உங்களால் ஏன் உடல் எடையைக் குறைக்க முடியவில்லை என்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

சில நேரங்களில், உடல் எடையைக் குறைக்க நாம் என்ன தான் டயட்டில் இருந்து, தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தாலும், எடையைக் குறைக்க முடியாமல் இருப்போம். அது ஏன் என்று தெரியுமா? எவ்வளவு டயட்டில் இருந்தாலும், நாம் நம் உணவில் நம்மை அறியாமல் சில உணவுப் பொருட்களை சேர்த்து வருவோம். ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா? இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்...

இந்த உணவுகள் உடலினுள்ளே அழற்சி, உடல் எடை, இதய நோய், நீரிழிவு மற்றும் ஏன் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு கூட உள்ளது. உடலின் உள்ளே நாள்பட்ட அழற்சியின் காரணமாக பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை தவிர்க்க வேண்டியது முக்கியம். பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க...

இங்கு நம் உடலினுள் அழற்சியை ஏற்படுத்தி, உடல் எடை குறையவிடாமல் தடுக்கும் அந்த உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து, இனிமேல் எடையைக் குறைக்க முயலும் போது அவற்றை உண்பதைத் தவிர்த்திடுங்கள். எப்போதும் ஃபிட்டாக இருப்பதற்கு அமீர் கான் பின்பற்றும் டயட் இது தாங்க...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சமையல் எண்ணெய்

சமையல் எண்ணெய்

சமையல் எண்ணெயில் ஒமேகா-6 ஃபேட்டி அமிலம் அதிக அளவிலும், ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் குறைவான அளவிலும் உள்ளது. ஃபேட்டி அமிலங்களில் இப்படி ஏற்றத்தாழ்வு இருப்பதால், அதன் காரணமாக உடலினுள் அழற்சி ஏற்பட ஆரம்பிக்கும். எனவே சரிசம அளவில் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள் நிறைந்த விர்ஜின் ஆலிவ் ஆயிலையோ அல்லது சமையல் எண்ணெயையோ தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

உலகில் 60 சதவீத மக்களுக்கு பால் பொருட்கள் என்றால் அழற்சி என்பது தெரியுமா? இப்படி பால் பொருட்களுக்கு அழற்சி ஏற்படுவதற்கு அதில் உள்ள ஒவ்வாமை ஊக்கிகள் தான் காரணம். இதன் காரணமாக மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, சரும அரிப்பு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றம் சுவாசிப்பதில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே பால் பொருட்களை எடையைக் குறைக்கும் போது எடுத்து வந்தால், அதுவே உங்களுக்கு தடையை ஏற்படுத்தும்.

ஹைட்ரஜனேற்ற கொழுப்புக்கள்

ஹைட்ரஜனேற்ற கொழுப்புக்கள்

இந்த கொழுப்புக்களானது எண்ணெயில் பொரித்த உணவுகள், பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் தான் அதிகம் இருக்கும். இந்த கொழுப்புக்கள் கெட்ட கொழுப்புக்கள். இவை உடலினுள் சென்றால் நல்ல கொழுப்புக்களின் அளவு குறைந்து, உடலினுள் அழற்சி ஏற்பட்டு, எடை அதிகரிப்பு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மாட்டிறைச்சி

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மாட்டிறைச்சி

இந்த உணவுகளில் Neu5Gc என்னும் பொருள் உள்ளது. இது உடலினுள் அழற்சியை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, இந்த உணவுகள் இதய நோய், புற்றுநோய் போன்றவற்றையும் ஏற்படுத்தும். குறிப்பாக இந்த வகை உணவுகள் உடல் பருமனை உண்டாக்கும்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆல்கஹாலை அதிகளவில் எடுத்து வந்தால், அதனால் உணவுக்குழாய் மற்றும் குரல்வளையில் எரிச்சலை உண்டாக்கி, உடலினுள்ளே அழற்சியை ஏற்படுத்தும். இந்த நாள்பட்ட அழற்சியினால் உணவுக்குழாய் மற்றும் குரல்வளையில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தூண்டிவிடும். அதுமட்டுமின்றி, ஆல்கஹால் கல்லீரலிலும் அழற்சியை உண்டாக்கி, கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.

சர்க்கரை

சர்க்கரை

உணவில் சிறிது சர்க்கரையை சேர்த்தாலும் அதனால் நீரிழிவு, பற் சொத்தை மற்றும் உடல் பருமன் போன்றவை ஏற்படும். என்ன தான் நீங்கள் டயட்டில் இருந்து சர்க்கரை சேர்க்காமல் இருந்து, கடைகளில் விற்கப்படும் டயட் சோடாக்கள், ஜூஸ், மில்க் ஷேக் போன்றவற்றைக் குடித்து வந்தாலும், அதில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையினால் உடல் எடையை அதிகரிக்கும்.

சுத்திகரிக்கப்பட்ட மாவு (மைதா)

சுத்திகரிக்கப்பட்ட மாவு (மைதா)

சுத்திகரிக்கப்பட்ட மாவுகளில் எந்த ஒரு சத்துக்களும் இருக்காது. அதுமட்டுமின்றி, இவை உடலின் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, நீரிழிவு மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். எனவே பிரட், நூடுல்ஸ், சாதம், பாஸ்தா, பிஸ்கட் போன்றவற்றை டயட்டில் இருக்கும் போது தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods That Silently Cause Inflammation & Weight Gain

Avoid these foods causing inflammation and weight gain. These inflammatory foods cause diabetes, heart diseases and allergy as well. Read on to know more.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter