சத்தா சாப்பிடுவதை விட ரத்தத்துக்கு ஏத்த மாதிரி சாப்பிடுவது ரொம்ப முக்கியம் ராசா!

Posted By:
Subscribe to Boldsky

தற்போது நோய்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், பலருக்கும் தங்களது உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை அதிகம் வந்துள்ளது. எந்த ஒரு உணவை உட்கொள்ளும் முன்னும், இந்த உணவு ஆரோக்கியமானது தானா என்று ஒருமுறை யோசிக்கும் அளவு மக்கள் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். என்ன தான் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வந்தாலும், உடலின் அனைத்து செயல்களுக்கும் முதன்மையாக விளங்கும் இரத்தத்திற்கு ஏற்றவாறான உணவுகளை உட்கொண்டு வந்தால், அதனால் உடல் ஆரோக்கியத்தை இன்னும் பாதுகாக்கலாம்.

உலகில் உள்ள ஒவ்வொருவரின் உடலிலும் ஒவ்வொரு வகையான இரத்த பிரிவுகள் உள்ளன. அதில் ஓ, ஏ, ஏ, பி மற்றும் ஏபி குறிப்பிடத்தக்கவை. அந்தந்த இரத்த பிரிவுகளுக்கு ஏற்றவாறான உணவுகளை உட்கொண்டு வந்தால், நோய்களின் தாக்கத்தைக் குறைக்கலாம் என்று பல மருத்துவ நிபுணர்களும் சொல்கின்றனர். இங்கு எந்த வகை இரத்த பிரிவுகளுக்கு எந்த வகையான டயட்டை மேற்கொள்ளலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓ இரத்த பிரிவு

ஓ இரத்த பிரிவு

30,000 வருடங்களுக்கு முன்பு இருந்தே ஓ இரத்த பிரிவு இருப்பதாக நம்பிக்கை ஒன்று உள்ளது. இத்தகைய இரத்த பிரிவினர் தங்களது உணவில் புரோட்டீன் அதிகம் இருக்கும் உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஏ இரத்த பிரிவு

ஏ இரத்த பிரிவு

இந்த வகை இரத்த பிரிவு 20,000 வருடங்களுக்கு முன்பிருந்து இருப்பதாக மருத்துவர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த வகை இரத்த பிரிவினர் தங்களது உணவில் காய்கறிகளையும், மாட்டிறைச்சியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். முக்கியமாக காய்கறிகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும் என்று சொல்கின்றனர்.

பி இரத்த பிரிவு

பி இரத்த பிரிவு

இந்த வகை இரத்த பிரிவினரின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையோடு இருப்பதுடன், செரிமான மண்டலமும் நன்கு செயல்படும். இத்தகைய இரத்த பிரிவினர் பால் பொருட்களை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஏபி இரத்த பிரிவு

ஏபி இரத்த பிரிவு

இந்த வகை இரத்த பிரிவு 1000 வருடங்களுக்கு முன்பு தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகையான இரத்தத்தைக் கொண்டவர்கள், ஏ இரத்த பிரிவு மற்றும் பி இரத்த பிரிவினருக்கு கொடுக்கப்பட்டுள்ள டயட்டை சரிசம அளவில் பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்கள் சொல்கின்றனர்.

இந்த டயட் எப்படி வேலை செய்யும்?

இந்த டயட் எப்படி வேலை செய்யும்?

இயற்கை மருத்துவர் பீட்டர் தனது இரத்த பிரிவு டயட் சம்பந்தமான புத்தகத்தில் குறிப்பிட்ட அவரது கோட்பாட்டின் படி, ஒவ்வொரு இரத்த பிரிவும் ஒவ்வொரு தனித்துவமான ஆன்டிஜென்களை (நோய்கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் ஒரு பொருள்) கொண்டிருக்கும். இத்தகைய ஆன்டிஜென்களை ஒருசில உணவுப் பொருட்கள் மோசமாக தாக்கும். இதனால் உடலில் நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆகவே இரத்த பிரிவுகளுக்கு ஏற்ற உணவுகளை உட்கொண்டு வந்தால், நோய்களின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How About Eating For Your Blood Type?

If you're a sucker and follow the various diets endorsed by Hollywood and Bollywood celebrities, here's some news for you.
Story first published: Thursday, March 5, 2015, 16:33 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter