ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான முதன்மையான 10 காரணங்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

தங்கள் குடும்பம் முழுமை அடைவதற்கு தங்களுக்கு குழந்தைகள் இருக்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு தம்பதியினரும் விரும்புவார்கள். ஆனால் சிலருக்கோ கருவுறுவது பிரச்சனையாகி போகும். குழந்தைகள் என்பது அவர்களின் வாழ்க்கையில் நிறைவேறாத கனவாகி போகும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், ஆண்கள் முதலில் செய்வது தங்கள் மனைவியை ஒரு பெண் மருத்துவரிடமும் பரிசோதிக்க செய்வதே. ஒரு வேளை, அவர்களிடம் பிரச்சனை இருந்தால் தீர்வுகள் கிட்டும்.

ஆனால் தங்கள் மனைவியிடம் எந்த குறையும் இல்லையென்றால், அவர்களை சோதனை செய்வது தான் அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும். ஆனால் பல ஆண்கள் இதனை விரும்புவதில்லை.

ஆண்களின் மலட்டுத் தன்மையை சரிசெய்யும் காய்கறிகள்!!!

பல ஜோடிகளுக்கு கருவுறுவதில் கஷ்டங்கள் ஏற்படுவதற்கு பலதரப்பட்ட காரணங்கள் உள்ளது. அதில் மிக முக்கியமானது தான் மலட்டுத்தன்மை. இதனை பல ஆண்களும் ஒத்துக் கொள்ள மறுப்பார்கள். ஆண்களின் கருவுறும் தன்மை அவர்களின் கௌரவத்தை சான்றது. இருப்பினும் இந்த நிலை மாறி வருகிறது. இப்போது பல ஆண்கள் தாங்களாகவே முன் வந்து தங்களை பரிசோதித்து கொள்கின்றனர்.

மலட்டுத் தன்மையை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!!!

பல காரணங்களால் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. உடலில் உள்ள ஏதாவது ஒழுங்கின்மையின் காரணமாக இது ஏற்படலாம். அதற்கு போதிய மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். மோசமான விந்தணு தரம், குறைவான விந்தணு எண்ணிக்கை, மெதுவான விந்தணுவின் அசைவு, தோற்று அல்லது விறைக்கும் செயல் பிறழ்ச்சி போன்ற காரணங்களால் இது ஏற்படலாம். வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற இதர காரணங்களாலும் மலட்டுத்தன்மை ஏற்படும். ஆனால் இதனை கட்டுப்படுத்தி தவிர்க்கலாம்.

கருவுறுதலில் பிரச்சனையை ஏற்படுத்தும் பி.சி.ஓ.எஸ் பாதிப்பை விரட்டும் 15 உணவுகள்!!!

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு பல வாழ்க்கை முறை காரணங்கள் உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து இவைகளை தவிர்த்திடலாம். இப்போது ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான காரணங்களைப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல்

புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் பல. அதனால் ஏற்படும் தீமையான தாக்கங்களில் ஒன்று தான் மலட்டுத்தன்மை. புகையிலையை புகைக்காத ஆண்களை விட அதை புகைப்பவர்களுக்கு விந்தணுவின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். புகைப்பிடிப்பவர்கள் மட்டுமல்லாது உடனிருப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள். நீங்கள் புகைப்பிடிக்கவில்லை என்றாலும் கூட, அந்த புகையை சுவாசித்தால், அது உங்களின் மலட்டுத்தன்மையை பாதிக்க கூடும்.

போதைப் பொருட்களை பயன்படுத்துதல்

போதைப் பொருட்களை பயன்படுத்துதல்

போதைப் பொருட்கள் என வந்து விட்டால் அது எதுவாக இருந்தாலும் கெட்டதே. அதனால் உண்டாகும் எதிர்மறை தாக்கங்கள் பல. போதைப் பொருட்களை பயன்படுத்தி வந்தால், உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கைகள் குறைந்து அதன் தரத்தையும் கூட பாதிக்கும்.

மதுபானம்

மதுபானம்

தற்போதைய நவீன சமுதாயத்தில் மதுபானம் இல்லாத கூட்டங்களே கிடையாது எனலாம். அளவாக குடித்தால் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. ஆனால் அளவை மீறும் போது ஆண்களின் இனப்பெருக்க அமைப்பு வெகுவாக பாதித்து விடும்.

ஊட்டச்சத்தின்மை

ஊட்டச்சத்தின்மை

ஆண்களின் உடலில் உள்ள மற்ற செயல்பாடுகளை போல் கருவுறுதலும் நேரடியாக ஊட்டச்சத்துடன் தொடர்பில் உள்ளது. ஒரு ஆண் தினமும் 3 வேளைகளும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால், அவரால் ஆரோக்கியமான தரத்துடன் விந்தணுவை உற்பத்தி செய்ய முடியும்.

உடல் பருமன்

உடல் பருமன்

இந்த உலகமே உடல் பருமன் பிரச்சனையால் வெகுவாக பாதித்துள்ளது. குழந்தைகளும் கூட இந்த பிரச்சனையால் பாதித்து வருகின்றனர். அதிகமான உடல் எடையால், உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால் விந்தணுவின் தரமும் எண்ணிக்கையும் பாதிக்கப்படுகிறது.

உணர்ச்சி ரீதியான அழுத்தம்

உணர்ச்சி ரீதியான அழுத்தம்

நல்ல மனநிலை நம் உடலில் நல்ல ரசாயனங்களை சுரக்க செய்யும் என்பதை நாம் படித்திருப்போம். அதே போல் கெட்ட மனநிலை கெட்ட ரசாயனங்களை சுரக்க செய்யும். உணர்ச்சி ரீதியான அழுத்தத்தால் அவதிப்படும் போது, நம் உடலில் கெட்ட ரசாயனங்கள் சுரக்கும். இது ஆண்களின் கருவுறுதல் அமைப்பை நேரடியாக பாதிக்கும். இதனால் விந்தணுவின் எண்ணிக்கை குறைந்து, ஆணுறுப்பு விறைப்பதில் பிரச்சனைகள் ஏற்படும். விந்தணுவின் தரமும் பாதிப்படையும்.

அதிகமாக சைக்கிள் ஓட்டுவது

அதிகமாக சைக்கிள் ஓட்டுவது

சைக்கிள் ஓட்டுவது சந்தேகமே இல்லாமல் உடலுக்கான மிகச்சிறந்த உடற்பயிற்சியே. ஆனால் அது அதிகமாக போனால் ஆண்களின் கருவுறுதல் தன்மையை பாதித்து விடும். ஆண்விதைகளுக்கு பின்னால் உள்ள பகுதியில் தொடர்ச்சியான அழுத்தம் தந்தால் உணர்வின்மை ஏற்பட்டு விடும்.

ரசாயன வெளிப்பாடு

ரசாயன வெளிப்பாடு

பூச்சிக்கொல்லிகள், பெயிண்ட் சம்பந்தப்பட்ட பொருட்கள், பென்சீன் போன்ற பல வகையான ரசாயனம் உள்ள சூழலில் வேலைப் பார்க்கும் ஆண்களுக்கு விந்தணுவின் எண்ணிக்கையை குறைக்கும்.

உலோக வெளிப்பாடு

உலோக வெளிப்பாடு

தொடர்ச்சியாக கனரக உலோகங்களின் மத்தியில் இருக்க நேரிட்டால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை உண்டாகும்.

ஆண்விதைகள் அதிக சூடாவது

ஆண்விதைகள் அதிக சூடாவது

வெந்நீரில் குளித்தல், ஆவி குளியலில் ஈடுபடுதல் போன்ற பல சூழ்நிலைகளால் ஆண்களின் விதைகள் அதிக சூட்டுக்கு உள்ளாகும். அதே போல் இறுக்கமான உள்ளாடை அணிவது மற்றும் தொடர்ச்சியாக மடிக்கணினியை பயன்படுத்துதல் போன்றவைகளும் ஆண்களின் விதைகளை சூடேற்றி, விந்தணுக்களின் எண்ணிகையை பாதிக்கும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 10 Reasons For Infertility In Men

There are many lifestyle reasons that can cause infertility in men. These can be controlled by following a healthy way of life.
Subscribe Newsletter