Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
டயட் சோடா குடிப்பதை ஏன் நிறுத்த வேண்டும் என்பதற்கான காரணங்கள்!!!
அஸ்பார்டேம், சுக்ரலோஸ் மற்றும் சாக்ரின் கலந்த டயட் சோடா குடிப்பது என்பது நல்ல யோசனையாகத் தோன்றலாம். ஆனால் உணவுக் கட்டுப்பாடு ஆராய்ச்சியில், நீண்ட காலமாக சோடா குடிப்பவர்களைப் பற்றி வேறு விதமாக சொல்கின்றனர்.
ஏனெனில் டயட் சோடா குடிப்பதால், எண்ணற்ற ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இங்கு நீங்கள் டயட் சோடா குடிப்பதை நிறுத்துவதற்கான 6 காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன:

உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும்
செயற்கை முறையில் இனிப்பூட்டப்பட்ட பானங்கள் அதிக அளவு இனிப்பு சுவையைக் கொண்டிருக்கும்; உணர்வுகளை சோர்வடைய செய்வதுடன் அதே அளவு (அல்லது அதிக) இன்சுலினை தூண்டச் செய்யும். இது உடலில் உள்ள கொழுப்பை சேமிக்க செய்வதுடன், உடல் எடையை அதிகரிக்கும். மேலும் டயட் சோடா குடிப்பவர்கள், அதனை அதிக அளவில் குடிக்க முனைகின்றனர். இது மேலும் உடல் எடையை அதிகரிக்க வழி செய்கின்றது.

மன அழுத்தத்தை உண்டாக்கும்
அமெரிக்க அகாடமி ஆப் நியூராலஜி வழங்கிய ஆய்வின் படி, டயட் சோடா அருந்தாதவர்களுடன் ஒப்பிடும் போது, 10 வருடங்களுக்கு மேல் தினசரி அடிப்படையில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட டயட் சோடா குடித்தவர்களில், 30 சதவீதம் பேர் மன அழுத்தம் அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இனிப்பான பானங்களை அருந்தும் போதும் இந்த நிலை உள்ளது. ஆனால் டயட் சோடாக்களுடன் ஒப்பிடும் போது இதில் ஆபத்துக் குறைவு.

அஸ்பார்டேம் தொடர்பான சுகாதாரப் பிரச்சனைகள்
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பெறும் புகார்களில் 75 சதவீதம் புகார்கள் செயற்கை இனிப்பூட்டி அஸ்பார்டேம் குறித்ததாகும். மற்ற வேதியல் சார்ந்த இனிப்பூட்டிகளில் அபாயங்கள் இருந்தாலும் அஸ்பார்டேம் மிகவும் ஆபத்தானதாகும். 90 அறிகுறிகள் கொண்ட கிறுகிறுக்க வைக்கும் ஒரு பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு சிறிய மாதிரி கொடுக்கப்பட்டுள்ளது: மைக்ரைன், வலிப்பு, பார்வை பிரச்சனைகள், தெளிவற்ற பேச்சு, நினைவாற்றல் இழப்பு, கவலை, மூட்டு வலி, தசை பிடிப்பு மற்றும் தூக்கமின்மை.

புன்னகையை அழிக்கும்
டயட் சோடாவில் உள்ள கார்பனேற்றம் மற்றும் ரசாயனங்களால் ஏற்படும் அமில விளைவால் உங்கள் புன்னகையை அழிக்க முடியும். தீவிர கோகோயின் மற்றும் மெத் பயனர்கள் பதிவிட்ட பல் சேதத்திற்கு இணையான அளவு சோடா குடிப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர் என சில ஆய்வுகள் கூறுகிறது.

டைப் 2 சர்க்கரை நோயை அதிகரிக்கச் செய்யும்
மினசோட்டா பல்கலைக்கழக ஆய்வின் படி, ஒரு நாளைக்கு ஒரு கேன் டயட் சோடா என்ற அடிப்படையில் குடித்து வரும் போது, டைப் 2 சர்க்கரை நோய் மற்றும் மெட்டபாலிக் சிண்ட்ரோம் ஏற்படும் இடர்பாடு 36 சதவீதமாக உள்ளது. இதனோடு சேர்த்து, அதிகரிக்கும் குளுகோஸ் மற்றும் கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இடுப்பு சுற்றளவு பெருக்கம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.

இதயப் பிரச்சனைகளை அதிகரிக்கிறது
ஒரு நாளைக்கு ஒரு டயட் சோடா என்ற அடிப்படையில் எடுத்துக் கொள்வது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் ரத்த நாளங்களில் மரணம் ஆகியவற்றை உண்டாக்கும் அபாயத்தை 43 சதவீதம் கொண்டுள்ளதாக மியாமி, கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே கலோரிகளை குறைப்பது என வரும் போது, முடிந்தவரை இயற்கையாக இருக்க முயற்சி செய்யவும்.



Click it and Unblock the Notifications
