For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அழிக்கும் உணவுகள்!!!

By Maha
|

வலிமையான நோயெதிர்ப்பு மண்டலம் தான் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். அதற்கு சரியான தூக்கம், உடற்பயிற்சி மற்றும் போதிய உணவுகளை உட்கொள்வது போன்றவற்றை அன்றாடம் தவறாமல் பின்பற்றி வந்தால் போதும். ஆனால் தற்போது பலரும் உடல் உழைப்பில்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருவதோடு, பல மோசமான உணவுகளை அதிகம் உட்கொண்டு வருகிறோம்.

இதனால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகிறது. நோயெதிர்ப்பு மண்டலம் ஒருவருக்கு பலவீனமாக இருந்தால், உடலைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் நிம்மதியான மற்றும் சந்தோஷமான வாழ்க்கை வாழ முடியாது. குறிப்பாக நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையிழக்கச் செய்வது உண்ணும் ஆரோக்கியமற்ற உணவுகள் தான்.

அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு அவற்றை தவிர்த்து வந்தாலே, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடனும் ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ள முடியும். சரி, இப்போது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அழிக்கும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி உடலில் ஆபத்தான எதிர்வினைகளைத் தூண்டி, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்குவதாக கலிபோர்னியா பல்கலைகழகத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஏனெனில் மாட்டிறைச்சியில் உள்ள நேச்சுரல் சர்க்கரையானது, நம் செரிமான மண்டலத்தால் செரிக்க முடியாமல் போவதால் தான் மாட்டிறைச்சி நோயெதிர்ப்பு சக்தியை அழித்து, புற்றுநோய் போன்ற மோசமான நோய்கள் தாக்குகிறதாம்.

வறுத்த அல்லது பொரித்த உணவுகள்

வறுத்த அல்லது பொரித்த உணவுகள்

வறுத்த அல்லது பொரித்த உணவுகளில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால், உடலினுள் அழற்சியை உருவாக்கி, நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையைக் குறைக்கிறது. எனவே எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை உண்ணும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

சோடா

சோடா

சோடா அதிகம் குடித்தால், அதில் உள்ள செயற்கை இனிப்புக்களால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் சிதைக்கப்படும். டயட் சோடாக்கள் என்று விற்கப்படும் சோடா பானங்களும் மிகவும் மோசமானது தான். ஏனெனில் சோடாக்களில் எந்த ஒரு சத்துக்களும் இல்லை. மேலும் அவற்றைக் குடிக்கும் போது உடலில் உள்ள மற்ற சத்துக்களின் அளவைக் குறைக்கும். எனவே சோடா பானங்களை தயது செய்து குடிக்காதீர்கள்.

சர்க்கரை உணவுகள்

சர்க்கரை உணவுகள்

சர்க்கரை சேர்த்து செய்யப்படும் உணவுகளை உட்கொள்வதாலும் நோயெதிர்ப்பு சக்தி அழிக்கப்படும். மேலும் சர்க்கரையானது உடலைத் தாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் செல்களை தாக்குவதால் தான், சர்க்கரை சேர்த்த இனிப்பு உணவுகளை உண்ட பின் பலருக்கு சளி, இருமல் ஏற்படுவதாக ஆய்வு ஒன்று சொல்கிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

தற்போது எங்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் விற்கப்படுவதால் ஏராளமான மக்கள் அதைத் தான் அதிகம் வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் பதப்படுத்தும் உணவுகளில் சேர்க்கப்படும் கெமிக்கல்கள் உடலை மோசமாகத் தாக்கும். அதிலும் எடுத்த எடுப்பிலேயே தாக்காமல், பதப்படுத்தும் உணவுகளை உண்ண ஆரம்பித்ததும், மெதுவாக உடலினுள் ஒருவித அழற்சி மற்றும் எரிச்சல் உண்டாக்கும். பின் நாளடைவில் நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்கி, நோய்களை உடலை எளிதில் தாக்கும் வண்ணம் செய்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Kill Your Immune System

Here are some foods that kill your immune system. Take a look...
Story first published: Friday, December 4, 2015, 18:05 [IST]
Desktop Bottom Promotion