படர்தாமரைக்கான சில எளிய கை வைத்தியங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

உங்கள் சருமத்தில் அழற்சி போன்று வட்ட வடிவில் சிவப்பாக ஏதேனும் இருந்தால், அது தான் படர்தாமரை. இந்த படர்தாமரையானது பூஞ்சையினால் ஏற்படக்கூடியது. மேலும் இந்த படர்தாமரை சருமம், நகம், ஸ்கால்ப், உள்ளங்கை அல்லது பாதங்களில் தான் அதிகம் ஏற்படும். இந்த நிலை முற்றினால், அது கடுமையான அரிப்புகளை ஏற்படுத்தும்.

மேலும் படர்தாமரை பரவக்கூடிய ஒன்று. அதிலும் சருமத்துடன் தொடர்பு கொண்டாலோ அல்லது அவர்கள் பயன்படுத்திய துணியை பயன்படுத்தினாலோ, இது பரவும். இது சருமத்தில் ஏற்படும் மற்ற பிரச்சனைகளைப் போன்றது அல்ல. எனவே படர்தாமரை உங்களுக்கு இருந்தால், அதனைப் போக்க உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதற்காக பல க்ரீம்கள், ஆயின்மெண்ட் போன்றவை கடைகளில் விற்கப்படுகிறது. இருப்பினும் இயற்கை மருத்துவத்தைப் போல் எதுவும் பலன் தருவதில்லை.

முக்கியமாக இந்த பிரச்சனை பெரியோர்களை விட குழந்தைகளுக்கு தான் அதிகம் ஏற்படும். எனவே குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இங்கு படர்தாமரைக்கான சில எளிய இயற்கை கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூண்டு

பூண்டு

பூண்டுகளில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களினால், இதன் நன்மைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அதிலும் படர்தாமரையை நீக்க, பூண்டு பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு பூண்டை அரைத்து சாறு எடுத்து, அதனை படர்தாமரை உள்ள இடங்களில் தடவி வர வேண்டும்.

 தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயிலும் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. இதனைக் கொண்டு பல பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். அதிலும் படர்தாமரை இருந்தால், அவ்விடத்தில் தேங்காய் எண்ணெயை தொடர்ந்து தடவி வர, படர்தாமரை நீங்குவதோடு, அது பரவுவதும் தடுக்கப்படும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரில் பூஞ்சை காளான் எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ளது. இதனால் இவற்றைக் கொண்டு படர்தாமரைக்கு விரைவில் நிவாரணம் காணலாம்.

 சூடம்/கற்பூரம்

சூடம்/கற்பூரம்

படர்தாமரைக்கு நல்ல தீர்வை கற்பூரமும் வழங்கும். ஏனெனில் கற்பூரத்திலும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ளது.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்

கடுகு அல்லது அதன் எண்ணெயை தினமும் படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வந்தால், படர்தாமரை மறையும்.

உப்பு மற்றும் வினிகர்

உப்பு மற்றும் வினிகர்

உப்பை வினிகருடன் சேர்த்து கலந்து, படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வந்தால், நாளடைவில் படர்தாமரை மறைவதைக் காணலாம்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

ஆவில் எண்ணெயை படர்தாமரையின் மீது தடவி வர, விரைவில் அது போய்விடும்.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள்

மஞ்சள் தூளின் மகிமையினால், பாக்டீரியாக்கள் மட்டுமின்றி, பூஞ்சையின் தாக்குதல்களையும் தடுக்கலாம். அதிலும் இதனை படர்தாமரை உள்ள இடத்தில் தினமும் தடவி வந்தால், படர்தாமரை நீங்கும்.

பப்பாளி

பப்பாளி

பப்பாளியில் உள்ள பூஞ்சை காளான் எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சரும பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தரும். அதிலும் பச்சை பப்பாளியை அரைத்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி வர வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies For Ringworm

Ringworms can be very irritating if not taken care of immediately. Today we suggest you some of the simple home remedies which you can try for yourself.
Story first published: Tuesday, March 17, 2015, 16:41 [IST]
Subscribe Newsletter