Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகருக்கு பூஜை செய்ய உகந்த 21 இலைகளும்.. அவற்றால் கிடைக்கும் நன்மைகளும்.. -
தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புட்டுபுட்டு வைக்கும் டாக்டர்! -
1 வருடம் கழித்து கன்னி ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த ராசிக்காரங்க தொழிலில் நல்ல வளர்ச்சியை பாக்கப்போறாங்க.. -
ராகி இட்லியும், வெங்காய கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சுவையானதும், சத்தானதும் கூட -
செப்டம்பர் 12, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்! -
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் நவம்பர் மாதம் வரை டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
மருத்துவரிடம் அந்தரங்க பிரச்சனை குறித்து பேச சங்கடமா இருக்கா? விளைவுகள் பெரிதாகலாம் மறந்துவிடாதீர்!
அந்தரங்க பிரச்சனை குறித்து பேச எப்பேர்ப்பட்ட ஆளாக இருந்தாலும் சங்கோஜம் இருக்க தான் செய்யும். ஒரு சில அந்தரங்க பிரச்சனைகள் அனைவரும் கௌரவமாக கருதுவது ஆகும். எங்கே இந்த பிரச்சனை எனக்கு இருக்கிறது என தெரிந்தால் இந்த சமூகம் தன்னை கேவலமாகவும், கேலியாகவும் பார்க்குமோ என்ற அச்சம். முதலில் இந்த அச்சத்தை கைவிடுங்கள்.
ஆண்களே! இதோ ஆண்மை குறைவு ஏற்படாமல் இருக்க அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!
எச்.ஐ.வி-யையே சாதாரணமாக பார்க்கக்கூடிய காலம் வந்துவிட்டது. இனியும் நீங்கள் உங்கள் அந்தரங்க பிரச்சனை குறித்து மருத்துவரிடம் மூடி மறைப்பது தவறு. மிக எளிதான முறையில் சரி செய்ய கூடிய பிரச்சனைகளை மறைத்து மறைத்து வீணாய் பெரிதாக்கிவிடாதீர்கள். இவை நீங்கள் கட்டாயம் மருத்துவர்களிடம் மறைக்கக் கூடாத சில விஷயங்கள்...
பெண்ணுறுப்பில் வலியா? ஒருவேளை இதெல்லாம் கூட காரணமா இருக்கலாம்!

உடலுறவு வலி
உடலுறவில் ஈடுபடும் போது மிகுந்த வலி ஏற்படக்கூடாது. எப்போதாவது ஏற்படுவது வேறு, ஒவ்வொரு முறையும் ஏற்படுவது வேறு. கரு முட்டை வெளிபடுதலில் தடங்கல் ஏற்படும் போது இத்தகையான வலி ஏற்படலாம். நீங்கள் உடலுறவின் காரணமாக தான் வலி ஏற்படுகிறது என மருத்துவரிடம் கூறாது இருந்துவிட வேண்டாம். இது கருத்தரித்தலையே கூட பாதிக்கலாம்.

கருப்பை அகப்படலாம்
குடல் இயக்க கோளாறினால் குடல் வலி ஏற்படலாம். இதை பெண்கள் மிகவும் சாதாரணமாக கருதிகின்றனர். ஆனால் கருப்பை அகப்படலத்தின் காரணமாக கூட குடல் வலி ஏற்படலாம் என பெண்களுக்கு தெரிவதில்லை. இது காலப்போக்கில் மலடு ஆக்கிவிடும் .

பிறப்புறப்பு வறட்சி
பிறப்புறுப்பின் வலிமை விந்தணுவிற்கு மிகவும் முக்கியமானது. பிறப்புறுப்பில் வறட்சி எற்பட்டால் நீங்கள் கட்டாயம் மருத்துவரிடம் சொல்ல வேண்டும். இதன் காரணத்தால் விந்தணு நீந்துதல் தடைப்படும் மற்றும் உடலுறவில் ஈடுப்படும் போது வலி ஏற்படும்.

மருத்துவ குறிப்பு
மருத்துவ பரிசோதனையின் போது உண்மையாக எழுதுவது முக்கியம். ஒருவேளை உங்களுக்கு முன்பு பால்வினை நோய் இருந்து குணமாகியிருந்தாலும் கூட அதை தெளிவாக குறிப்பிடுவது அவசியம். ஒரு சில மருந்துகள் உங்கள் உடலிற்கு அழற்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்டிருக்கலாம் எனவே எதையும் மறைக்காதீர்கள்.

பிறப்புறப்பு நாற்றம்
பிறப்புறுப்பு நாற்றம் என்பதை நிறைய பெண்கள் மிக சாதரணமாக கருதுகின்றனர். மற்றும் டியோடரன்ட் மற்றும் வாசனை திரவியம் பயன்படுத்தி அதை தற்காலிகமாக போக்கியும் கொள்கின்றனர். பிறப்புறுப்பு நாற்றம் இரண்டு அபாயங்களுக்கு அறிகுறியாய் அமைகின்றன. ஒன்று பிறப்புறுப்பில் பாக்டீரியா தாக்கம் மற்றொன்று கர்ப்பணி பெண்களுக்கு குறைப்பிரவசம்.

பாலுணர்வு உந்துதல்
சிலருக்கு உடலுறவுக் கொள்வதில் ஈடுபாடு இல்லாமல் இருக்கும். கேட்டல் நாட்டம் இல்லை என கூறுவார்கள். இது ஒருவேளை ஹார்மோன் சமநிலையின்மையாக இருக்கலாம். எனவே, இது போல நீங்கள் உணரும் போது மருத்துவரை அணுகுவது நல்லது.

பாதுகாப்பாற்ற உடலுறவு
பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டிருந்தால் முறையாக உங்கள் மருத்துவரிடம் கூறுங்கள். ஒருவேளை உங்களுக்கு பால்வினை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம். அது முளையிலேயே தெரிந்துவிட்டால் கிள்ளி எறிந்துவிடலாம். வீணாக பெரிதாக்கி வருத்தப்படாதீர்கள்.

முகத்தில் முடி அதிகமாக வளர்வது
பெண்களுக்கு முகத்தில் அதிகமாக முடி வளர்கிறது என்பது ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறி ஆகும். இதை பல்பையுரு கருப்பை நோய்க்குறி (PCOS) என மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது. நீங்கள் ஒருவேளை மருத்துவரை காணும் முன் வேக்ஃஸிங் (Waxing) அல்லது வேறு முறைகளில் முடியை அகற்றி இருக்கலாம். இது மருத்துவருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. எனவே மருத்துவரிடம் இது குறித்து கூறுங்கள்.



Click it and Unblock the Notifications
