Latest Updates
-
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
முடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்!!!
முதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும்) பல நன்மைகளை அளிக்கும். ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும் யோகா உதவுகிறது. இதனால் முடி உதிர்தலும் குறையும்.
அதிலும் முன் பக்கமாக குனிந்து செய்யப்படும் அனைத்து ஆசனங்களும் தலைப்பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் மயிர்க்கால்கள் புத்துணர்வைப் பெறும். இதனால் ஒரு கட்டத்தில் தலை முடியில் நல்ல மாற்றத்தை காணலாம். அப்படிப்பட்ட ஆசனங்கள் சிலவற்றை இப்போது காணலாமா...
சுவாரஸ்யமான வேறு: நடிகைகள் ஸ்லிம்மாக இருப்பதற்கான இரகசியங்கள்!!!

அதோமுகா ஸ்வாசனா (Adho mukha Savasana)
கீழ்புற நாய் இரு நிலை தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும் சைனஸ் மற்றும் பொதுவான சளிக்கும் இது நல்லது. மன ரீதியான சோர்வு, மன உளைச்சல் மற்றும் தூக்கமின்மை போன்றவைகளுக்கும் இது உதவும்.

உத்தனாசனா (Uttanasana)
தலைச் சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதை தவிர, முன்பக்கமாக நிற்கும் இரு நிலை அயர்ச்சி மற்றும் சோர்வை நீக்க உதவும். இந்த இருநிலை மாதவிடாய் அரீகுரிகலில் இருந்து நிவாரணியை அளிக்கும். இது போக செரிமானத்தையும் மேம்படுத்தும்.

வஜ்ராசனா (Vajrasana)
இதனை வைர இருநிலை என்றும் அழைக்கின்றனர். மற்ற ஆசனங்களை போல் அல்லாமல், உணவருந்திய உடனேயே இதனை செய்யலாம். முன்பக்கமாக குனிந்து செய்யப்படும் இந்த ஆசனம், தலைச்சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். சிறுநீரக கோளாறுகளை நீக்க, உடல் எடையை அதிகரிக்க, செரிமானத்தை மேம்படுத்த, வயிற்றில் வாய்வை குறைக்கவும் இது உதவும். நல்ல செரிமானம் உடலில் சமநிலையை உருவாக்கும். மேலும் முடி உதிர்தலையும் குறைக்கும்.

கபல்பட்டி பிராணாயம் (Kapalbhati Pranayam)
உங்கள் மூளை அணுக்களுக்கு அதிக ஆக்சிஜென் அளிக்க இதவுகிறது இந்த பிராணாயம். இதனால் நரம்பியல் அமைப்பிற்கு நல்லது. மேலும் உடலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கவும் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயை எதிர்த்து போராடவும் இது உதவும். இது போக உடலில் உள்ள சமநிலையை மீட்டு தருவதால் முடி உதிர்தல் குறையும்.

பவன்முக்தாசனா (Pawanmuktasana)
இது வாயுவை குறைத்து செரிமானத்தை மேம்படுத்தும். பின்புற தசைகள் வலுவடையும். மேலும் வயிறு மற்றும் பின்புற கொழுப்புகளை குறைக்கும். செரிமானம் ஒழும்காக நடக்கும் போது சமநிலை மேன்ம்படும். இது முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

சர்வங்காசனா (Sarvangasana)
தைராய்டு சுரப்பிகளுக்கு புத்துணர்வு அளிக்க உதவும். இதனால் சுவாசம், செரி்மான உளப்புகள், இனப்பெருக்க உறுப்பு மற்றும் நரம்பியை அமைப்பின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும். தலையை குனிந்து செய்யப்படும் இந்த ஆசனத்தால், தலைச் சருமத்திற்கு இரத்த ஓட்டம் நன்றாக கிடைக்கும். இதனால் முடி உதிர்தல் குறையும்.



Click it and Unblock the Notifications