உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா?

Repeating Numbers In Date Of Birth: ஜோதிடத்தின் படி, எப்படி கிரகங்கள் மற்றும் அவற்றின் நிலைகளின் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அதேப் போல் எண் கணிதத்தின் படி, எண்களும் ஒருவரது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எண் கணிதத்தில் மொத்தம் 1-9 வரையிலான எண்கள் உள்ளன.

Repeating Numbers In Date Of Birth Know Its Meaning As Per Numerology

இந்த எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகங்களால் ஆளப்படுவதோடு, அவை ஒவ்வொன்றும் தனித்துவமான ஆற்றல், குணங்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளன. இந்த கிரகங்கள் தான் ஒருவரது குணங்களை தீர்மானிக்கிறது. மேலும் ஒவ்வொருவருக்கும் பிறந்த தேதியின் அடிப்படையில் விதி எண் இருக்கும். இந்த எண்கள் அந்நபரின் குணங்கள், அதிர்ஷ்டம், எதிர்காலம் போன்றவற்றை தீர்மானிக்கிறது.

சிலருக்கு பிறந்த தேதியில் ஒரே எண் 2-3 முறை வரும். உதாரணமாக 11-11-1990, 7-7-2017 என்று வரலாம். எண் கணிதத்தின் படி, இப்படி எண்கள் தொடர்ந்து வருவதற்கு பின் பெரிய அர்த்தம் உள்ளது. அதாவது ஒரு எண் மீண்டும் மீண்டும் வரும் போது, அந்த எண்ணின் ஆற்றல் இரட்டிப்பாகி, அது எதிர்காலம், குணங்கள், அதிர்ஷ்டம் போன்றவற்றை தீர்மானிக்கிறது. இப்போது 1-9 வரையிலான எண்கள் ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் வந்தால் என்ன அர்த்தம் என்பதைக் காண்போம்.

எண் 1

உங்கள் பிறந்த தேதியில் 1 என்ற எண் பலமுறை வந்தால், நீங்கள் பிறவியிலேயே தலைமைத்துவ குணங்களை அதிகம் கொண்டவர்கள். அதிக தன்னம்பிக்கை, எதையும் சாதிக்கும் தைரியம், யாரையும் சார்ந்திருக்காமல் இருப்பது போன்ற குணங்களையும் கொண்டிருப்பீர்கள். அதே சமயம் அதிக பிடிவாதம் பிடிப்பீர்கள். மற்றவர்கள் பேச்சை கேட்கமாட்டீர்கள். இத்தகையவர்களுக்கு சொந்த தொழில், அரசியல் போன்றவை சிறப்பாக இருக்கும்.

எண் 2

உங்கள் பிறந்த தேதியில் 2 என்ற எண் பலமுறை வந்தால், நீங்கள் உணர்வுபூர்வமானவர்கள். அதிக பாசத்தை கொண்டவர், அடுத்தவர் மனதை எளிதில் புரிந்து கொள்வீர்கள். மேலும் சிறப்பான கற்பனை திறனைக் கொண்டிருப்பீர்கள். அதே வேளையில் சிறு விஷயத்துக்கும் அதிகமாக உணர்ச்சிவசப்படுவீர்கள் மற்றும் ஒரு விஷயம் மனதை பாதித்தால், அதுகுறித்து அதிகமாக யோசிப்பீர்கள். இத்தகையவர்களுக்கு கலை, எழுத்து, ஆசிரியர் போன்றவை சிறப்பாக இருக்கும்.

எண் 3

உங்கள் பிறந்த தேதியில் 3 என்ற எண் பலமுறை வந்தால், நீங்கள் குரு பகவானின் ஆசியைப் பெற அதிர்ஷ்டசாலிகள். புன்னகை முகத்தை கொண்டவர்கள். நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டிருப்பீர்கள். எங்கு சென்றாலும் அங்கு பிரபலமாவீர்கள். அதிக சோம்பேறித்தனத்தை கொண்டிருப்பீர்கள். இத்தகையவர்களுக்கு சினிமா, மீடியா போன்ற துறைகள் சிறப்பாக இருக்கும்.

