புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் புயலடிக்கப் போகுதாம்

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படும் புதன் கிரகம் அறிவு, பேச்சுத்திறன், தகவல் தொடர்பு மற்றும் பகுத்தறியும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக திகழ்கிறார். புதன் ஒவ்வொரு 23 முதல் 30 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்கிறார். புதனின் இந்த கிரக மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Mercury Transit in Taurus Bring Tough Times To These 4 Zodiac Signs

தற்போது, ​​புதன் மேஷ ராசியில் சஞ்சரித்து வருகிறார், வரும் மே மாதம் 15-ஆம் தேதி நள்ளிரவு 12:34 மணிக்கு ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கப் போகிறார். சுக்கிரனால் ஆளப்படும் இந்த ராசிக்கு புதன் செல்வது சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பலன்களை அளித்தாலும், சில ராசிக்காரர்களுக்கு இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்

புதன் கிரகம் மிதுன ராசியின் 12-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளதால், அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத பல சவால்கள் வரப்போகிறது. இந்த கிரக மாற்றத்தால் அவர்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும். இந்த காலகட்டத்தில், தேவையற்ற பயணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் அவர்களின் பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். அதீதப் பணிச்சுமை காரணமாக அவர்கள் மிகுந்த களைப்பையும், சோர்வையும் உணரக்கூடும்.

வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். இந்த காலகட்டத்தில் சோம்பேறியாக இருப்பது பிரச்சினைகளை அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் அனைத்து வேலைகளையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.

துலாம்

புதன் துலாம் ராசியின் எட்டாவது வீட்டில் சஞ்சரிக்க உள்ளது. இந்த காலகட்டத்தில் அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும், எனவே தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். அவர்கள் தொழில் அல்லது வேலையில் தடைகளைச் சந்திக்க நேரிடலாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், எந்தவொரு முடிவையும் அலட்சியமாக எடுப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

அவர்கள் ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் எதிரிகள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் ஒரு முடிவை எடுப்பதற்கு முன், ஒன்றுக்கு நூறு முறை ஆலோசிப்பது நல்லது. அவர்களின் தவறான முடிவுகளால் சமூகத்தில் அந்தஸ்தையும், மதிப்பையும் இழக்க நேரிடும். வாகனங்களை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும்.

விருச்சிகம்

புதன் விருச்சிக ராசியின் ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். எனவே இந்த காலகட்டத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெரும்பாலும், நிதிரீதியாக அவர்கள் பல நெருக்கடிகளை சந்திக்கப் போகிறார்கள். இதனால் பணத்தைக் கையாளும் போது அவர்கள் பெரும்பாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் பேச்சிலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களின் விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். இது அதிக சவால்களை உருவாக்கக்கூடும். மேலும் பெரும்பாலான விஷயங்களில் மற்றவர்களிடம் சமரசமாக செல்ல வேண்டியிருக்கும். உடல்நலப் பிரச்சினைகள் உங்களைத் தொடர்ந்து பாதிக்கலாம்.

தனுசு

தனுசு ராசியின் ஆறாம் வீட்டில் புதன் கிரகம் பெயர்ச்சி ஆகவுள்ளது. இந்த காலகட்டத்தில் அவர்கள் கடினமாக உழைத்து, கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அவர்கள் தொழில் அல்லது பணியிடத்தில் போட்டி அதிகரிக்கும். அவர்க்ளின் எதிரிகள் பல தடைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

இந்த காலகட்டத்தில் சொத்து தொடர்பான பிரச்சினைகளில் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுக்கும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் துறையில் வெற்றியை அடைவதில் தாமதத்தை சந்திக்க நேரிடும். எனவே யாருடனும் பேசுவதையோ அல்லது வாக்குவாதம் செய்வதையோ தவிர்க்கவும், ஏனெனில் இது உங்கள் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, May 4, 2026, 22:37 [IST]
Desktop Bottom Promotion