தினமும் இரவு காதல் துணையுடன் பிணைந்து உறங்குவதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஓர் சமீபத்திய ஆய்வில், ஒவ்வொரு இரவும் நீங்கள் உங்கள் துணையுடன் சேர்ந்து உறங்குவதால், உங்கள் உடல்நிலை ஆரோக்கியம் அடைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. சிலருக்கு இது ஆச்சரியாமாக இருக்கலாம். ஆயினும் நீங்கள் இதை நம்பி தான் ஆக வேண்டும்.

ஆண்கள் ஏன் இரவில் நிர்வாணமாக தூங்க வேண்டும்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்!

உங்கள் காதல் துணை அல்லது கணவன் / மனைவியுடன் சேர்ந்து தினமும் இரவு உறங்குவதால் மனநிலை அமைதி அடைகிறது, தூக்கமின்மை சரியாகிறது, இதயம், மூளை மற்றும் இதர உடல் பாகங்கள் சிறந்து இயங்குகின்றன. மற்றும் உங்கள் துணையுடன் சேர்ந்து உறங்கும் போது ஏற்படும் அரவணைப்பு இவற்றுக்கு எல்லாம் ஓர் முக்கிய காரணமாக விளங்குகிறது....

பொறந்த மேனியா தூங்குறதுனால என்னென்ன நன்மையெல்லாம் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன அழுத்தம் குறையும்

மன அழுத்தம் குறையும்

நீங்கள் விரும்பும் நபர் அல்லது மனைவியுடன் இரவு ஒன்றாக உறங்குவதால், உங்கள் மனதின் இறுக்கம் குறைந்து இலகுவாக உணரத் தொடங்குகிறது. இது, மன அழுத்தத்தை குறைக்க வெகுவாக உதவுகிறது. பொதுவாகவே, கொஞ்சி குலாவுதலும், உடலுறவில் ஈடுபடுதலும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது.

நல்ல உறக்கம்

நல்ல உறக்கம்

தூக்கமின்மை பாதிப்பில் இருப்பவர்கள் தினமும் இரவு அவர்களது மனைவியுடன் உறங்குவதால் நல்ல உறக்கம் கிடைக்கிறதாம். உங்களுக்கு பிடித்த நபருடன் இணைந்து உறங்குவதால் தூக்கமின்மை குறைகிறது என்று அறிவியல் ரீதியாகவும் நிரூபணம் செய்துள்ளனர்.

அரவணைப்பு

அரவணைப்பு

இருவர் ஒன்றாக உறங்கும் போது பிணைப்பு ஏற்படுகிறது. இந்த பிணைப்பு உங்களுள் ஓர் அரவணைப்பை ஏற்படுத்தும். இது உங்கள் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. மற்றும் இந்த அரவணைப்பு உங்கள் சருமத்தையும் இயற்கையாக பாதுகாக்க உதவுகிறதாம்.

காதல் ஹார்மோன்

காதல் ஹார்மோன்

உங்கள் மனைவியுடன் அல்லது காதல் நபருடன் சேர்ந்து உறங்குவதால் உங்கள் உடலில் ஆக்ஸிடாஸின் (Oxytosin) எனும் ஹார்மோன் வெளிப்படுகிறது. இது பொதுவாக உடலுறவில் ஈடுபடும் போது தான் வெளிப்படும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், உங்க துணையுடன் நிர்வாணமாக பிணைந்து உறங்கும் போதும் இந்த ஹார்மோன் அதிக அளவில் வெளிப்படுகிறதாம். இது ஓர் உடல்நலத்தை மேலோங்க வைக்க உதவுகிறது.

இதய நலன்

இதய நலன்

உங்கள் துணையுடன் சேர்ந்து நீங்கள் உறங்கும் போது ஏற்படும் அரவணைப்பு இதய நலனுக்கு நல்லது என்று கூறப்படுகிறது. இது இதயத்துடிப்பை சீராக்கவும் பயனளிக்கிறதாம்.

சிறந்த காலை போது

சிறந்த காலை போது

உங்கள் துணையுடன் உறங்கி நீங்கள் எழும் காலை பொழுது உங்களை உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்க வைக்கிறது. இதற்கு காரணம் நீங்கள் உங்கள் துணையுடன் சேர்ந்து உறங்கும் போது ஏற்படும் ஆழ்ந்த உறக்கமும், அரவணைப்பும் தான்.

வாழ்நாள் அதிகரிக்கும்

வாழ்நாள் அதிகரிக்கும்

உங்கள் காதல் துணை அல்லது மனைவியுடன் சேர்ந்து உறங்குவது வாழ்நாளை அதிகரிக்கிறதாம். இதற்கு காரணம், இவரோடு உறங்கும் போது, உங்கள் மூளை, இதயம் மற்றும் இதர உடல் பாகங்கள் ரிலாக்ஸாகிறதாம். இந்த ரிலாக்ஸ் உங்கள் வாழ்நாளை அதிகரிக்க ஓர் யோகா போன்று பயனளிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits Of Sleeping Next To Someone

Dont sleep alone tonight, make sure you have someone beside you. Here are some of the health benefits of sleeping next to someone.
Subscribe Newsletter