எண் 4

உங்கள் பிறந்த தேதியில் 4 என்ற எண் பலமுறை வந்தால், நீங்கள் கடின உழைப்பாளிகள். ஒழுக்கம், நேர்மை போன்றவற்றை தவறாமல் பின்பற்றுபவர்கள். ஆனால் உங்களுக்கு எதுவும் எளிதில் கிடைக்காது, போராடி தான் எதையும் பெற வேண்டியிருக்கும். இத்தகையவர்களுக்கு பொறியியல், அரசு வேலை போன்றவை சிறந்ததாக இருக்கும்.

எண் 5

உங்கள் பிறந்த தேதியில் 5 என்ற எண் பலமுறை வந்தால், நீங்கள் சுதந்திரமாக இருக்க அதிகம் விரும்புவீர்கள். புதுபுது விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வம் அதிகம் கொண்டிருப்பீர்கள். ஆனால் ஒரு இடத்தில் நிலையாக இருக்கமாட்டீர்கள் மற்றும் அடிக்கடி முடிவுகளை மாற்றிக் கொண்டே இருப்பீர்கள். இவர்களுக்கு மார்கெட்டிங், வியாபாரம் போன்றவை சிறந்ததாக இருக்கும்.

எண் 6

உங்கள் பிறந்த தேதியில் 6 என்ற எண் பலமுறை வந்தால், நீங்கள் குடும்பத்தின் மீது அதிக பாசத்தைக் கொண்டிருப்பீர்கள். மிகவும் அன்பானவர், அக்கறையானவர். முக்கியமாக குடும்பத்திற்காக உங்களின் ஆசைகளை விட்டுக் கொடுக்கக்கூடியவர். இத்தகையவர்களுக்கு உணவு துறை, ஃபேஷன் டிசைனிங் போன்றவை சிறந்ததாக இருக்கும்.

எண் 7

உங்கள் பிறந்த தேதியில் 7 என்ற எண் பலமுறை வந்தால், நீங்கள் தனிமை விரும்பி. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகம் கொண்டிருப்பீர்கள். கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கும். வலுவான உள்ளுணர்வு கொண்டிருப்பீர்கள். ஆனால் நீங்கள் யாரிடமும் அவ்வளவு எளிதில் பழகமாட்டீர்கள். இத்தகையவர்களுக்கு ஆன்மீகம், ஜோதிடம், ஆராய்ச்சி, எழுத்து போன்றவை உகந்ததாக இருக்கும்.

எண் 8

உங்கள் பிறந்த தேதியில் 8 என்ற எண் பலமுறை வந்தால், நீங்கள் நிறைய பணத்தை சம்பாதிக்கும் திறமையை கொண்டிருப்பீர்கள். உங்களின் நிர்வாக திறமை சிறப்பாக இருக்கும். எங்கும் உயர் பதவியில் இருப்பீர்கள். ஆனால் குடும்ப வாழ்க்கை ஏற்ற இறக்கமாக இருக்கும். கர்ம வினைகளை அனுபவித்து தான் முன்னேறுவீர்கள். இத்தகையவர்களுக்கு சொந்த தொழில், அரசியல் போன்றவை சிறந்ததாக இருக்கும்.

எண் 9

உங்கள் பிறந்த தேதியில் 9 என்ற எண் பலமுறை வந்தால், நீங்கள் மற்றவர்களுக்கு அதிகம் உதவும் மனப்பான்மையை கொண்டிருப்பீர்கள். இரக்க குணம் அதிகம் இருக்கும். இதனால் நீங்கள் மற்றவர்களால் அதிகம் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது. உங்களுக்கு மருத்துவம், சமூக சேவை போன்ற துறைகள் சிறந்ததாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, September 8, 2026, 16:00 [IST]
Desktop Bottom Promotion