Latest Updates
-
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும்
முந்திரி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் சுவாரஸ்ய நன்மைகள்!
முந்திரியைப் பற்றி தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால் முந்திரி பழத்தைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன், அது எப்படி இருக்கும் என்று கூட தெரியாது. ஆனால் அந்த முந்திரிப் பழத்தை சாப்பிடுவதால், நம்ப முடியாத பல நன்மைகள் கிடைக்கும்.
மேலும் முந்திரியை எப்படி விரும்பி சாப்பிடுகிறோமோ, அதேப்போல் இதனை சாப்பிட முடியாது. ஏனென்றால் இதனை அப்படியே அதிக அளவில் சாப்பிட்டால், தொண்டை கரகரப்பு ஏற்படும். ஆனால் இதை சாப்பிட சில வழிகள் உள்ளன.
இங்கு முந்திரி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சத்துக்கள்
முந்திரிப் பழத்தில் புரோட்டீன், பீட்டா-கரோட்டீன், டானின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட், நார்ச்சத்துக்கள் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

வைட்டமின் சி
பொதுவாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தில் தான் அதிகம் இருக்கும். ஆனால் அதை விட 5 மடங்கு அதிகமாக ஒரு முந்திரி பழத்தில் உள்ளது என்றால் பாருங்களேன். எனவே இனிமேல் 5 ஆரஞ்சு சாப்பிடுவதற்கு பதில் ஒரு முந்திரிப்பழத்தை சாப்பிடுங்கள்.

நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம்
நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தினால் கஷ்டப்படுபவர்கள், முந்திரிப் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதனை குணமாக்கலாம்.

ஸ்கர்வி
முந்திரி பழத்தை சாப்பிட்டால், வைட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் ஸ்கர்வி என்ற நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

24 மணிநேரம்
முந்திரி பழத்தை மரத்தில் இருந்து பறித்த 24 மணிநேரத்திற்குள் சாப்பிட வேண்டும். இல்லையெனில் அழுகி விடும். அதனால் தான் இப்பழம் இந்தியாவில் அதிகம் விற்கப்படுவதில்லை. மேலும் இப்பழத்தின் ஜூஸானது பிரேசிலில் மிகவும் பிரபலமானது.

சாப்பிடும் முறை
முந்திரி பழத்தை சாப்பிட்டால், தொண்டையில் கரகரப்பு ஏற்படாமல் இருக்க, அதனை வேக வைத்தோ அல்லது உப்பு நீரில் ஊற வைத்தோ சாப்பிட வேண்டும்.



Click it and Unblock the Notifications
