தினமும் காலையில் காபிக்கு பதிலாக வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

திருஷ்டியைக் கழிப்பதற்கு வெள்ளை பூசணியைப் பயன்படுத்துவோம். ஆனால் அந்த வெள்ளைப் பூசணி பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்க உதவுகிறது. குறிப்பாக ஆயுர்வேதத்தில் இந்த வெள்ளை பூசணி பல பிரச்சனைகளை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. இதற்கு அதில் உள்ள சத்துக்கள் தான் காரணம்.

வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

வெள்ளைப் பூசணியில் வைட்டமின், பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த வெள்ளை பூசணியை தினமும் காலையில் ஜூஸ் போட்டு காபிக்கு பதிலாக குடித்து வந்தால் என்னனென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா? இல்லையெனில் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஏன் காலையில் கேரட் சாற்றுடன் இஞ்சி சாறு கலந்து குடிக்க வேண்டும் என்று தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அல்சர்

அல்சர்

அல்சர் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி ஜூஸ் உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி ஜுஸ் உதவும்.

வயிற்றுப்புழுக்கள்

வயிற்றுப்புழுக்கள்

தினமும் காலையில் வெள்ளை பூசணி ஜூஸ் உடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

எடை குறையும்

எடை குறையும்

நீங்கள் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், வெள்ளை பூசணி ஜூஸை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.

உடல் சூடு

உடல் சூடு

உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி ஜூஸைக் குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.

இரத்தம் சுத்தமாகும்

இரத்தம் சுத்தமாகும்

வெள்ளை பூசணி ஜூஸில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.

உள் இரத்தக்கசிவு

உள் இரத்தக்கசிவு

உடலின் உட்பகுதியில் ஏதேனும் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, அதனால் இரத்தக்கசிவு ஏற்பட்டால், அதனை வெள்ளை பூசணி ஜூஸ் தடுக்கும். குறிப்பாக சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும்.

மனநிலை மேம்படும்

மனநிலை மேம்படும்

தினமும் காலையில் காபி அல்லது டீக்கு பதிலாக வெள்ளை பூசணி ஜூஸ் குடித்து வந்தால், நாள் முழுவதும் மனநிலை சிறப்பாக இருக்கும். ஏனெனில் வெள்ளைப்பூசணியில் உள்ள சத்துக்களானது நரம்புகள் மற்றும் மூளையை அமைதியடையச் செய்து, மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தில் இருந்து விடுவிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits Of Drinking Ash Gourd Juice

Here are some of the health benefits of drinking ash gourd or white pumpkin juice. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter