Latest Updates
-
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
ஆண்மைக் குறைவு முதல் நரம்பு தளர்ச்சி வரை, பட்டையை கிளப்பும் பாட்டி வைத்தியம்!!!
கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதை போல், இன்று நாம் நமது எளிய பாரம்பரிய வைத்தியங்களை மறந்துவிட்டு ஆங்கில மருத்துவத்தை நாடி உலங்கெங்கிலும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
நாம் குணப்படுத்த மிக கடினம் என எண்ணும் சில உடல்நல கோளாறுகளுக்கு கூட எளிய பாட்டி வைத்தியத்தின் மூலம் குணப்படுத்திவிடலாம்.
நாம் மறந்து போன பொன்னான பயன் தரும் பாட்டி வைத்தியத்தை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியவது அவசியம். இன்று இல்லாவிடினும் என்றாவது ஒருநாள் உங்களுக்கோ அல்லது உங்களது வீட்டில் உள்ளபவர்களுக்கோ ஏதேனும் உடல்நல கோளாறு ஏற்படும் போது இவை உங்களுக்கு பெருமளவில் உதவும்...

ஆண்மை பெருக
தேங்காய் அரைத்து அதன் சார் பிழிந்து, தேங்காய் பால் எடுத்து தினமும் பருகி வந்தால் ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.

மாதவிடாய் சோர்வு
கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.

பித்தம் நீங்க
விளாம்பழம் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குணப்படுத்தும்.

தொண்டை கரகரப்பு குணமாக
சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொண்டை வலி சரியாக
உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.

இருமல் குணமாக
வெண்டைக்காயை சூப் வைத்துக் குடித்து வந்தால், இருமல் உடனே குணமாகும்.

கொழுப்பை குறைக்க
பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும்.

காது வலி
எலுமிச்சை பழத்தின் சாரை ஓரிரு துளிகள் காதில் விட காது வலிதீரும்.

குடல் புண்
குடல்புண் குண மாகவும், வயிற்றுப்புழுக்களை அழிக்கவும் அகத்திகீரை நல்ல வகையில் பயனைளிக்கும்.

நுரையீரல் ஆரோக்கியம்
தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.

நரைமுடி கருமையாக
பசுநெய் மற்றும் தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும்.

நரம்பு தளர்ச்சி குணமாக
தினந்தோறும் சில அத்திபழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.



Click it and Unblock the Notifications
