மூளை சாவு ஏற்பட்ட பெண் ஆண் குழந்தையைப் பிரசவித்த அதிசயம்!!!

Posted By:
Subscribe to Boldsky

தாயை சிறந்ததொரு கோயிலும் இல்லை என்பது சிறு வயதில் பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்ட கூற்றாகும். கருவறை எனும் கோயிலில் இருந்து வெளிவந்து தான் தாய் என்னும் கடவுளை தரிசனம் செய்கிறோம்.

கருத்தரிக்க விரும்புவோர் உடலுறவுக் கொள்ள வேண்டிய நாட்கள்!!!

ஒவ்வொரு பெண்ணும் பரசவத்தின் போது மறுப்பிறப்பு எடுக்கிறாள். சேயுடன் சேர்ந்து தாயும் புதியதாய் பிறக்கிறாள் என்பது தான் உண்மை. உயிரைக் கொடுத்து குழந்தை பெற்றவர்களும் உண்டு. ஆனால், மூளை சாவடைந்து கிட்டத்தட்ட இறந்த நிலையில் தனது சிசுவிற்கு ஜனனம் கொடுத்த தாயை பற்றி உங்களுக்கு தெரியுமா?

கருவறையில் இருக்கும் சிசுவைப் பற்றிய அபூர்வமான சில விஷயங்கள்!!!

ஆம், அமெரிக்காவின் நெப்ராஸ்கா எனும் மாகாணத்தை சேர்ந்த கர்லா பெரேஸ் எனும் 22 வயது இளம் தாய் தான் அவள். கர்லா பெரேஸின் இந்த பிரசவம் மருத்துவ உலகில் ஓர் அதிசயமாக காணப்படுகிறது. மேலும் தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெடுநாட்கள் பாதுகாத்து வந்த மருத்துவர்கள்

நெடுநாட்கள் பாதுகாத்து வந்த மருத்துவர்கள்

இரு மாதங்களில் பிரசவிக்க இருந்த கர்லா பெரேஸுக்கு மூளை சாவு ஏற்பட்டது. அதன் பிறகும் கூட அவர் கர்ப்பமாக இருக்கிறார், இன்னும் சிறுது காலம் இவரை உயிருடன் பாதுகாத்தல் அந்த சிசுவிற்கு வாழ்வளிக்க முடியும் என்று 54 நாட்கள் மூளை சாவு ஏற்பட்ட கர்லா பெரேஸாவை பாதுகாத்து வைத்திருந்தனர் மருத்துவர்கள்.

நூறு மருத்துவர்கள்

நூறு மருத்துவர்கள்

இந்த அறுவை சிகிச்சை மற்றும் கர்லா பெரேஸாவை பாதுகாக்க நூறு மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் வேலையில் அமர்த்தப்பட்டனர்.

9வது மாதத்தில் பிரசவம்

9வது மாதத்தில் பிரசவம்

குழந்தையின் நலன் கருதி 9வது மாதத்திலேயே அறுவை சிகிச்சையின் பிரசவிக்கப்பட்டது. இல்லையேல் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதியதால் முன்னதாகவே பிரசவம் செய்ததாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

 தேவதை

தேவதை

கர்லா பெரேஸாவிற்கு பிறந்த குழந்தைக்கு தேவதை (Angel) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த குழந்தை பிறந்த போது வெறும் 0.9 கிலோ எடை தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மூளையில் இரத்த கசிவு

மூளையில் இரத்த கசிவு

கர்லா பெரேஸாவிற்கு கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார், பின் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு மூளை சாவு ஏற்பட்டதாக அறிவித்துள்ளனர்.

 இறந்தும் நான்கு உயிரை காத்த கர்லா பெரேஸ்

இறந்தும் நான்கு உயிரை காத்த கர்லா பெரேஸ்

கர்லா பெரேஸ் எனும் இந்த இளம் தாய், குழந்தை பிறந்தஓரிரு நாட்களில் இறந்துவிட்டார். இறந்தும் கூட தனது குழந்தை உட்பட மூன்று பேருக்கு உயிரளித்துள்ளார்.

உடல் உறுப்பு தானம்

உடல் உறுப்பு தானம்

உடல் உறுப்பு தானம் முறைப்படி, கர்லா பெரேஸாவின் உடல் உறுப்பைக் கொண்டு மூன்று நபர்கள் இன்று உயிருடன் வாழ்ந்து வருகின்றனர்.

தீவிர சிகிச்சையில் இருக்கும் தேவதை

தீவிர சிகிச்சையில் இருக்கும் தேவதை

மிகவும் சிரமப்பட்டு பிரசவிக்கப்பட்ட கர்லா பெரேஸின் தேவதை (குழந்தை), இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் தான் இருக்கிறார். உடல் எடை அதிகரிக்க வேண்டும் மற்றும் உடல்திறன் மேம்பட வேண்டும் என்பதற்காக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்

இதற்கு முன்..

இதற்கு முன்..

இதே போல கடந்த 1999ஆம் ஆண்டு ஓர் பெண் மூளை சாவி ஏற்பட்ட பிறகு குழந்தை பிரசவித்ததாக அமெரிக்க நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Brain Dead Woman Delivers Baby Boy

Do you know about the brain dead woman who delivers a baby boy? Read here.
Subscribe Newsletter