் சமீபத்தில் நடத்திய ஆய்வின் மூலமாக படுக்கையில் ஆண்கள் சிறந்து நீடித்து செயல்பட பீர் உதவுகிறது என்று கண்டறிந்துள்ளார்.

பின்ட்

பின்ட்

பீரில் பின்ட் (Pint) என்ற வகையும் இருக்கிறது. இது முழு பீரின் அளவில் பாதி பாட்டில் கொண்டுள்ளது ஆகும். மருத்துவர் கேட் வேன் கிர்க் ஓரிரு பின்ட் அளவு பீர் பருகுவதால் உடலுறவில் ஈடுபடும் போது ஆண்கள் சிறந்து செயல்பட முடியும் என்று கூறுயிருக்கிறார். அளவிற்கு மீறி குடிப்பது தவறு, ஒன்றல்லது இரண்டை மீற வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.

டார்க் பீர்

டார்க் பீர்

இதன் மூலம் ஆண்களுக்கு ஏற்படும் நன்மை என்னவெனில், ஆண்மை, பால் உணர்ச்சி உந்துதல் அதிகரிக்கிறதாம். இதுமட்டுமின்றி, நீண்ட நேரம் விறைப்படையவும் பயனளிக்கிறது என்று மருத்துவர் கேட் வேன் கிர்க் கூறியுள்ளார்.

இரும்புச்சத்து

இரும்புச்சத்து

இது ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, இதில் இருக்கும் அதிகப்படியான இரும்பு, சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஆணுறுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கவும் உதவுவது தானாம்.

இதய கோளாறு

இதய கோளாறு

தினமும் ஒரு பின்ட் அளவு பீர் பருகுவதால் இதய கோளாறுகள் குறைகிறது என்றும் மருத்துவர் கேட் வேன் கிர்க் கூறியுள்ளார்.

வயிறு மந்தம்

வயிறு மந்தம்

மற்றும் ஒன்று அல்லது இரண்டு பின்ட் அளவு பீர் குடிப்பவர்களுக்கு வயிறு மந்தமாகும் பிரச்சனை இருக்காதாம். மற்றும் பீரில் இருக்கும் வைட்டமின் பி மற்றும் மினரல்ஸில் ப்ரோபயோடிக் நலன்கள் கொண்டுள்ளதாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மண்மணம் மாறாத மணப்பாறை முறுக்கு..

English summary

How Beer Makes Men Better In Bed

Do you know how beer makes men better in bed? read here in tamil.